தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 29, 2014

WIMAX

BWA (Broadband Wireless Access ) தமிழ்நாட்டில் 20,000 இணைப்புகள் உள்ளன .
BWA  ஸ்பெக்ட்ரத்தை surrender செய்து அதற்கான தொகையை BSNL திரும்பப்பெற  உள்ளது. இதன்மூலம் தமிழகத்திற்காக தொகை 2000 கோடி ரூபாய் வர உள்ளது .wimax subscriberகளுக்கு wimax இணையான சேவையை தடையின்றி தந்திட வேண்டும் 


இலங்கை தமிழர் உரிமை காக்க /உயிரை காக்க
உயிர் ஆயுதம் ஏந்தி போராடிய புனித போராளியின் 
நினைவு தினம் ,,,



 ,
              .TTA பயிற்சி வகுப்பு CTTC சென்னை ல் 27-1-2014 அன்று தொடங்கியது ..out  siders 
recruitment ல்   திருத்துறைபூண்டி செல்வதுரை TM அவர்களின் மகள் செல்வி 
வினோதினி அவர்களும், திருவாரூர் தோழர் பாலாஜி அவர்களும் தஞ்சை 
மாவட்டத்திலிருந்து தேர்வாகி பயிற்சியில்  உள்ளனர் ..
                   அவர்கள் பயிற்சி  வகுப்பு வெற்றிகரமாக
                           முடிந்திட நமது வாழ்த்துக்கள்,,,,,
SC/ST  தோழர்களின் நலனுக்கான 
 பாராளுமன்றக்குழு 

SC/ST தோழர்களின் நலனுக்கான பாராளுமன்றக்குழு  அவர்களது நீண்ட நாள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு குறிப்பு அனுப்பியுள்ளது. 32 பிரச்சினைகள் அதில் இடம் பெற்றுள்ளன . அதில் இரண்டு மிக முக்கிய பிரச்சினைகள் பற்றி நமது சங்கக்கருத்தினை பாரளுமன்றக்குழுவிற்கு தெரிவித்திடக்கோரி  நமது மாநிலச்செயலர் மத்திய சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மாநிலச்செயலர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் 
NEPP பதவி உயர்வில் சலுகை 

SC/ST ஊழியர்களுக்கு நாலு கட்டப்பதவி உயர்வில் சலுகைகள் அளிக்க வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அளித்த பல்வேறு தீர்ப்புகளை காரணம் காட்டி BSNLலில்  நாலு கட்டப்பதவி உயர்வில் SC/ST தோழர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகின்றது.
இது ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு அளிக்க இயலாவிட்டாலும் நாலுகட்டப்பதவி உயர்வில் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கலாம். DOTயில் இருந்து BSNLக்கு வந்த ஊழியர்களுக்கு முதல் கட்டப்பதவி உயர்வு 4 ஆண்டுகளிலும்,  இரண்டாம் கட்டப்பதவி உயர்வு 7 ஆண்டுகளிலும் சலுகை முறையில் வழங்கப்படுவது போல் SC/ST  உழியர்களுக்கும் நாலு கட்டப்பதவி உயர்வில் ஓராண்டு சலுகை அளிக்கலாம். வணிகத்துறையில் இது போல் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கருணை அடிப்படை வேலையில் சலுகை

தற்போது BSNLலில் கருணை அடிப்படை வேலைக்கு மதிப்பெண் முறை பின்பற்றப்படுகின்றது. 55 மதிப்பெண் பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பரிசீலனைக்குப்பின் 55 மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பங்கள் கூட நிராகரிக்கப்படுகின்றன. இது நியாயமான  நடைமுறையன்று. இந்த மதிப்பெண் வழங்கும் முறையில் SC/ST தோழர்களுக்கு சலுகைகள் BSNLலில் வழங்கப்படவில்லை. இது குறித்து JCM தேசியக்குழுக்கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.  உடனடியாக BSNLலில் கருணை அடிப்படை பணிக்கான தேர்வு முறைகளில் SC/ST  ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 

உரிய நேரத்தில் மேற்கண்ட முக்கியப்பிரச்சினைகளை எடுத்துரைத்த மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்களுக்கு நமது நன்றிகள்.
உலகத்தொழிற்சங்க கூட்டமைப்பின் WFTU  சார்பாக 
05/02/2014 மற்றும் 06/02/2014 ஆகிய தேதிகளில் 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் 
உலக ஓய்வு பெற்றோர் மாநாடு 
நடைபெறுகின்றது. 

இந்தியாவில் இருந்து AIBSNLPWA அமைப்பின் சார்பாக 
அதன்  பொதுச்செயலர் தோழர்.நடராஜன் அவர்களும், 
அகில இந்தியத்துணைத்தலைவர். தோழர். கோபாலகிருஷ்ணன் 
அவர்களும் பங்கு பெறுகின்றார்கள். 
நமது வாழ்த்துக்கள்..

Saturday, January 18, 2014

பேராசான் ஜீவா நினைவு தின கூட்டம்

பேராசான் ஜீவாவின் 51 வது   நினைவு தின கூட்டம் 


பாபநாசம் தொலைபேசி நிலையத்தில் தேசிய தபால் /தந்தி ஊழியர்கள் 
சம்மேளனத்தின்  (NFTE-BSNL  )சார்பாக 18-01-2014
அன்று  தோழர் M .கைலாசம் கிலைசெயலர் NFTE-BSNL  அய்யம்பேட்டை ,
k .செல்வராஜ் கிலைசெயலர் NFTE-BSNL பாபநாசம்  அவர்கள் 
முன்னிலையிலும் நண்டை பெற்றது .தோழர் பேராசான் ஜீவா 
அவர்களின் திருவுருவ படத்திற்கு தஞ்சை மாவட்ட வி .தொ .ச 
தலைவர் தோழர் G .K  அவர்கள் மாலை அணிவித்தார்கள் .தோழர் 
R .தில்லைவனம் AITUC  தஞ்சை மாவட்ட தலைவர் மற்றும் 
இந்திய் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளர் அமல் ராஜ் மற்றும் கணேசன் ,முருகேசன் வி . ச ,ஜெயராமன்,வைத்தியநாதன் மற்றும் தொலைபேசி ஊழியர்கள் மற்றும் தோழியர்கள் பலரும் வெகு திரளாய் பங்கேற்றனர் . தேசிய தபால் /தந்தி ஊழியர்கள் 
சம்மேளனத்தின்  (NFTE-BSNL ) மாநில துணை செயலாளர் தோழர் K .நடராஜன் புகழஞ்சலி உரை நிகழ்த்தி முடித்து வைத்தார் .












Monday, January 13, 2014





                                       பொங்கல் தின நல்வாழ்த்துக்கள                                      

Sunday, January 12, 2014

ஜனவரி 12
தேசிய இளைஞர் தினம் 
சுவாமி விவேகாநந்தர் பிறந்த தினம் 

தோழர் அய்யனார் அவர்களின் கலைஞர் TV நிகழ்ச்சி

கலைஞர் TV ல் தமிழக நூலகங்களின் பயன்பாடு 
குறித்து நடைபெறும் விவாதத்தில் தோழர் அய்யனார்
இன்று (12-1-2014)மதியம் 1.30to 2.30pm பங்கேற்பு .
பொது நூலகங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு 
உகந்ததாக இருக்கிறதா? என்ற தலைப்பில் 
விவாத மேடை நடைபெற உள்ளது .

Sunday, January 5, 2014


                                        


ஒலிக்கதிர் பொன்விழா சிறப்புர அனைவரும் பங்கேற்போம் ,

Saturday, January 4, 2014

தஞ்சை பொது மேலாளரின் 
புத்தாண்டு வாழ்த்து


Wednesday, January 1, 2014









IDA 5% INCREASED From ஜனவரி 2014

                    




                   IDA 5% INCREASED From ஜனவரி 2014

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 


2014 புதிய,புதிய மாற்றங்கள் ,,,,
ஊழியர் வாழ்வில் முன்னேற்றம் ,,
என கடமைகள் நம் முன்னால் ,,,,
தொடர்ந்து நிறைவேற்ற /போராட ,,
சபதமேற்போம் ,,,,



செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR