முடிந்தது... விடிந்தது..
தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள்
நடந்து முடிந்த சங்க அங்கீகாரத்தேர்தலின்
அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று
13/05/2016 வெளியிடப்பட்டுள்ளன.
31/03/2016 அன்று...
மொத்த வாக்காளர்கள் 164244 ஆகும்.
BSNLEU சங்கம் 31/03/2016க்குப்பின்
JTO பதவியில் நியமனம் செய்யப்பட்டவர்கள்...
ஓய்வு பெற்ற ஊழியர்கள்..
ஓய்வெடுக்கச்சென்ற ஊழியர்கள்...
ஓய்வு பெற்ற ஊழியர்கள்..
ஓய்வெடுக்கச்சென்ற ஊழியர்கள்...
இறந்து போன ஊழியர்கள்...
வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றவர்கள்
வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றவர்கள்
மற்றும் காசியாத்திரை சென்றவர்கள்..
ஆகியோரை மொத்த வாக்காளர்கள்
கணக்கில் இருந்து கழிக்க வேண்டும்
என கோரிக்கை வைத்தது.
காரணம் மொத்த வாக்காளர்கள் கணக்கில்
50 சதம் வாக்குகளைப் பெற்று விட்டால்
தான்.. ஒரு சங்கம் மட்டுமே BSNLலில்
காலத்தைக் கழித்து விடலாம் என்று
BSNLEU மனப்பால் குடித்தது.
மனப்பால் BSNLEUவின் மகத்தான கோரிக்கை
நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு
424 வாக்காளர்கள் கழிக்கப்பட்டு
மொத்த வாக்காளர்கள் 163820 என்று கணக்கிடப்பட்டு
அதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வ முடிவுகள்
இன்று வெளியிடப்பட்டுள்ளன.
சில துளிகள்:
மொத்த வாக்காளர்கள் : 163820
வாக்களித்தவர்கள் - 153840
வாக்களிக்காதவர்கள் - 9980 - 6.1 சதம்
செல்லாத வாக்குகள் - 1395
செல்லுபடியான வாக்குகள் - 152445
NFTE - 52637 - 31.97 சதம்
BSNLEU - 81195 - 49.56
FNTO - 8697 - 5.31 சதம்
BTEU BSNL - 4846 - 2.96 சதம்
எந்த சங்கமும் 50 சதத்திற்கும் மேல் வாக்குகள் பெறாததால்...
15 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்ற
NFTE மற்றும் BSNLEU சங்கங்கள்
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாவம் FNTO...
7 சத வாக்குகளைப் பெற முடியாமல்
5.31 சதமே வாக்குப்பெற்றதால்
JCMல் ஒரு இடத்திற்கு கூட வழியில்லாமல் போனது.
FNTO சங்கம் பெற்ற வாக்குகளை விட
வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகம்
என்பது வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது.
தோழர்களே...
மயிரிழையில்...
715 வாக்குகள் குறைவால்
BSNLEU சங்கத்திற்கு...
50 சதப் பெரும்பான்மை கிடைக்காமல்...
BSNLEU வின் ஒரே சங்க கனவு கலைந்து விட்டது...
இத்தோடு....
முடிந்தது..
BSNLEUவின் ஒரே சங்கக்கனவு..
விடிந்தது...
BSNL ஊழியர் வாழ்வு...
BSNLEUவிற்கு வாக்களிக்காத...
அந்த...715 தோழர்களுக்கும்
கோடான கோடி நன்றிகள்...
காரைக்குடி வலைதளத்திலிருந்து ..........
No comments:
Post a Comment