10-01-2014&11-01-2014 அன்று டெல்லியில் நடை பெற்ற மகளிர் கருத்தரங்கம்.
இந்த கருத்தரங்கம் குறிப்பாக அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும்
அமைப்பு சார்ந்த பெண் தொழிலாளர்கள் -இவர்களின் வேலைத்தன்மை,
பணி இடச்சூழல் ,பாதுகாப்பு ,வருமானம் குறித்த ஓர் விழிப்புணர்வு
ஏற்படுத்துதலாகும் .அங்கன்வாடி பணியாளர்கள் ,வீட்டு வேலை
செய்பவர் ,தோட்ட வேலை ,சிறுதொழில் புரிபவர் ,பீடி சுற்றுதல் ,
பொட்டலம் போடுபவர் ,ஆட்டோ ஓட்டுனர்கள் ,சுரங்க தொழிலாளர்கள் ,
பாக்டரி தொழிலாளர்கள் போன்ற குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்கள் பங்கேற்றனர் .
10-01-2014தோழர் .குருதாஸ்குப்தா -MP &GS AITUC அவர்களின் உரை
பாராளுமன்றத்தில் பெண்களுக்கான ஓர் கருத்தரங்கம் நடத்துவது என்பதே
மரியாதைக்குரிய விஷயம் .இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடை பெறுவது வேதனைக்குரியது .நிறைய இடங்களில் பெண்களின் " பேறு கால விடுப்பு "என்பது கூட மறுக்க படுகிறது .
சம்பள போராட்டம் ,போனஸ் போராட்டம் ,பெண்கள் மீதானா பாலியியல்
வன்முறைக்கு எதிரான போராட்டம் என்று நாங்கள் நிறைய போராட்டங்கள்
நடத்துகிறோம் .பெண்களின் முன்னேற்றம் என்பது பெண் சமூகம் கல்வி
அறிவு பெறுதல் மூலமே சாத்தியம்.பெண்கள் "LEADERSHIP"quality ஐ வளர்த்துக்கொள்ள வேண்டும் .எல்லாதரப்பு பெண்களுக்கும் இந்த
கருத்தரங்கம் பயனுள்ளதாக அமையவேண்டும் .
தேசிய அளவில் பெண்களுக்கான புகார் கமிட்டி *(COMPLAINT COMMITTEE )*
என்பது வெகு குறைவு .முதலில் பாலியியல் வன்முறை என்றால் என்ன என்று புரிதல் வேண்டும் .இன்றும் ராஜஸ்தானில் குழந்தை திருமணம்
உள்ளது .எங்கெல்லாம் பெண்களின் வேலை உள்ளதோ -வீடு தொடக்கி
அலுவலகம் ,கம்பனி ,தொழிற்சாலை ,HOSPITAL என எல்லா இடங்களிலும்
பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம் .விபரம் தெரியாத பெண்களுக்கு -என்னென்ன சட்டங்கள் உள்ளது போன்ற விஷயங்களை படித்த பெண்கள் தெரிவிக்க வேண்டும் .இன்றும் டெல்லியில் இளம் பெண்
பயிற்சி வக்கீல்களின் பாதுகாப்பு என்பதே பெரிய விஷயமாக உள்ளது.
1.SEXUAL HARASSMENT IN WORK PLACE குறித்த ஓர் பயிற்சி அளிக்க உள்ளோம் .
2.GENDER RIGHTS -க்கான தொடர் WORKSHOP நடத்த உள்ளோம் என பேசி முடித்தார் ..தோழர் .குருதாஸ்குப்தா.
:NFTE -BSNL தமிழ்நாடு சார்பில் தோழியர் A.லைலாபானு மகளிர் ஒருங்கிணைப்பு குழு ,தஞ்சையிலிருந்து டெல்லி சென்று கலந்து கொண்டு
கொடுத்த தகவல் .இந்த வாய்ப்பை அளித்த மாநில சங்கத்திற்கும்
மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கருத்தரங்கத்தில்
கலந்து கொண்ட தோழியருக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி/
பாராட்டுகள் ...