தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, February 21, 2013

பிப்ரவரி 20 - 21 வேலை நிறுத்தம் 

முதல் நாள் வேலை நிறுத்த பங்கேற்பு விபரம் 

மொத்த ஊழியர்கள்:              905
பணியில்:                                   260
விடுப்பில்:                                  405
வேலைநிறுத்தத்தில்:         240     (26.52 %}

     தேசம் தழுவிய மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

Tuesday, February 19, 2013

Sunday, February 17, 2013

Friday, February 15, 2013

NFTE  -  BSNL 
தஞ்சை மாவட்டம்  

தஞ்சாவூர் மாவட்டச் செயற்குழு 

இடம்: 
நகராட்சி நடுநிலைப்பள்ளி , பெரியகடை வீதி, பட்டுக்கோட்டை.

நாள்:
16-02-2013, சனிக்கிழமை காலை 09:30 மணி முதல் மாலை 6 மணி வரை.

அருமைத் தோழர்களே!
     அனைவருக்கும்  வணக்கம்!   நமது மாவட்டச் செயற்குழு தலைவர்   பிரின்ஸ் தலைமையில் மேற்கண்டவாறு நடைபெறவிருக்கிறது.  பட்டுக்கோட்டை தொலைபேசி இணைப்பகத்திற்கு அருகாமையில்தான் செயற்குழு நடைபெறுகிறது.  காலை ஒன்பதரை மணிக்கு தொலைபேசி நிலையத்தில் கொடியேற்று நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு செயற்குழுவை துவக்குகிறோம். நமது மாநிலத்  துணைச் செயலர் தோழர். K. நடராஜன் அவர்களும், மாநில மகளிர்   அமைப்பு கன்வீனர் தோழியர் A. லைலாபானு அவர்களும்  சிறப்புரையாற்றுகின்றனர்.  அனைத்து மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்களும், கிளைச் செயலர்களும்,  தோழர்களும் தவறாது பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்.  

                                       தோழமையுடன்,

       S . பிரின்ஸ்    T . பக்கிரிசாமி        T . பன்னீர்செல்வம்.
         தலைவர்.             பொருளர்.                       செயலர்.
                                     தஞ்சை மாவட்டம்.
 

Thursday, February 14, 2013

தோழர் குப்தா நினைவஞ்சலிக் கூட்டம் 

     11-02-2013 அன்று கிளைச் செயலர் தோழர் சுந்தரராஜன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.   AIBSNLEA மாநிலச் செயலர் தோழர் வீரபாண்டியன் அவர்கள் மூன்று சக்கர சைக்கிளை ஒரு மாற்றுத் திறனாளிக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

     மாற்றுத் திறனாளிக்கான  வாகன உதவிக்கு பெரிதும் முயற்சி செய்தும்  பட்டுக்கோட்டை கோட்டம் சார்பாக இந்த  நினைவஞ்சலி சிறப்புக் கூட்டம் நடத்திட உதவிகரமாக இருந்த தோழர். R. செல்வகுமார் பாராட்டப்பட்டார்.  

     தொழிற்சங்கப் பிதாமகர்கள் ஜெகன் - குப்தா நினைவாக மாற்றுத் திறனாளிக்கு  உதவும் வகையில் சைக்கிள் வழங்கப்பட்ட அந் நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.   

     முத்துப்பேட்டையிலிருந்து தோழர் சிவசங்கரன் பங்கேற்று உரையாற்றினார்.

         தோழர் N.V அவர்கள் ஜெகன் - குப்தா நினைவலைகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.   பிப்ரவரி 20, 21 வேலை நிறுத்தம் பற்றியும் விளக்கிப் பேசினார்.

     கூட்ட  நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் கீழே!

Tuesday, February 12, 2013

Monday, February 11, 2013

 

  சிறப்பான ஒங்கோல்  தேசிய செயற்குழு 
அகில இந்திய தலைவர் தோழர்.இஸ்லாம் தேசியக்கொடியை ஏற்றி வைக்க, மூத்த  தோழரும் முன்னாள் ஆந்திர மாநிலத்தின் செயலாளருமான மதுசூதனராவ் சம்மேளனக்கொடியை ஏற்றி வைத்தார். தோழர்.குப்தாவின் நினைவு ஸ்தூபிக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்திவிட்டு அரங்கினுள் நுழைந்தனர்.
தோழர்.மதுசூதனராவ் தனது 45 ஆண்டுகால குப்தாவுடனான அனுபவங்களை நினைவு கூர்ந்து அஞ்சலி உரை ஆற்றினார்  


பொதுச் செயலர், துணைப்பொதுச்செயலர் உரைக்குப்பின்னர் மாநிலச் செயலர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

அனைவராலும் கவனிக்கப்பட்ட நமது மாநிலச் செயலர் பட்டாபியின் சிறப்பான உரையிலிருந்து ....

அங்கீகாரம் இல்லாத நிலையிலும் நமது சங்கம் கடந்த 2 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, மத்திய சங்கத்திற்கு பாராட்டினை தெரிவித்தார்.

·       இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.குருதாஸ் தாஸ் குப்தா, AITUC செயலாளர் தோழர். G.L.தார் ஆகியோரின் முன்முயற்சியாலும் பொதுச்செயலர், தலைவர் ஆகியோரின் தொடர் முயற்சியாலும் BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்கியது.
·      டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் DOT காலத்திற்கான பென்சனை பெற்றுத் தந்தது.
·      பதவி உயர்வின்போது மறுக்கப்பட்ட HRA பெற்றுத் தந்தது.
·      அதிகாரிகளைவிட மேம்பட்ட ஊதிய நிர்ணயமுறை
·      பெண் ஊழியர்கள் MRS திட்டத்தில் தனது பெற்றோர் அல்லது கணவரது பெற்றோரை விருப்பத்தின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ள உத்தரவு.
·      விடுப்பை காசாக்குதல் பணத்திற்கு வருமான வரி விலக்கு பெற்றுத் தந்தது.
·      10 வருட சேவைக்குப்பின் முழு ஓய்வூதியம்
·      கருணை அடிப்படை பணிக்கு 3வருட நிபந்தனை நீக்கம்.
·      2007ல் பதவி உயர்வுக்குப்பின்னர் விருப்ப அடிப்படையில் புதிய ஊதிய நிர்ணயம்
·      கட்டாய மாற்றலில் சென்றவர்கள் திரும்பி வர விருப்ப மாற்றல் வழங்க புதிய முறை.

நாம் வெற்றிபெற ஒவ்வொரு மாநிலச் சங்கமும் எவ்வளவு வாக்குகளை பெறவேண்டும் என புள்ளி விபரங்களுடன் வேண்டுகொள் விடுத்தார்.

நாம் அங்கீகாரத்திற்குப்பின்னர் கவனம் செலுத்த வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

·          SC/ST ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 1 ஆண்டு சலுகை.
·          கருணை அடிப்படை பணிக்கு SC/ST ஊழியர்களுக்கு 55 புள்ளிகளில் தளர்வு.
·          நிரப்பப்படாத SC/ST காலியிடங்களுக்கு சிறப்பு ஆளெடுப்பு தேர்வு
·          பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு
·          மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல குழந்தை பராமரிப்பு விடுப்பு
·          B.E, M.B.A  படித்தவர்களுக்கு 10% சிறப்பு ஒதுக்கீடு
  


இறுதியாக பொதுச்செயலரும் தலைவரும் நம்பிக்கை தரக்கூடிய எழுச்சியுரையால் உற்சாகத்துடன் நிறைவுபெற்றது விரிவடைந்த தேசிய  செயற்குழு.

banner


Tuesday, February 5, 2013

                A successful National Executive of NFTE BSNL at Ongole: The National Executive Committee of NFTE BSNL held at Ongole on 4th and 5th of February 2013 has appealed to SNATTA and SEWA-BSNL to forge alliance with NFTE BSNL and face the 6th membership verification together to succeed the demands of BSNL employees and those of TTAs & SC/ST employees.
In the National Council, Com.Pattabhi made his mark as ever with an inspiring speech which was received well by the participants. Other Circle Secretaries have also come up with ideas on the forthcoming Membership verification born out of their experience. Com Kamaraj, Pondicherry and Com.Shankar, Thirunelveli spoke on the issues faced by our employees and Membership verification.
As always, Com Islam and Com.Chandeshwar Singh immensely contributed to the National Council's decisions and deliberations. The council concluded with a fiery speech by Com C.Singh, GS, NFTE.

Sunday, February 3, 2013

"ஊழியர் பிரச்னையை விவாதிக்கச் சென்ற ஒரு மாநிலச் செயலரிடம், ஒரு CGM, " Stop this Junk, don"t waste my time" என்று   ஆணவமாகப் பேசி உள்ளார். அந்த மாநிலச் செயலரோ எதுவும் நடக்காதது போல மௌனமாக வெளியேறி விட்டார்.
அந்த CGMன் ஆணவப் பேச்சை 
     வன்மையாகக் கண்டிக்கிறோம் !"

 இப்படி ஒரு செய்தியை கோவை வெப் சைட் தலையும் இல்லாமல் வாலும்  இல்லாமல் முண்டமாக  வெளியிட்டிருக்கிறது.   
அது என்ன ஒரு மாநிலச் செயலர்.
யார் அவர் என்பது  நமது கேள்வி?
அடுத்து  அந்த மாநிலச் செயலரோ எதுவும் நடக்காதது போல வெளியேறி விட்டார் என்று எழுதி இருக்கிறார்கள் 
எந்த மாநிலச் செயலர் என்பதும் நமது கேள்வி?

அடுத்து ஆத்திரத்தின் உச்சியில் CGM,
அமைதியாகிப்போன மாநிலச் செயலர் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
CGM ஐச் சந்திக்க பல மாநிலச் செயலர்கள் செல்வார்கள்.  நீங்கள்  எந்த மாநிலச் செயலரைச் சொல்கிறீர்கள் என்பதும் எமது கேள்வியாக இருக்கிறது. 

தெளிவா சொல்லாம CGM க்கு வன்மையான கண்டிப்பு வேறு!

இம்மாதிரி செய்தி போட்டால் தேவையில்லாத குழப்பம்தான் மிஞ்சும் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.
இது நாள் வரை தமிழகம் வெளிப்படையாகப் பேசவே நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இங்கே கிசு கிசுக்களுக்கு வேலை இல்லை.
டீக்கடைப் பெஞ்சு பேச்சை நாம் பேச வேண்டாம்.


செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR