BSNL நிலை பற்றி
CGM அலுவலக மாவட்டச் சங்க சிறப்புக் கூட்டத்தில்
தோழர் பட்டாபி அவர்களின் உரை
=========================================================
BSNL நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருகின்ற நிலையில் மூடபடலாம் என பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. நான் முதலில் உறுதியாக, அறுதியிட்டு கூறுகிறேன். BSNL நிறுவனத்தை யாரும் எளிதாக மூடிவிட முடியாது. ஒரு நிறுவனம் துவக்கிட விதிகள் உள்ளன. அது போல மூடிவிட அதை விட கடுமையான விதிகள் உள்ளன. அதன் நடைமுறைகள், விதிகள் நடைமுறைப்படுத்த பல காலம் பிடிக்கும். எனவே BSNL நிறுவனம் மூடிவிடும் என்ற அபாயம் இல்லை. புனரமைப்பு மறுகட்டமைப்பு மட்டுமே இன்றைய தேவையாகும் பரீசீலனையில் இருக்கிறது. அதுவே அரசின் / நிர்வாகத்தின் நிலையாக உள்ளது. புனரமைப்பு சன்மானம் அல்ல.BRPSE 2015ல் நோய் துவக்க நிலை தொற்றிய நிறுவனம் என எச்சரிக்கை செய்தது. BRPSE ஒழிக்கப்பட்ட பின் அமைச்சகமே இந்த பணியை செய்து வந்தது . 2016ல் DPE பொதுத் துறைகள் மூடிவிட வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. 2017 ல் BSNL துவக்க நிலை நலிவடைந்த நிறுவனம் என வகைப்படுத்தப்பட்டது. 2018 பொதுத் துறை சர்வேயின்படி BSNL, AIR INDIA, MTNL மூன்றும் மொத்த பொதுதுறைகளின் நட்டத்தில் 55% ஆக இருந்தது. ரூ1000 கோடிக்கு மேல் நட்டம் அடைந்த பொதுத்துறை நிறுவனங்கள் 8 மட்டுமே. அதில் BSNL மட்டுமே நட்டத்தில் முதன்மையாக உள்ளது. ஏர் இந்தியா அனுபவம் நமக்கு முன் உள்ளது. 2013 அமைச்சரவை முடிவு செய்து 10 ஆண்டுக்கு ரூ30,000,கோடி CAPITAL INFUSION வழங்கியது. 9 ஆண்டுகளில் 27000 கோடி வழங்கியபின்னும் நட்டம் மாறவில்லை.TRP/FRP என புனரமைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. சொத்துக்களை விற்று ரூ5000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டது. அதற்காக சிறப்பு நிறுவனம் அமைக்கப்பட்டது. ரூ 534 கோடி மட்டுமே விற்பனையில் திரட்ட முடிந்தது.ரூ 330 கோடி வாடகை பெறப்பட்டுள்ளது. IIM A அறிக்கை இது வரை பொதுவெளியில் வரவேயில்லை. அது 8 அம்சங்களில் பரிந்துரை செய்துள்ளது. 58 வயது கட்டாய ஓய்வு, விருப்ப ஓய்வு, டவர் கம்பெனி செயல்பாடு, OFC தனி டிவிஷன், உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் போர்டை கண்காணிக்க வெளிக்குழு கன்சல்டன்ட் நியமிக்க பரிந்துரைத்துள்ளது. MTNL க்கு டிலாய்டி பரிந்துரை உள்ளது. ஊதிய மாற்றம் அமுலாக்கிய பின் விருப்ப ஓய்வு திட்டம் வந்தால் சரியாக இருக்கும் எனக் கூட பேசப்பட்டுள்ளது.
பொதுத்துறையில் 55 ஓய்வு வயது 34 வருடங்கள் கழித்து 58 ஆக்கப்பட்டது. 1996ல்மத்திய அரசு துறைகளில் 60 வயது ஆக்கப்பட்டது. பொதுத்துறையில் 60 வயது 1998ல் மாற்றம் செய்யப்பட்டது. NTC நிறுவன ஊதிய போர்டு ஓய்வு வயதை குறைத்தது. பின்னர் 2000ல் நலிவடைந்த நிறுவனங்கள் அமைச்சக ஒப்புதல் பெற்று ஓய்வு வயதை குறைக்கலாம் என உத்திரவு வெளியிடப்பட்டது. பின்னர் 2005ல் இந்த உத்திரவு மாற்றம் பெற்று அமைச்சரவைக்கு பொறுப்பு மாற்றப்பட்டது.
1996ல் 5 வது ஊதிய மாற்றத்திற்கு பின்னர் மத்திய அரசு FR 56 A வில் திருத்தம் செய்து ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியது.. மத்திய அரசு ஊழியராக இருந்து 2000க்கு பின் அரசு ஊழியரான நமக்கு DPE 2005 வழிகாட்டல்படி 58 வயது குறைப்பு உத்திரவு பொருந்துமா என்பது குறித்து எந்த விதியும் இல்லை. ஓய்வு வயது குறைப்பு (ROLL BACK) செய்ய விதி ஏதுமில்லை. அரசு எந்த வழிகாட்டுதல் இன்றி தன்னிச்சையாக செய்துவிட முடியாது. அப்படி செய்ய அரசு செய்ய துணிந்தால் சங்கம் போராடித்தான் மாற்றம் செய்யவேண்டும். VRS தனிநபர் விருப்பம். சங்கம் VRS கோர முடியாது. VRS பிந்தைய பிரச்சனை மிக கடுமையானது.
விருப்ப ஓய்வு திட்டத்தில் குஜராத் மாடல் 35/25 நாள். நலிவடைந்த மூடும் நிலையில் உள்ள நிறுவனம் என்றால் 45 நாள் தரலாம் என்றும் கூறப்படுகிறது. அது VSS திட்டம் 3 மாத அறிவிப்பு கொடுத்து நீக்கப்படுவார்க்ள். 25% ஓய்வுதியத்தை விட கூடுதலாக வழங்கப்படும் என்பதை திட்ட கணக்கீடுகள் பார்த்தபின்னரே கூறமுடியும்.2018 DPE வழிகாட்டுதல் விருப்ப ஓய்வு பெற்று இன்சண்டிவ் பெற்றவர்களுக்கு ஊதிய மாற்ற நிலுவை கிடையாது என கூறுகிறது. முந்தைய உத்திரவுகள் நிலுவை வழங்கலாம் என கூறுகிறது. எது அமுலாகும் என பின்னர்தான் தெரியும். புனரமைப்பில் ஊழியர் செலவு குறைப்பு பிரதானமாக உள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்திற்கு ரூ 6000 கோடி தேவை. அரசு உத்திரவாதத்துடன் பாண்ட் வெளியிட்டு பின்னர் நிதி பெற்று வழங்க பரிசீலிக்கப்படுகிறது. இதை அரசு ஏற்றுள்ளதாக தகவல். இதற்காக அரசு கடன் திட்டம் ஏதும் பரிசீலிக்கப்படவில்லை.
29/10/2015 DPE வழிகாட்டுதல்படி வர்த்தக / நிதி, இயக்கம் என திட்டம் அமைச்சரவை வகுக்கவேண்டும்.மேலும் கடன் சீரமைப்பு, CAPEX / OPEX ஓய்வுதிய கொடை ஆகியவற்றை சிறப்பு நிறுவனம் சொத்தை விற்பதன் மூலம் செயல்படுத்த திட்டமிடப்படுகிறது.
4ஜி பெற ரூ 14000 கோடி மற்றும் 4 ஜி டவர் நிர்மாணிக்க செலவு 5 ஜி மாற்ற செலவு என நிதி வேண்டும்.
2018ல் 4ஜி சிம் 35 கோடி மூன்று நிறுவனங்களிலும் சேவை தரப்பட்டுள்ளது. வரும் 2024ல் 56 கோடி வாடிக்கையாளர்களில் BSNL லின் 3.5 கோடி வாடிக்கையாளர்க்கு ரூ25000 கோடி செலவு தேவையா என விவாதிக்கப்படுகிறது. 4ஜி யில் 85% டேட்டா, 13% 2ஜி டேட்டா, 2 ஜி டேட்டா 2% என சேவை உள்ளது.
ஓய்வூதிய மாற்றம் அடுத்த முக்கியமான பிரச்சனை. ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றதுடன் இணைக்காமல் பிரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஆனால் DOT மற்றும் அமைச்சகம் ஏற்கவில்லை. ஓய்வூதிய மாற்றம் ஊதிய மாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
BWA அலைகற்றை பணம் காலதாமதாக வழங்கபட்டதால் ரூ3500 கோடி DOT, BSNL ல்க்கு வழங்க கோரி வருகிறது.
அமைச்சர் ரூ1000 கோடியை அவசர நிதியாக BSNL க்கு கோரி உள்ளார். IIM A பரிந்துரையில் 2019-20 மொத்த செலவு திட்ட மதிப்பில் வங்கிக் கடன் 50 % பெற்றிட LOC அரசு வழங்கிட வேண்டும். இதை நாமும் கோர வேண்டும்.
மேலும் பல தோழர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சிறப்பான உரையாக நிறைவுற்றது.
No comments:
Post a Comment