வீர வணக்கம்!
நமக்காக ஒரு கூட்டம் உழைத்திருக்கிறது, உயிரை இழந்திருக்கிறது, சொத்தை, சுகத்தை, சுற்றத்தை என்று இழந்தது இன்னும் எவ்வளவோ! அதனால் கிடைத்த பலன்களும் அளவற்றது. ஆனாலும் அப் பலன்களை இன்று வரை எட்டாதவர்களும் உண்டு.
சரி! நாம் என்ன செய்ய?
எவ்வளவோ செய்யலாம்! உழைக்கும் வர்க்கம் ஒன்று பட்டால் உலகே நமதாகும் என்பதை நாம் உணர்ந்த்தவர்களாய் இருந்தால்,
அந்த ஒற்றுமையைக் காக்க உழைப்போம்.
ஒற்றுமைக்கு ஊறு விளைப்போரை அடையாளம் காண்போம், அவர்களை ஒற்றுமைக் கண்ணியில் இணைப்போம்! இயலவில்லையெனில் அவர்களை அம்பலப்படுத்துவோம்! சரிதானே!
சரி! அவைகளை அடையாளம் காண்பது எப்படி?
ஒன்று பட வேண்டியவர்கள் ஏன் பிரிந்து நிற்கிறார்கள்?
ஒற்றுமை கோஷம் எழுப்புபவர்கள் ஏன் ரெண்டு பட எண்ணுகிறார்கள்?
இழக்கப் போவது அடிமைச் சங்கிலிகளைத்தான் என்று கூறிக் கொண்டே அடிப்படை உரிமைகளையே இழக்கத் துணிகின்றார்களே?
ஏன்? எதற்காக இப்படி? என்ற கேள்விகளை நாம் எழுப்பத் துவங்கி விட்டால் அவர்களின் சுய ரூபம் தெரிய ஆரம்பிக்கும்? அப்பொழுது அவர்களை, அவர்களின் இயக்கத்தை நம்மால் சரியாக அடையாளம் காண முடியும்.

சரி, இதையெல்லாம் கேட்க, கவனிக்க நமக்கு எங்கே நேரம் இருக்கிறது என்று எண்ணி வாளாவிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.
இந்த மே தினத்திலிருந்தாவது, இந்த வகையில் எண்ணிச் செயல்பட்டால், மே தினத் தியாகிகளை எண்ணிப் பார்த்த புண்ணியமாவது நம்மைச் சேரும். அந்தத் தியாகம்,அவர்களின் ரத்தம் சிந்திய வேதனை நமது சந்ததிக்கு வரவேண்டாமே!
மே தினத் தியாகிகளே! உங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை உரித்தாக்குகின்றோம். உங்கள் தியாகம் வீணாகாது. நீங்கள் பெற்றுத் தந்த உரிமைகளை, சலுகைகளை கண்ணின் மணிபோல் காத்திட சபதமேற்கிறோம்!
வாழ்த்துகளுடன்,
எஸ். சிவசிதம்பரம்.
பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment