படைத் தலைவன் பட்டாபிக்கு இன்று பணி நிறைவு.
மா நிலத்தை நேசித்த மனித நேயர்
சோதனைகளை சுவாசித்த சொல்வேந்தன்.
தோழர்களே! வாழ்த்த வயதில்லை என்று
வணங்கிப் போக வேண்டாம்.
வாயார வாழ்த்தலாம் வாங்க.
சிறியவர் முதல் பெரியவர் வரை
விரும்பி வாழ்த்த அவர் என்ன நிஜாம் பாக்கா!
இல்லை! தோழனே! அவரின் நிஜமான போக்கு.
வரலாறு படைத்த தலைவர்களின்
வரிசையில் வந்த தோழன் அவன்.
திரும்பிய திசையெல்லாம் விரும்பிய வண்ணம்
தோற்றமளித்த திருவாரூர் ஜெகனே!
ஜெகன், முத்தியாலு, ஆர்.கே, தமிழ்மணி,
வீரபாண்டியோடு
மாலியின் வரிசையில் வந்த மாயனே!
உனக்குப் பிறகு உருவானவர் யார்?
ஒன்றா! இரண்டா!! ஒரு நூறு சொல்லலாம்!
இப்படி ஒரு வளர்ச்சி வேறெங்கு காண?
நீ ஓய்வு பெறும் காலம்
சங்கம் பேறு பெற்ற காலம்.
பல்வேறு இன்னல்களைக் கடந்து
மாநிலத்தை முதன்மையாய் நிலைநிறுத்திய காலம்.
சந்தித்த சோதனைகள், வென்றிட்ட சாதனைகள்
கொஞ்சமா, நஞ்சமா!
உனக்கு அணுக்கத் துணையாக லட்சமும், முரளியும்.
உன்னை நுணுக்கப் பகையாக மிச்சம் அரளியும், புரளியும்!
அண்ட முடியுமா! மிஞ்ச முடியுமா!
நல்ல மனைவி, நல்ல தோழன்
நல்ல சங்கம் தெய்வீகம்!
அமைந்த என் தலைவனை
ஆரத் தழுவி மகிழ்கிறேன்!
என்றும் உங்கள் நிழலாய்.......
S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.