அன்பு தோழர்களே !
வணக்கம்! தஞ்சை வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்களின் பேராதரவோடு நடைபோட விழைகிறோம். பல்வேறு தலைப்புகளில் தமிழிலேயே வலம்வரவிருக்கிறோம். உங்கள் ஆலோசனைகளை அவ்வப்போது தொலைபேசியில் தெரிவித்தால் மெருகேற்றிக் கொள்கிறோம்
அருமைத் தலைவன் ஜெகன் வழியிலே நமது பாதையை அமைப்போம். தலைவனோடு வாழ்ந்த காலம் எவ்வளவு பெரிய பொற்காலம் என்பதை மறந்தவர்கள் இன்று எண்ணத் தொடங்கி விட்டார்கள். போனது போகட்டும்! புதிதாய் சிந்திப்போம். நம்மை, நமது துறையை பாதுகாக்கவும், வளர்த்தெடுக்கவும என். எப். டி ஈ அகில இந்திய, மாநிலச் சங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவைகள் விடுக்கும் அறைகூவல்களை நம்பிக்கையோடு செயல்படுத்துவோம்.
நமது மாநிலச் சங்கம் சமீபத்தில் கிளை செயலர்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை கடந்த ஆகஸ்ட் 14 அன்று குடந்தையில் நடத்தியது. பயனுள்ள பல விபரங்கள் நமக்குக் கிடைத்துள்ளது. அதைப்போலவே செப்டம்பர் 7 அன்று நடைபெறவிருக்கும் பொது வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் தஞ்சையில் வருகிற ஆகஸ்ட் 23 அன்று நடைபெற உள்ளது. திரளாய் வாருங்கள் தோழர்களே! திரண்ட பங்களிப்பு வேலை நிறுத்தத்தை வெற்றியடையச் செய்யும்.
நமது ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் கிராக்கிப்படியுடன் கூடிய சம்பளத்தையும் நிலுவையும் பெற்றிருப்பீர்கள். இன்னும் ஒரு மாதத்தில் நமது மாநிலச் சங்க கட்டிடப் பணி முடிவடையவுள்ளது. அதற்க்கு நீங்களும் உங்களின் பங்களிப்பாக ருபாய் 50 நன்கொடை அளித்திட வேண்டுகிறேன்.
நன்றி! மீண்டும் உங்களை புதிய செய்திகளோடு சந்திக்கிறேன்!!
18 - 8 - 2010 உங்கள் எம். கேசவன்.
மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment