மீத்தேன் எதிர்ப்பியக்கம்
தர்ணா முழக்கப் போராட்டம்.
குடந்தை - 17-02-2015.
சோறுடைத்த தஞ்சை மண்ணை
சுடுகாடாய் மாற்ற எண்ணும்
மத்திய அரசின் திட்டத்தை
மீத்தேன் வாயு திட்டத்தை
கடுமையாக எதிர்த்திடுவோம்!
பசி தீர்க்கும் தஞ்சை மண்
பாலைவனம் ஆவதா!
கூடாது! கூடாது!! ஒரு போதும் கூடாது.
பயிரும், உயிரும் செழித்து வளரும்
தஞ்சை, நாகை, ஆரூரை
வாழ, வளர, வகையற்ற
பொட்டல் காடாய் மாற்றிட வைக்கும்
மீத்தேன் திட்டம் தேவைதானா?
உலகுக்கே உணவளிக்கும்
வல்லமை பெற்ற தஞ்சையை
உணவுக்காக கையேந்த வைக்கும்
மீத்தேன் திட்டம் தடுத்திடுவோம்!
காசுக்காக, கூலிக்காக
நாட்டு நலனை அடகு வைத்து
அந்நிய நாட்டு கம்பெனிக்கு
பட்டுக்கம்பளம் விரிக்கின்ற
மத்திய அரசைக் கண்டிக்கின்றோம்.
கண்ணை விற்று சித்திரம் வாங்கும்
மத்திய அரசின் திட்டத்தை
மீத்தேன் வாயு திட்டத்தை
அடியோடு தடுத்திட
உணர்வோடு போராடுவோம்!
உறுதியோடு போராடுவோம்!
எண்ணற்ற சக்திகள்
எழுச்சியோடு போராடிய
மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம்
வெல்லட்டும்! வெல்லட்டும்!!
தேசமெங்கும் பரவட்டும்.
24 லட்சம் ஏக்கர் நிலங்கள்
உப்பாய் நஞ்சாய் மாறுவதை
பார்த்திருப்போமா! பொறுத்திருப்போமா!
எவனோ எங்கோ கொள்ளையடிக்க
பாரதம் என்ன திறந்த வீடா!
6 லட்சம் கோடி எடுத்து
5000 கோடி தருவானாம்.
பஞ்சம் பசி போக்கவல்ல
தஞ்சையை தாரை வார்ப்போமாம்.
நடப்பது ஆர்ப்பாட்டமல்ல!
ஜீவா மரணப் போராட்டம்.
உணர வேண்டும் மதிய அரசு!
தேசபக்த உணர்வோடு
நாங்கள் நடத்தும் போராட்டம்
தர்ணாவோடு நில்லாது.
ஆர்ப்பாட்டத்தோடும் நில்லாது!
தேசமெங்கும் வேர்பிடித்து
எரிகின்ற போராட்டமாக
உக்கிரமான போராட்டமாக
மாறும் என்று எச்சரிக்கின்றோம்!
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
போராளி மேதாபட்கர்
சமூக நல ஆர்வலர்கள்
மாணவர்கள், ஆசிரியர்கள்
இடதுசாரி சக்திகள்
இவர்களோடு நாங்களும்
இணைந்து கரம் கோர்க்கின்றோம்!
மத்திய அரசே! மத்திய அரசே!!
வாழும் மனிதனை அகதியாக்கும்
மீத்தேன் திட்டத்தைக் கைவிடு!
தேசத்தைக் காத்திடு!
No comments:
Post a Comment