எல்லாமே புதிதாக ................ 2013
நமது அகில இந்திய, மாநிலச் சங்கத் தலைமை மற்றும் அகில இந்திய தொழிற்சங்கத் தலைவர் தோழர் குருதாஸ்தாஸ் குப்தா ஆகியோர்களின் தொடர் முயற்சியால் இன்றைக்கு புதிய அங்கீகார விதிகளில் மாற்றம் வந்துள்ளது. ஒற்றுமைக்கும், உறுதிப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகவே இதைக் கருதலாம். இந்த வெற்றிக்கு உழைத்த தலைவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது தஞ்சை மாவட்டச் சங்கம்.
தோழமையுடன்,
T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர், தஞ்சை
புதிய அங்கீகாரவிதிகள்-அறிவிப்பு
புதிய அங்கீகார விதிகள் 26/12/2012 அன்று
வெளியிடப்பட்டுள்ளது. நமது சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து முன் வைத்த ஆலோசனைகள்
ஏற்கப்பட்டுள்ளன.
சில முக்கிய அம்சங்கள்-
1
ரகசிய வாக்கடுப்பு
2
50% வாக்கு
பெற்றவர்கள் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.
3
35% வாக்கு
பெற்றவர்கள் முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட
சங்கம்
4
15% வாக்கு
பெற்றவர்கள் இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
அனைத்து
பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் - முதல் மற்றும் இரண்டாவது சங்கங்களுடன்
நடத்தப்படும். இரு சங்கமும் இணையாக கருதப்படுவார்கள்.
2% வாக்கு பெற்ற சங்கங்களுக்கு
குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் 50% வாக்கு
பெற்றவர்கள் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.
அங்கீகார காலம் 3
வருடமாக இருக்கும்.
தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு
உறுப்பினர்கள் 14 மட்டுமே. முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம் செயலர்
பதவியையும், இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தலைவர் பதவியையும் வைத்துக்கொள்ளலாம்.
47% வாக்கு பெற்றவர்களுக்கு
7 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள்
35% வாக்கு பெற்றவர்களுக்கு
6 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment