சாம்பல்களும் ...
பீனிக்ஸ் பறவையும் !
தொடங்கியது செயற்குழு ...சிறப்பான ஏற்பாடுகளுடன் !
வரவேற்புரை , அஞ்சலியுரை முடிந்த நிமிடம்
கோவை சுப்பராயன் ... சூப்பர் சுப்பரயனாய்
தொடக்கி வைத்தார் ...வித்திட்டார்... கலவர காட்சிக்கு!
உடன் துணை புரிந்தார் கோவை ராமகிருஷ்ணன்.
பண்பாய் ...பக்குவமாய் .. பதில் தந்தார்... மாநில செயலர்
எதிர் வினையாளர்க்கு !
ஏற்க மறுத்தனர் முடுக்கிவிடபட்ட எந்திரன்கள் !
மீண்டும் ... கோரிக்கை விடுத்தார் ... பட்டியலிட்டார் மாநில செயலர் !
நம் முன் உள்ள கடமைகளை ...
டெல்லி பேரணி - மார்ச் 17 வேலை நிறுத்தம் குறித்து
செயற்குழு திட்டமிட்டு முடித்ததும் ...
தொடுத்திடுங்கள் கேள்வி கணைகளையென !
உருக்கமாய் கேட்டு ...உறுதியும் அளித்தார் !
ஏற்க மறுத்தனர் அந்த 3 பேர் !
அமைப்பு விதி குறித்த சவடாலுக்கு
தலைவர் லட்சம் ... கோடி ரூபாய் தகுதி கேள்வியொன்றை
தொடுத்தார் ...
விவாதம் ... தொடர்ந்த தருணம்
திடுமென ...கோஷத்தோடு .. உள் நுழைந்தனர்
சென்னை தொலைபேசி தோழர்கள் !
தமிழ் மாநில செயற்குழுவில் ... சென்னை தொலைபேசி
தோழர்கள் அத்துமீறிய நுழைவு
நியாயமாவென ? நயமாய் கேட்டார் மாநில செயலர் !
பதிலேதுமில்லை ...
மியூசியத்து மந்திரத்தால் கட்டுண்டவர்களிடம் !!!
அப்பொழுது .. தான் அந்த செய்தி வந்தது
CGM செயற்குழுவை வாழ்த்திட
செயற்குழு அரங்கு நெருங்கிவிட்டாரென !
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது ...
கோரிக்கை வைத்தார் ...மாநில செயலர்
" அப்படியே ... அமருங்கள் ... தோழர்களே
CGM உரை நிகழ்த்தி சென்றவுடன் ... தொடர்ந்திடுங்கள்
உங்கள் முழக்கத்தையென !
சென்னை தோழர்கள் ...செவிமடுக்கவில்லை ... கடுகளவும் !
கூச்சல் ... தவிருங்கள் ..தோழர்களே !
மேற்புறம் மாற்றுதிறனாளி கல்வி கூடம் ... +2 தேர்வு தயாரிப்பு வேறு
அமைதியான கத்தோலிக்க பாரம்பரிய சேவை மையம்
சூழல் உணர்ந்து அமைதி காத்திடுகவென ...மன்றாடினார் முரளி
உதாசீனபடுத்தி ... தொடர்ந்தார்கள்
மியூசியத்து ... மியூசிக்கை !
அத்துமீறல் தொடர்ந்தது பாஞ்சாலி சேலையென !
CGM வந்தார் .. பேசிட அனுமதிக்கவில்லை மு(ட)ழக்கவாதிகள் !
மண்டபத்து பொறுப்பாளர் ...மன்றாடினார் அமைதி காக்க
அவர்களே ...வேறு வழியின்றி அழைத்தனர் காவல்துறையை !
நமது தோழர்களும் ... சேர்ந்து கூட்டத்தை வெளி தள்ளினோம்
வெளியேற்றபட்டனர் ... சென்னை தொலைபேசி தோழர்கள் !
நமது தோழர்களும் ... சேர்ந்து கூட்டத்தை வெளி தள்ளினோம்
வெளியேற்றபட்டனர் ... சென்னை தொலைபேசி தோழர்கள் !
அரங்கின் வாசலில் தொடர்ந்தனர் ...
செத்து போன கல்லூரியின் ... இத்துப் போன ... கட்டளையை
செத்து போன கல்லூரியின் ... இத்துப் போன ... கட்டளையை
சென்னை தொலைபேசி தோழர்கள் !
மாற்றுதிறனாளி மாணவசெல்வங்களின்
தேர்வு கண் முன் நிற்க ...மனம் மரித்து போனவர் அல்ல நாமென !
தீர்மானம் இயற்றி ... முடித்து கொண்டோம் செயற்குழுவை !
இத்தனையும் ... அரங்கேறிய பொழுது
செயற்குழு மேடையில் ...வலது ஓரத்தில் ... ஓர் உருவம்
அமைதியாய் ...சலனமில்லாது ...வேடிக்கை பார்த்தது ???
ஊர் வந்து சொன்னோம் ... ஓர் தோழனிடம்
அவரை ... அந்த மௌனம் காத்த தோழனை பற்றி ...
நெஞ்சில் சுருக்கென தைக்க சொன்னான் அந்த தோழன் ...
" ஜபல்பூர் மாநாட்டில் பனியன் விற்று கொண்டிருந்தவருக்கு
சம்மேளன செயலர் பதவி தந்த ... உங்களுக்கு
இதுவும் வேண்டும் ... இன்னமும் வேண்டுமென !!!
மொத்தத்தில் ...
செயற்குழுவை முடக்க நினைத்தவர்கள் ... முடங்கி போனார்கள்
முடக்கி விட்டோம் என கொக்கரிக்கும்
அருங்காட்சியக செயல்வீரர்களுக்கு
தமிழ் மாநிலம் வீறுகொண்ட லட்சிய பயணத்தின்
வரலாறுக்கு சொந்தமானது ...
நண்டுகளின் நாட்டியமும் ..ஊளைகளும் ...
எங்கள் கவனம் சிதைக்காது !
சிறிய நூல்கண்டா .. சிறைபடுத்துமென ?
எடுத்துரைத்த செயற்குழு .
வாழ்க !வெல்க !தொடர்க !
வாழ்க !வெல்க !தொடர்க !
No comments:
Post a Comment