மண்ணுக்கேற்ற மாண்பு!
மரபுகளை உடைத்தெறியா மாட்சிமை!
தஞ்சையில் NFTE தடம் பதித்த வரலாறு
நாம் ஏற்கனவே கூறியவாறு தமிழகத்திலும், தஞ்சையிலும் முதலிடம் என்பதும், சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் சதவீதத்தில் வென்றிருக்கிறோம் என்பதும் உண்மையாயிருக்கிறது.
7 வது உறுப்பினர் சரிபார்ப்பு. 8 வது உறுப்பினர் சரிபார்ப்பு.
சங்கம் வாக்குகள் % சங்கம் வாக்குகள் %
NFTE 441 67.53 NFTE 311 78.14
BSNLEU 131 20.06 BSNLEU 60 15.08
சென்ற முறை EU வை விட 310 இந்த முறை 251 வாக்குகள்
வாக்குகள் கூடுதலாகப் பெற்றோம். கூடுதலாகப் பெற்றோம்.
சென்ற தேர்தலை விட NFTE சென்ற தேர்தலை விட BSNLEU
இம்முறை 10.61 % கூடுதல் இம்முறை 4.98 % குறைவாக
வாக்குகள் பெற்றுள்ளது. வாக்குகள் பெற்றுள்ளது.
இந்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம் EU மத்திய சங்கத்தின் மீதான நம்பிக்கைக் குறைவு மற்றும் செயல்பாடின்மைதான்.
என் மீது சக தோழர்கள் வைத்துள்ள நம்பிக்கை. நான் சென்ற விடமெல்லாம் என்னோடு சுற்றிச் சுற்றி வந்தார்கள், சொந்தக் காசில்.
தஞ்சையில் தலைவர்களை வைத்து கூட்டம் போட்டு விட்டோம். எனவே, மாவட்டத்தின் மைய நகரமான மன்னையில் பட்டாபியை வைத்து ஒரு கூட்டம் போடலாம் என்று நினைத்தபோது அந்தப் பணியை மன்னை கிளை ஏற்றுக் கொண்டது. அந்தப் பணிக்கு 5000 ரூபாய் நன்கொடையளித்து உதவிய தோழியர். லைலாபானு அவர்களை இந்த நேரத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன். (150 தோழர்கள் குழுமிய சிறப்பான கூட்டம் அது.)
அடுத்து சம்பளம் பெறாத நிலையில் தேர்தலை திருவிழா போல தோழர்கள் 2000, 1000, 500 என்று நிதியளித்து கொண்டாடினார்கள். அதெல்லாம் எம்மை நெகிழச் செய்த சம்பவங்கள். அதோடு
வாட்சப்பையும், பேஸ்புக்கையும் நல்ல தகவல்களோடு தினம் நிறைத்தார்கள் நம் தோழர்கள்.
வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு உங்கள் நம்பிக்கைக்குரியவனாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்!
அன்புடன்,
கா. கிள்ளிவளவன், தஞ்சை.
22-09-19.
No comments:
Post a Comment