தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, December 31, 2012



புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆண்டாண்டு புத்தாண்டு          அகன்றிடும் வாய்ப்புகள்
அழகாய்த்தான் வருகிறது.        அருகருகே இருந்தும் நமது
நல்லதொரு வாழ்த்தும்           அக்கறைக்குறைவாலே
நயமாகக் கிடைக்கிறது.          ஆட்கொள்ளமுடியவில்லை.

நடக்கும் நிகழ்வுகளில்           செய்யும் தொழிலில் நாம்
நன்மையும் இருக்கிறது.         செயல்படும் தன்மையில்
தீமையும் இருக்கிறது.           வாழ்வளித்த துறையில்
கொடுமை நிகழ்வுகளும்         வளம் தந்த இயக்கத்தில்
தினம் கூடித்தான் போகிறது.     அக்கறை கொண்டிடுவோம்!

அறிவு வளர்ச்சியிலும் நமக்கு    கொள்கையில், கொடியில்
அணுவளவும் குறையில்லை.     ஆழப் பற்று வைப்போம்!
தோழமைப் பயிற்சியிலும்        அழகான நம் தேசத்தை,
தொய்வேதும் ஏற்படவில்லை.    அசிங்கப்படுத்துவோரை
ஆனாலும் சிக்கல்               அழிக்க எண்ணுவோரை
அடிக்கடி ஏன் வருகிறது?        அம்பலப்படுத்திடுவோம்!

பூவுலக மாற்றமோ பெரும்       எத்தனை காலம்
பீதியைக் கிளப்புகிறது,           இப்படி வாழ்ந்தோம்!
இது உலகளாவியதென்றாலும்    இனி வருங்காலம்
உள்ளுர நம்மை வதைப்பதேன்?   எப்படி வாழ்வோம்!

கேள்விகள் அனைத்துக்கும்       இந்தச் சிந்தனையே
பதில்களும் இருக்கிறது. கற்ற    நம்மை இனிதாய் மாற்றும்.
பாடமும் இருக்கிறது.            இரண்டாயிரத்து பதிமூன்று
ஆயினும் சிக்கல்கள்            இரட்டிப்பு மகிழ்ச்சி தர
அகலாதது எதனால்?            இயல்பாய் வாழ்த்துகிறேன்!

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை
கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சலிக் கூட்டம் 


நாள்: 02-01-2013  புதன் காலை 11 மணி.      இடம்: GM அலுவலகம், தஞ்சை.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை, தொடர் இறப்பு இவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் , அஞ்சலிக் கூட்டமும் அனைத்து பெண் ஊழியர்களின் சார்பாக நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவண், 
A. லைலாபானு, 
தமிழ் மாநில மகளிர் ஒருங்கிணப்பாளர், NFTE,
தஞ்சாவூர்.  

Thursday, December 27, 2012

எல்லாமே புதிதாக ................ 2013
     நமது அகில இந்திய, மாநிலச் சங்கத் தலைமை மற்றும்  அகில இந்திய தொழிற்சங்கத் தலைவர் தோழர் குருதாஸ்தாஸ் குப்தா ஆகியோர்களின் தொடர் முயற்சியால் இன்றைக்கு புதிய அங்கீகார விதிகளில் மாற்றம் வந்துள்ளது.   ஒற்றுமைக்கும், உறுதிப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகவே இதைக் கருதலாம்.    இந்த வெற்றிக்கு உழைத்த தலைவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது தஞ்சை மாவட்டச் சங்கம். 
தோழமையுடன், 
T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர், தஞ்சை   

புதிய அங்கீகாரவிதிகள்-அறிவிப்பு

புதிய அங்கீகார விதிகள் 26/12/2012 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நமது சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து முன் வைத்த ஆலோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.
சில முக்கிய அம்சங்கள்-
     ரகசிய வாக்கடுப்பு
    50% வாக்கு பெற்றவர்கள் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.
3     35% வாக்கு பெற்றவர்கள்  முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
4      15% வாக்கு பெற்றவர்கள் இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
அனைத்து பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் - முதல் மற்றும் இரண்டாவது சங்கங்களுடன் நடத்தப்படும்.  இரு சங்கமும் இணையாக கருதப்படுவார்கள்.
2% வாக்கு பெற்ற சங்கங்களுக்கு  குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் 50% வாக்கு பெற்றவர்கள் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.
அங்கீகார காலம் 3 வருடமாக இருக்கும்.
தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 14 மட்டுமே. முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம் செயலர் பதவியையும், இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தலைவர் பதவியையும் வைத்துக்கொள்ளலாம்.
47% வாக்கு பெற்றவர்களுக்கு 7 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 
35% வாக்கு பெற்றவர்களுக்கு 6 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



 

Monday, December 24, 2012

பிறர் முதுகுக்குப் பின்னால்

 நாம் செய்ய வேண்டிய வேலை 

தட்டிக் கொடுப்பது மட்டும் தான்.

புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது 

இன்னொருமுறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 



காரைக்குடி அய்யர் காலமானார் 

     அனைவராலும் அன்பொழுக அய்யர் என்றழைக்கப்படும் தோழர் வெங்கடேசன் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.    நமது மாநில மாநாட்டுக்கு வருகை தந்த அந்த தோழர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை.  மாவட்டச் செயலராக இருந்து செயல்பட்ட அந்த எழுச்சியான காலம்  இன்னும் நம் கண்களில் நிழலாடுகிறது.   எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவரையே வலம் வந்து கொண்டிருக்கும் தோழர்களுக்கு குறிப்பாக மாரி, முருகனுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் இது ஒரு பேரிழப்பு.     காரைக்குடி தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் தஞ்சை மாவட்டச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. 
http://file1.hpage.com/003027/35/bilder/dsc_2215.jpg

Sunday, December 23, 2012


‎'மனிதரில் புனிதர்' கக்கன் அவர்களின் நினைவுதினம் இன்று(டிசம்பர் 23)...

இன்றைய இளைய தலைமுறையினருக்கு நம் பாரதத் திருநாட்டில், சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், பின்பும், அரசியல் வாழ்க்கையை தவமாய் எண்ணி வாழ்ந்த உத்தமர் கக்கன்

கக்கன்.. காலம் முற்றாக மறந்துவிட்ட பெயர். மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டாகிறது. காமராஜரையே மறந்துவிட்ட காங்கிரஸ்காரர்கள் கக்கனையா நினைவில் நிறுத்திப் போற்றப் போகிறார்கள்? பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.

'மனிதரில் புனிதர்' கக்கன் அவர்களின் நினைவுதினம் இன்று(டிசம்பர் 23)...

இன்றைய இளைய தலைமுறையினருக்கு நம் பாரதத் திருநாட்டில், சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், பின்பும், அரசியல் வாழ்க்கையை தவமாய் எண்ணி வாழ்ந்த உத்தமர் கக்கன்

கக்கன்.. காலம் முற்றாக மறந்துவிட்ட பெயர். மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டாகிறது. காமராஜரையே மறந்துவிட்ட காங்கிரஸ்காரர்கள் கக்கனையா நினைவில் நிறுத்திப் போற்றப் போகிறார்கள்? பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.
சத்தியமூர்த்தி காமராஜரை தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார்.

 மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.

காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான்முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனைத்தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்துஅமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு,அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.
பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். 

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.
மனிதப் புனிதர் கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார்.

 வலிமைமிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோதுதன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

இன்று அந்த இடம் 50 லட்சத்துக்கு மேல் பெறும். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது. அவருக்குத் தனியாக ஒரு சமாதி வைக்கவில்லை நாம். ‘இன்று கக்கனை யார் நினைக்கிறார்கள்? அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்டோர் காலத்தில்.. அதுவும் தோட்டி மகனாகப் பிறந்ததுதான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்னும் வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். பத்தரை மாற்றுத் தங்கம் – புடம்போட்ட கக்கனை விட உயர்ந்தவர்கள் தமிழகத்தில் இதுவரை எவருமில்லை. இனியும் பிறக்கப் போவதும் இல்லை. இது சத்தியம்!

நன்றி; V.R.P.மனோகர் 

 www.thangampalani.com...

Friday, December 21, 2012

TMTCLU 

தமிழ் மாநில தொலைத் தொடர்பு
 ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் 
தஞ்சை மாவட்டம்.

வணங்கி வாழ்த்துகிறோம்!

தமிழ் மாநிலச் சங்கத்தின் புதிய மாநிலச் செயலராக 
தோழர். பட்டாபிராமன் அவர்கள் 
மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

எங்கள் மாநிலச் செயலரோடு தாங்களும் 
இணைந்து செய்திட்ட உதவிகள் 
எங்கள் மாவட்டத்திற்கு மிகப் பெரிய வாய்ப்புக்களை 
அள்ளித் தந்துள்ளது.  
தஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது உயர்த்தப்பட்ட 
 DA உயர்வினால் தற்போதைய சம்பளம் 
ரூபாய் நான்காயிரத்தை தாண்டியுள்ளது. 
 ஒவ்வொரு ஆண்டும் எமது மாவட்ட மஸ்தூர் தோழர்களுக்கு 
ரூபாய் 2000 போனஸ் வழங்கி வருகிறோம்.  
ஒப்பந்தத் தொழிலாளருக்கு
 குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 10000 
வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கையை 
தங்கள் காலத்திலேயே நிறைவேற்றிட விரும்புகிறோம்.   நெகிழ்வான,நேர்மையான மாநிலச் செயலரை 
மீண்டும் பெற்று விட்டோம் என்ற மகிழ்ச்சியோடு 
உங்களை மனதார வாழ்த்துகிறேன்!

K. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்ட செயலர், TMTCLU .

Wednesday, December 19, 2012

வங்கிச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்: 
வங்கி ஊழியர்கள் நாளை ஸ்ட்ரைக்

வங்கித் துறையில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்கிப்பணிகள் நாளை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா, புதிய தனியார் வங்கிகளை நிறுவுவதற்கு வகை செய்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக 6 ஆயிரம் வங்கிக் கிளைகள் ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்படும் என்றும், இந்த நிதியாண்டில் 84 ஆயிரத்து 500 ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கிகளை இணைப்பதற்கு எதிராகவும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக, பொதுத் துறை வங்கிகளின் நான்கு முக்கிய சங்கங்கள் அறிவித்துள்ளன. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய சங்கம் ஆகியவை இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் ஐந்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வங்கிச்சேவைகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Monday, December 17, 2012

மதுரையில் நடைபெற்ற 
நான்காவது மாநில மாநாட்டில் 
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 

தலைவர்                                        : தோழர். H. நூருல்லா  TM / சேலம் 

துணைத் தலைவர்கள்           : தோழர்.  M. லட்சம் STS / மதுரை.
                                                              தோழர்.  S. மனோகரன் TSO / திருச்சி 
                                                              தோழர். P. ராஜா TM / சேலம் 
                                                              தோழியர். P. பரிமளம் STS / கடலூர்
                                                              தோழர். V. லோகநாதன் STS  / கடலூர்    

செயலர்                                          :  தோழர். R . பட்டாபிராமன் STS / சென்னை

துணைச் செயலர்கள்          : தோழர். P. சென்னகேசவன்.  TTA / வேலூர் 
                                                               தோழர்.  L. சுப்பராயன் STS / கோவை 
                                                               தோழர்.   A. ராபர்ட் TM / கோவை 
                                                               தோழர். K. நடராஜன் TTA / தஞ்சாவூர் 
                                                               தோழர்.  G .S . முரளிதரன்  SS /CGM/ சென்னை 
                                                               தோழர். P. சுந்தரம் TM / திருச்சி 
                                                               தோழர். M. யாசின் அலிகான் TM / ஈரோடு 

பொருளாளர்                             :   தோழர். K. அசோகராஜன் TM / பாண்டிச்சேரி 

அமைப்புச் செயலர்கள்       :  தோழர். C. விஜயரங்கன் STS / மதுரை 
                                                             தோழர்.  S. சங்கர் SSS / திருநெல்வேலி 
                                                             தோழர்.  N. அன்பழகன் STS / கடலூர் 
                                                             தோழர். M. செல்வசுப்ரமணியன் STS / NGC 
                                                             தோழர்.  V. மாரி AO / காரைக்குடி 
                                                             தோழர். P. சண்முகம் STS / தென்காசி 

சிறப்பு அழைப்பாளர்கள்    :  தோழர். சேது / மதுரை 
                                                             தோழர். ஜெயபால் / கும்பகோணம் 
                                                             தோழர். R .V . ரெங்கன் / குன்னூர் 
                                                             தோழர். V. முனியன் / தருமபுரி 
மகளிர் குழுவிற்கு .               :   தோழியர் A. லைலாபானு STS / தஞ்சை   
இளைஞர் குழுவிற்கு.          :   தோழர். சுபேதார் அலிகான் / காரைக்குடி     
               

Wednesday, December 12, 2012

NFTE



NFTE-BSNL
நான்காவது மாநில மாநாட்டு முழக்கம்
மதுரை - 14-12-2012

கொடி வணக்கம்
எழுகுது பார்! எழுகுது பார்!
எங்கள் செங்கொடி எழுகுது பார்!
தொலைத் தொடர்பு தொழிலாளியின்
தொல்லை பல போக்கி நின்று
வன்மையாக திண்மையாக
வளைந்து நெளிந்து பறக்குது பார்!
வலிவோடும், பொலிவோடும்,
வற்றாத இளமையோடும்
வாழ வைத்த செங்கொடியே!
வணங்கி நின்று வாழ்த்துகின்றோம்

தியாகிகள் அஞ்சலி
உழைப்பவனின் உரிமையான
எட்டுமணி வேலை கேட்டு
சிக்காகோ தெருக்களிலே
இரத்தம் சிந்தி, உயிரை இழந்து
போராடிய தியாகிகளே!
உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்.

தேசத்தின் விடுதலைக்காக
சாதி, மத, மொழி, இன
அரசியல் பேதமின்றி
போராடிய தலைவர்களே!
தியாகிகளே, தோழர்களே
வீர வணக்கம் செய்கின்றோம்.

தபால் தந்தி தொழிலாளியின்
உரிமைக்கான போராட்டத்தில்
மரியானில், பொங்கைகானில்
பத்தான்கோட்டில், பிக்கானீரில்
கான்பூரில், காசியாபாத்தில்
குண்டடிபட்ட தோழர்களே!
உங்களுக்கெங்கள் வீர வணக்கம்.

தபால் தந்தி பேரியக்கத்தை
கண்ணின் மணி போல் காத்து மறைந்த
தாரபாதா, ஹென்றிபாட்டன்,
தாதாகோஸ், கே.ஜி போஸ்
தன்னேரில்லா தோழர் ஜெகனே
உங்களுக்கெங்கள் வீர வணக்கம்.

விவசாயிகள், தொழிலாளிகளின்
விடியலுக்கான போராட்டத்தில்
ஈடுபட்டு இன்னுயிரீந்த
தலைவர்களே, தோழர்களே
உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.

சாதனைகள்
நமது துறைக்கு முதன் முதலாய்
போனசைப் பெற்றுத் தந்து,
சம்பள மாற்றத்திலே
40 சத உயர்வைத் தந்து,
மஸ்தூர்கள், ஆர்.டி.பிக்கள்
ஒன்றரை லட்சம் தோழர்களை
நிரந்தரம் செய்து வாழ்வளித்து,
இருக்கின்ற இடத்திலேயே
பதவி உயர்வு வாய்ப்பும் தந்து,
துறை வருவாய் வளர்ச்சியிலும் 
தூணாய் நின்ற தலைவர்களே
உங்களை நாங்கள் நெஞ்சார
வணங்குகின்றோம்! வாழ்த்துகின்றோம்.

குப்தாவின் படைவரிசையாய்
வாழ்வும், வளமும், ஜீவனுமாய்
வாழ்ந்து மறைந்த தோழர் ஜெகனின்
உயிரோட்டமுள்ள தோழர்களாய்,
இயக்கத்திற்கு அப்பால்தான்
மற்றெல்லா செயல்பாடும்
என்கின்ற தன்மை உடையவராய் 
உழைத்திட நாம் சபதமேற்போம்.

மதுரையின் மாநாடு
மகத்தான மாநாடு.
உன்னதமான மாற்றத்தை
உருவாக்கும் மாநாடு.
தமிழகத்து முன்னேற்றத்தில்
தடம் பதித்த தலைவர்களை,

விளைவித்த மாநாடு.
வெல்லட்டும்! வெல்லட்டும்.

தமிழகத்திற்கு சிறப்பு சேர்க்கும் 
தனித்த முத்திரையோடு,
ஜெகன் இல்லம் கண்ட பின்னே 
கூடுகின்ற மாநாட்டுக்கு.
வருகின்ற தோழர்களே!
வாருங்கள்! வாருங்கள்!!
வளமை சேர்ப்போம் தமிழகத்தில்.

உலகத்து போலீஸ்காரன்
உலகில் பெரும் கடன்காரன்
அமெரிக்காவின் அடாவடிக்கு 
அடிபணியும் காங்கிரசை 
அம்பலப்படுத்தி எதிர்கொள்வோம்.

தனியார் மயம், தாராளமயம்,
உலக மயம் விளைவித்த
பேரபாய கொள்கைகளை
இந்தியா கைவிட
இணைந்து நாம் குரல் கொடுப்போம்.

அள்ள அள்ளக் குறையாது,
திருடத் திருட சளைக்காது,
வாரி வழங்கும் காமதேனு
நமது இந்திய தேசத்தை
அரசியல் பெருச்சாளிகள்,
ஊழல் ஜாம்பவான்கள்,
மத வெறி சக்திகள்
மேலும், மேலும் கொள்ளையடிப்பதை
எத்தனை நாட்கள் பொறுத்திருப்போம்.
எதிர்த்து நிற்கும் சக்திகளோடு
போராடும் அமைப்புகளோடு
தொடர்ந்து குரல் கொடுத்த நாம்
தீவிரமான போருக்கும்
தயாராவோம் தோழர்களே!

வேலை வாய்ப்பை முடக்கி விட்டு
ஒப்பந்த அடிப்படையில்
ஊழியர்களை ஒட்டச் சுரண்டும்
மத்திய அரசின் கொள்கையினை
ஒழித்துக் கட்ட சபதமேற்போம்.

ஒப்பந்த ஊழியருக்கு
குறைந்த பட்சம் 10,000
தந்திட வேண்டும் என்ற நீதியை
மறுக்கின்ற மத்திய அரசை
கண்டிப்போம், வெற்றி கொள்வோம்.

இரண்டரை லட்சம் கோடிக்கு மேலே
வரி பாக்கியை வசூலிக்க
வக்கில்லாத மத்திய அரசை
இனியும் ஆள விடலாமா?

20 லட்சம் கோடிக்கு மேலே
சுவிஸ் வங்கியில் இருக்கின்ற 
கருப்புப் பணத்தை வெளிக் கொணர 
மனமில்லாத மத்திய அரசு 
இனியும் நமக்கு தேவைதானா?

சிறப்புப் பொருளாதார மண்டலம்
என்கின்ற பேராலே
உழைக்கும் மக்களின் நிலங்களை
பன்னாட்டு கம்பெனிகளுக்கு
தாரை வார்க்கும் மத்திய அரசின்
ஆட்சி இனியும் தொடரலாமா?

நாளான்றுக்கு இருபது ரூபாய் 
வருமானத்தை வைத்துக்கொண்டு 
80 கோடி மக்கள் இங்கே  
வாழ்க்கையை நடத்தும் போது
அம்பானிக்கு வீடு மட்டும் 
ஒன்பதாயிரம் கோடியிலே!
இந்தக் கொடுமை தொடரலாமா!

பங்கு விற்பனை என்ற பெயரால்
தேசத்தின் கஜானாவை
நிரப்புகின்ற பொதுத்துறையை
காசுக்காக, கூலிக்காக
பேரம் பேசும் மத்திய அரசு
இனியும் நமக்கு தேவைதானா?

முடை நாற்றம் எடுக்கின்ற
நிலக்கரி சுரங்க ஊழலையும்
நமது துறையை பாழ்படுத்திய
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலையும்
நியாயப்படுத்தும் மத்திய அரசை
இனியும் வாழ விடலாமா?

வேற்றுமையில் ஒற்றுமை கட்டி
சாதனைகள் பல கண்ட
NFTE பேரியக்கம்
மீண்டும் வெற்றிக் கொடி நாட்ட
சபதம் ஏற்போம் தோழர்களே.

சங்கத்தின் பேராயுதம்
ஒலிக்கதிரின் மாண்புதனை
காப்பாற்றிட உழைத்திடுவோம்.
இருபதுக்கும் மேற்பட்ட
தன்னேரில்லா வலை தளங்கள்
தமிழகத்தை மட்டுமல்ல
தேசத்தையே வசப்படுத்தும்.

அகில இந்திய சங்கத்திற்கும்
ஆற்றல் கொடுக்கும் சங்கத்தை
தமிழ் மாநிலச் சங்கத்தை
மேலும் மேலும் மெருகேற்ற
கடினமாய் உழைத்திடுவோம்.

காலத்தின் தேவை கருதி 
அமைத்திட்ட அமைப்புக்கள் 
இளைஞர், மகளிர் அமைப்புக்கள் 
கலை இலக்கியப்  பிரிவுகள் 
தமிழகத்தைக் கலக்கிட 
உதவிடுவோம் தோழர்களே!    

ஆலயமாய் கோபுரமாய்
வளர்ந்து நிற்கும் சங்கத்தை
கண்ணின் மணி போல் காத்திடவும் 
களம் இறங்குவோம் தோழர்களே!!

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR