தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, May 30, 2014

கடலூரில்  NFTE மாவட்ட தலைவர்/TMTCLU மாநில செயலர் தோழர் செல்வம் மற்றும் தோழியர் ரேவதி ஆகியோரின் பணி ஓய்வு பாராட்டு விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவிற்கு தோழர்கள் சிரில் அறக்கட்டளை பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் துரை தலைமை வகித்தனர்.தோழர் ஸ்ரீதர் மாவட்டசெயலர் முன்னிலை வகித்தார்.  தோழர்  ரவிச்சந்திரன்வரவேற்ப்புரைநிகழ்த்தினார்.தோழர்கள் தமிழ்மணி,கடலூர் ரகு,சம்மேளன செயலர் ஜெயராமன்,மாநில அமைப்பு செயலர் அன்பழகன்,DGM (F),DGM (CFA ),DGM (CM ),BSNLEU தலைவர்கள்,மதுரை சேது,TMTCLU மாநில பொருளர் குடந்தை விஜய்
பாண்டி காமராஜ்,மாநிலதுணைசெயலர் கோவை ராபட்ஸ்,மாநிலசெயலர்தோழர்பட்டாபி,
அன்புத்தலைவர்R.Kஆகியோர்கள்கலந்து
கொண்டனர்.நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள் ஆரூர்சிவா, கூடூர் குணா,TMTCLU மாவட்ட தலைவர் தோழர் நாடி, TMTCLU தஞ்சை பகுதி தோழர் பொம்மையன்,தோழர் நடராஜன் ஆகியோர்கள்கலந்துகொண்டனர்.கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட தோழர்களும் 
தோழியர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் ,,,,,             

Wednesday, May 21, 2014





திருவாரூர் கிளை சார்பாக நடத்தப்பட்ட TMTCLU ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்க தலைவர் காளிமுத்து,TWAD சாமி,AITUC அழகிரி,POSTAL ராமலிங்கம்,தோழியர்கள் வாசுகி,ஜெயந்தி,சுமதி,ஒப்பந்த ஊழியர் உமா ,கிளையின் முன்னால் தலைவர் மூர்த்தி,TMTCLU கிளை தலைவர் பார்த்தசாரதி ,தோழர் காட்டூர் சேகர் ,தோழர் சிங்காரம் TMTCLU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சிங்காரம்,சிவா,மற்றும் 60க்கும் மேற்ப்பட்ட தோழர்களும்,தோழியர்களும் கலந்துகொண்டனர்.இறுதியாக தோழர் NFTE மாவட்ட துணை செயலர் சீதாராமன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் ,,,,   

Monday, May 19, 2014

TMTCLU 
தஞ்சை மாவட்ட மாநாடு


அன்பான தோழர்களே! தோழியர்களே!!

         நமது தஞ்சை மாவட்ட மாநாடு 06-05-2014 அன்று உயர் தலைவன் ஜெகன் பிறந்த மண் திருத்துறைபூண்டியில் ஜெகனின் வாரிசுகளாய்த் திரண்ட 300 க்கும் மேற்பட்ட தோழர்களுடன்  வெகு சிறப்பாக நடைபெற்றது. 

         மாவட்டத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில்,  மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் வந்தோரை வரவேற்க, மாநில இணைச் செயலாளர் தமிழ்மணி அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். 

              திருத்துறைப்பூண்டி தோழர். தெட்சிணாமூர்த்தி அவர்களும், வேதாரண்யம் தோழர். R.K. ராஜேந்திரன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.   தோழர். கூடூர் குணா அவர்கள் அஞ்சலியுரை ஆற்றினார்.

      NFTE மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்கள் தலைவர் பிரின்ஸ், T. பக்கிரிசாமி, S. சிவசிதம்பரம் ஆகியோரும், TMTCLU மாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் சிவசங்கரன், தாமஸ் எடிசன் ஆகியோரும் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்கள்.  
             திருத்துறைபூண்டி DE திரு. விஞஞானி அவர்களும் மாநாட்டை வாழ்த்தினார். இவர்களோடு மதுரை மாவட்டத் தலைவர் 
       திருத்துறைபூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். G. பழனிச்சாமி அவர்களும், AITUC முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். K. ராஜா அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.   

               மாநிலச் செயலர் தோழர். R. செல்வம் அவர்களும், NFTE மாநில துணைச் செயலர்கள் தோழர் G.S. முரளிதரன் மற்றும்  தோழர். K. நடராஜன் ஆகியோரும், மாநில மகளிர் அணித் தலைவர் தோழியர் A. லைலாபானு அவர்களும்   நல்லதொரு உரையினைத் தந்தார்கள். 

       மாநாட்டில் ஏகமனதாக கீழ்க்கண்ட தோழர்கள் TMTCLU மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   

 தோழர். C. நாடிமுத்து  தலைவர்.
தோழர். D. கலைச்செல்வன்  செயலர்.
தோழர். R.K. ராஜேந்திரன் பொருளாளர்.  

           தலைவர் பட்டாபி அவர்கள் " ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலம் " என்ற தலைப்பில் நீண்டதொரு கருத்துரையினை வழங்கினார். 

        இறுதியில் நிறைவுப் பேருரையாக மாநிலத் தலைவர் தோழர். R.K  அவர்கள் தோழர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில்   எழுச்சியுரையாற்றினார். 

             வரவேற்புக்குழு செயலர் தோழர். கலைச்செல்வன் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது. 
             
             இம்மாநாட்டை வெகு சிறப்பாகவும், நேர்த்தியாகவும் நடத்தித் தந்த திருத்துறைப்பூண்டி தோழர்களும், வரவேற்புக்குழு செயலர் தோழர். கலைச்செல்வன், தலைவர் T. பக்கிரிசாமி ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். 

மாநாட்டுக் காட்சிகள்:

Saturday, May 17, 2014

தமிழ்மாநில தொலை தொடர்பு ஒப்பந்ததொழிலாளர் சங்கம் .

 தியாகச்செம்மல் தோழர் ஜகன்பிறந்ததினத்தில் தமிழ்மாநில தொலைதொடர்பு ஒப்பந்ததொழிலாளர் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் ,திருத்துறைபூண்டி,மன்னார்குடி ,பட்டுக்கோட்டை ,தஞ்சாவூர் ஆகிய இடங்களில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தஞ்சை மாரிஸ் கார்னர் exchange ல் தோழர் R .ரெத்தினசாமி SDOP கிளை தலைவர் தலைமையில் நடைபெற்றது .தோழர் K.சின்னப்பா GM(O )  கிளை செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.தோழர்கள் TVY கிளைசெயலர் பத்மநாபன் ,SDOT கிளைசெயலர் பாண்டுரெங்கன் ,TMTCLU மாவட்ட சங்க நிர்வாகி வல்லம் இளங்கோவன்,விளார் வேதமணி ஆவூர் ரவி ,தஞ்சை கோபால் ,பூபதி ,கரந்தை சுப்பிரமணியன்,கணேசன்,   NFTE மாவட்டதுணைசெயலாளர் ஜோதிவேல் ,   மாநில மகளிர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் A.லைலாபானு , தோழர் LCP,மற்றும் TMTCLU மாவட்ட செயலர் D.கலைச்செல்வன் சிறப்புரையாற்றினார் .இறுதியாக மாநிலதுணை செயலர் தோழர் K.நடராஜன் நிறைவுரையாற்றினார்.100க்கும் மேற்பட்ட தோழர்களும்,தோழியர்களும் கலந்து கொண்டனர் ,,,,இறுதியில் தோழர் பொம்மையன் நன்றி கூறி முடித்து வைத்தார் ,,,        

Monday, May 12, 2014


17/05/2014

 சனிக்கிழமை

மாநிலந்தழுவிய 

கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
=============================================================================================

 அடிமட்ட ஊழியர்களின் அன்புத்தலைவன்...
தோழர். ஜெகன் பிறந்த நாளில்..
உலகை.. உள்ளங்கையில் அடக்கிய..
உலகத்தொலைத்தொடர்பு தினத்தில்..
NFTE இளைஞர் தினத்தில்....
அன்றாடக்கூலிகளாய்..
ஓயாது உழைக்கும் ஒப்பந்த ஊழியர்களின்
பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி..
அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும்
 
ஆ ர் ப் பா ட் ட ம்

கோரிக்கைகள்

BSNL நிர்வாகமே.......
  • குறைந்த பட்ச ஊதியம் ரூ.10,000/= வழங்கு.
  • ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை கொடு.
  • மாதந்தோறும் 5ம்தேதிக்குள் சம்பளம் வழங்கு.
  • வங்கிக்கணக்கில் சம்பளப்பட்டுவாடா செய்.
  • ஊதியப்பட்டியல் ( PAY SLIP ) வழங்கு.
  • EPF கணக்கை அனைவருக்கும் துவக்கு.
  • ESI மருத்துவ அட்டை வழங்கு.
  • EPF SLIP ( சேமநலநிதி பிடித்தப்பட்டியல் ) வழங்கு.
  • அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கு.
  • அனைவருக்கும் ஆயுள் காப்பீடு வசதி செய்.
  • குறைந்த பட்சம் 4 மணி நேர வேலை வழங்கு.
  • தொழில்நுட்ப பணி புரிபவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கு.
  • ஒப்பந்த ஊழியர் நலன் பேண சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்.
  • குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்கு.
நமது தஞ்சை மாவட்டத் தோழர்கள் 
அவரவர்களின் கோட்டத் தலைமையகங்களில் 
ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திடுமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
C. நாடிமுத்து               D. கலைச்செல்வன்       R.K. ராஜேந்திரன்  
   தலைவர்.                             செயலர்                       பொருளர்.
தஞ்சை மாவட்டச் சங்கம்.

Monday, May 5, 2014

JTO தேர்வு 
சென்னை நீதிமன்றத்தீர்ப்பு 

தமிழகத்தில்  தற்காலிகப்பதவி உயர்வில் JTOவாகப்பணி புரியும் 
TTA தோழர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பாயம் CAT -MADRAS BENCH
 தனது 33 பக்கத்தீர்ப்பினை 02/05/2014 அன்று வழங்கியுள்ளது.

BSNL நிர்வாகத்தின் காலியிடங்கள் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாகவும், 2000-2001 வருடத்திற்கான JTO பதவிகள் நிரப்பப்படாமல் இருந்தால் அந்த பதவிகளில் TTA தோழர்களை சேவை அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது . 
இதனை 8 வாரங்களுக்குள் செய்து முடிக்க உத்திரவிட்டுள்ளது.

JTO ஆளெடுப்பு விதி 2001க்குப்பின் உருவான காலியிடங்களில் 
மேற்கண்ட TTA  தோழர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை 
எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே 02/06/2013 அன்று நடைபெற்ற JTO இலாக்காப்போட்டித்தேர்வு முடிவுகளை வெளியிடலாம் எனவும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

விரைவில் JTO தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கின்றோம். JTO ஆளெடுப்பு விதிகள் 2014 வெளியிடப்பட்ட பின் OFFICIATING செய்யும் TTA தோழர்களின் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என நம்புகின்றோம்.

Sunday, May 4, 2014

TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்புத் தொழிலாளர் சங்கம் 
தஞ்சை மாவட்டம்.   ( பதிவு எண்: 2810 ) 

3வது  மாவட்ட மாநாடு அழைப்பிதழ்  

நாள்: 06-05-2014               நேரம்: மாலை 3 மணி.
இடம்: மங்கை மஹால், திருத்துறைப்பூண்டி.

தலைமை
தோழர். D. கலைச்செல்வன், மாவட்டத் தலைவர்.

முன்னிலை 
K. தெட்சிணாமூர்த்தி கிளைத் தலைவர், NFTE -TTP 
R.K. ராஜேந்திரன்,   கிளைத் தலைவர், NFTE - VRM
  
வரவேற்புரை 
தோழர். K. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர்.

அஞ்சலியுரை 
தோழர். கூடூர். குணா.திருவாரூர். 

துவக்கவுரை 
தோழர். S. தமிழ்மணி, 
மாநில இணைச் செயலாளர். 

வாழ்த்துரை தோழர்கள்:

S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர். NFTE, தஞ்சாவூர்.
T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர், NFTE, தஞ்சாவூர்.  
T. பக்கிரிசாமி, மாவட்டப் பொருளாளர், NFTE , திருத்துறைபூண்டி.  
S. சிவசிதம்பரம், மாவட்டப் பொருளர்.
S. விஜயகுமார், DGM - BSNL, தஞ்சாவூர்.
T. விஞ்ஞானி, DE (RM),  திருத்துறைபூண்டி
A. லைலாபானு, மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர், தஞ்சாவூர்
S. சிவசங்கரன், TMTCLU ,மாநில துணைச் செயலர்.
தாமஸ் எடிசன்,TMTCLU,மாநில அமைப்புச் செயலர், தஞ்சை.  
K. ராஜா. AITUC முன்னாள் மாவட்டச் செயலர்.      

சிறப்புரை தோழர்கள்:
G. பழனிச்சாமி, Ex. MLA, திருத்துறைபூண்டி. 
குடந்தை R .ஜெயபால்,
கே நடராஜன், ACS / NFTE   தஞ்சை 
G.S. முரளிதரன், ACS / NFTE சென்னை.
மதுரை சேது 
R. செல்வம், TMTCLU ,மாநிலச் செயலர்.
N. வீரபாண்டியன், தமிழ் மாநிலச் செயலர், AIBSNLEA.      

              M. விஜய் ஆரோக்கியராஜ்,                   
                            மாநிலப்பொருளாளர்.TMTCLU ,

கருத்துரை

தோழர். R. பட்டாபி மாநிலச் செயலர், NFTE  
" ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலம் ". 

நிறைவுப் பேருரை 
தோழர். R K  அவர்கள்.
மாநிலத் தலைவர்

நன்றியுரை 
தோழர். S. கலைச்செல்வன், 
வரவேற்புக் குழு செயலர், திருத்துறைபூண்டி.

குறிப்பு:
             மாவட்டச் செயற்குழு: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி                                                               வரை.    TMTCLU மற்றும் NFTE மாவட்ட,                                                           கிளைப் பொறுப்பாளர்கள் தவறாது                                                                     பங்கேற்கவும்.  

            மாவட்ட மாநாடு:          மதியம் 3 மணிக்கு துவங்குகிறது. 

திரளாய் வருக தோழர்களே!
    எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

    ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது
    - ஆப்ரகாம் லிங்கன்

    முயலும் வெல்லும்!

    ஆமையும் வெல்லும்!!

    முயலாமை வெல்லாது!!!

    Thursday, May 1, 2014

    மே தினம் பற்றி..... 
    உழைப்பாளர்கள் தினம்!
    தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!
    எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த சோ‌விய‌த் ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ பிறக்கவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றிலிருந்து 126 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம், 12 மணிநேரம், 14 மணிநேரம் என்று உழைப்பாளர்களும், பணியாளர்களும் நேர வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில், 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும், வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரியும் தொழிலாளர்கள் முதன் முதலாக 1880ஆம் ஆண்டு குரல் கொடுத்தனர். அந்த உரிமை கோரிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. 1884ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்ட் டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்று கூறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
    1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது. உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம், சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது.
    ஆனால், தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்
    தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர். மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. 1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்
    இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும், இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது. அமெரிக்காவில் உருவான மே தினம்தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
    உழைக்கும் உழைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.............
    இந்த போராட்டத்தை நினைவு கூறுவது தான் மே தினம் !!!

    செய்திகள்

    NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR