21-8-2013 காலை 10.30 மணிக்கு தோழர் தமிழ்மணி தலைமையில் ஒலிக்கதிர் பொன்விழா கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது.தோழர் கணேசன் குடந்தை மாவட்ட செயலர் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் பங்கேற்ற பொன்விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் பாண்டி காமராஜ், கடலூர் ஸ்ரீதரன், கோவை ராபர்ட் ,குன்னூர் ராமசாமி, சிவில் ஆறுமுகம், CGM அலுவலகம் மனோஜ், வேலூர் சென்னகேசவன், மதுரை லட்சம், விஜயரெங்கன், சேலம் பாலகுமாரன் ,வெங்கட், கஜேந்திரன் ,குடந்தை விஜய் ஆரோக்யராஜ்,மற்றும் தோழியர் லைலாபானு,திருநெல்வேலி சங்கர் ,தஞ்சை நடராஜன் ஆகியோர்கள் பொன்விழா சிறப்பாக நடத்திட தங்களது கருத்தை பதிவு செய்தனர் . 50 வது பொன்விழாவை நவம்பர் மாதத்தில் கடலூரில் சிறப்பாய் நடத்திட முடிவு செய்யப்பட்டது.இறுதியாக தோழர் R K ,குடந்தை ஜெயபால்
மற்றும் மாநிலச்செயலர் பட்டாபி ஆகியோர் நிறைவு செய்து பேசினார். தோழர் R K ரூபாய் 1000/ கொடுத்து பொன்விழா வசூலை தொடக்கி வைத்தார் .
தோழர் T .P ஜோதி மாவட்ட தலைவர் தலைமையில்
மாலை சங்கக்கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது .சங்கஅலுவலகத்தை தோழர் R K திறந்து வைத்தார், தலைவர்கள் திருஉருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. மூத்த தோழர்கள் இசக்கி ,தனபால்,
குடந்தை மாலி, V S ,அதிகாரிகள்,மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .DGM குத்து விளக்கு ஏற்றினார்.மாநிலச்செயலர் பட்டாபி சங்க பலகையை திறந்து வைத்தார் .TEPU சங்கம்,BSNLEU பரிசு பொருள் கொடுத்து கௌரவித்தனர். மொத்தத்தில் விழா ஏற்பாடும் ,நிகழ்வும் குடந்தையின் பெயரை மேன்மை படுத்தியது.
குடந்தை மாவட்ட சங்கத்திற்கு நமது நெஞ்சுநிறை நன்றி.தோழர் கலியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கூட்டத்தில் தோழர் பட்டாபி,RK ,தமிழ்மணி, ஜெயபால் உற்சாகமாக உரை நிகழ்த்தினர் . கலந்து கொண்டோர் அனைவரும் உற்சாகமுடன் சென்றனர்.
K .நடராஜன் MA ,TTA /PSM
ACS /NFTE -BSNL
தஞ்சாவூர்.
முதலாய் ... முத்தாய்ப்பாய் வெளியிட்டமைக்கு நன்றி
ReplyDeleteவிஜய் குடந்தை
தஞ்சை தோழர் நடராஜன் அவர்களே உங்களின் குடந்தை நிகழ்ச்சி விரிவுரை நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.மிக்க மகிழ்ச்சி.நன்றி D Ravichandran ADS/NFTE/Cuddalore.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete