தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, December 4, 2013

         

மாநில சேம நல நிதி கூட்டம் 29-11-2013

           மாநில சேம நல நிதி கூட்டத்திற்கு முன் தயாரிப்புக்காக 29-11-2013 அன்று முற்பகலில் மாநில சேம நலக்குழு NFTE உறுப்பினர் இரா ஸ்ரீதர் , மாநில செயலர் R பட்டாபிராமன் மற்றும் RGMTTC கிளை செயலர் சீனிவாசன் ஆகியோருடன் மாநில சங்க அலுவலகத்தில் விவாதித்தார் 

       பின்னர் நாம் அளித்த விவாதப்பொருள் 8 உட்பட விவாதிக்கப்பட்டது .

1. ஓய்வு பெறும்போது GIFT CHEQUE ரூ 1200/- லிருந்து ரூ 2000/- ஆக உயர்த்தல்-  ஏற்கப்பட்டது 

2. மூக்குக்கண்ணாடிக்காக ரூ 400/- லிருந்து ரூ 800/- உயர்த்தல்- ஏற்கப்பட்டது 

3. சேம நலப்பிரிவு ஊழியருக்காக மதிப்பூதியம் இரண்டு மடங்காக உயர்த்தல் - ஒப்புக்கொள்ளப்பட்டது 

4.புத்தக உதவித்தொகை , தொழிற்நுட்ப மற்றும் தொழிற்நுட்பமல்லாத படிப்பு உதவித்தொகையை உயர்த்திட கேரளா மற்றும் கர்நாடகா நடைமுறையை பரிசீலனை செய்து முடிவு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது 

5. திருமண கடன் தமிழகம் முழுவதும் ரூ 50000/-ஆக ஒரே மாதிரி அமுல்படுத்தப்படும்  திருமண கடன் ரூ 1 லட்சம் வரை உயர்த்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் சாதகமாக பரிசீலிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது 

6. பெண்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை மீண்டும் ஒருமுறை அனுமதிக்க வேண்டப்பட்டது . முதன்மை பொது மேலாளர் இரு பாலருக்கும் அனுமதிக்கவும் தொகையை உயர்த்தவும் இசைந்துள்ளார் 

7.மருத்துவ முகாம்கள் -நல்ல யோசனை என்று வரவேற்கப்பட்டு முகாம் ஏற்பாடு செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் குறிப்பு அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது 

8. கடன் தவணை பிடித்தத்தை  HRMS PACKAGE -ல் இணைக்க CGM அலுவலக கணக்குப்பிரிவு முன்முயற்சி எடுக்கும். பூனா ITPC பிரிவுக்கு எழுதி உடனடியாக அமல்படுத்த ஏற்கப்பட்டது 

9. ஊழியர் வங்கி கணக்கு மூலம்( NEFT /RTGS ) மாவட்டங்களில் சேம நல கடன்களை வழங்கிட ஏற்கப்பட்டது 

10. வங்கிக்கடன் பெறும்போது இன்ஷூர் செய்வதன் முக்கியத்துவம் விவாதத்தில் வெளிப்பட்டது உரிய முறையில் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU ) செய்யும்போது காப்பீடு செய்வதையும் இணைக்க கார்பரேட் அலுவலகம் டெல்லிக்கு பிரச்சினையை பரிசீலிக்க அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது 

11.சேம நல மாதாந்திர சந்தா ரூ 50/- ஆக முந்தைய 09-01-2013 கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவை தமிழகம் முழுவதும் அமல் செய்து சேமநல நடவடிக்கைகளை மேலெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR