தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, May 11, 2012

நல்லதோர் வினை செய்த நாற்பெரும் விழா.

நல்லதோர் வினை  செய்த  நாற்பெரும்  விழா.

குடந்தை மாவட்ட மாநாடு 
மாநிலச் செயற்குழு 
சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கம்.
செயல்வீரன் சேதுவுக்கு பாராட்டு.

     08-05-2012  அன்று  காலை 11 மணிக்கு  தேசியக் கொடி  மற்றும் சங்கக்  கொடியேற்றத்துடன் துவங்கிய  மாவட்ட மாநாட்டை  தலைவர் குடந்தை. ஜெயபால் அவர்கள்  தலைமையேற்று  நடத்தினார்.    அற்புதமான துவக்க
வுரையை தோழர் மதுரை சேது வழங்கினார்.    மாநாடு நிகழ்வில் EACH LAND LINE WITH BROAD BAND எனும்  கருத்தரங்கம்  சிறப்பாக  நடைபெற்றது.    மாநாட்டில்   புதிய பொறுப்பாளர்களாக  கீழ்க்கண்ட  தோழர்கள் ஒரு மனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

தலைவர்: T. P.  ஜோதி TM- நாகை
           செயலர்: C. கணேசன்  TM- குடந்தை
               பொருளர்: K. சிவக்குமார் SS(O)- குடந்தை
  
 மாலை 6 மணிக்கு  தலைவர்  தமிழ்மணி  அவர்களின்  தலைமையில்  துவங்கிய தமிழ் மாநில செயற்குழு நள்ளிரவு 12 மணி  வரை  நடைபெற்று  மறு  நாள் காலையும் தொடர்ந்து நடைபெற்றது.  
     மாநிலச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
      வருகிற செப்டம்பரில் மதுரையில் மாநில மாநாட்டை நடத்துவது.      
மாநிலச் சங்க கட்டிட பராமரிப்பு பற்றிய முடிவில்   தங்குவோரிடமிருந்து  கூடுதல் கட்டணமாக ரூபாய்  50  பெறுவது  என்றும்  முடிவு   செய்யப்பட்டது. ஊழியர்கள்    மாற்றல்கள்  போன்றவைகளில்  நாம்  அணுக வேண்டிய முறை  பற்றியும்  பேசப்பட்டது.

     பின்னர் புதிய தொலைத்தொடர்புக் கொள்கை-2011 என்ற  தலைப்பில்  கருத்தரங்கம் நடைபெற்றது.  நமது தலைமைப் பொது  மேலாளர்  திரு.  அஷ்ரப்கான் அவர்களும், குடந்தை பொது மேலாளர் அவர்களும் பங்கேற்று 
கருத்துரை வழங்கினர். 
          கருத்தரங்கத்தை  மாநிலச் செயலர்  தோழர். பட்டாபி  அவர்கள்  துவங்கி  வைத்தார். அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர் C K M அகில இந்திய செயலர்  தோழர். G. ஜெயராமன், அகில இந்திய  அமைப்புச்    செயலர்  தோழர். S.S.கோபாலகிருஷ்ணன், ஈரோடு மாலி, ஓய்வூதியர்  சங்கத்தின்    அகில இந்தியத்  தலைவர் தோழர். க. முத்தியாலு, ஆகியோர் பங்கேற்று  சிறப்பித்தனர். வாழ்த்துரையில் AIBSNLEA மாவட்டச்  செயலர்  தோழர். M S R அவர்களும், முன்னாள் மாநில துணைத் தலைவர் தோழர். குடந்தை மாலி அவர்களும் பங்கேற்றனர். 
           
 இறுதியில் தோழர் சேதுவுக்கு பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  சேதுவின்  துணைவியார் தோழியர். நாச்சியார் அவர்களும் மகிழ்வோடு   பங்கேற்றார்.  அவருடைய கடந்த கால செயல்பாடுகள்,  பங்களிப்புகள்  குறித்த  தலைவர்களின் பாராட்டுரைகள் தோழர்களை  நெகிழ்வுக்கு  ஆளாக்கியது.   தோழர்.சேதுவின் ஏற்புரை பங்கேற்றவர்களுக்கு செயலூக்கத்தை   உருவாக்கியது.   மாநாட்டுக்கு நமது  மாவட்டச்  செயலர் தோழர். பன்னீரோடு  ஏராளமான தஞ்சை, பட்டுக்கோட்டைத்  தோழர்கள் பங்கேற்றனர்.   
     விழாவின் ஒவ்வொரு  நிகழ்வையும்  குடந்தைத் தோழர்கள்  பார்த்துப்  பார்த்து  அமைத்திருந்தனர். விழாவில்  கவுரவித்து அளிக்கப்பட்ட  ஷீல்டுகள்  மிக  அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
   தோழர்கள் ஜெகனும், குப்தாவும் இள  வயதில்  குடந்தை  மாநாட்டுக்கு  வந்திருந்தபோது எடுத்த படம் (கருப்பு வெள்ளையில்) ஷீல்டில் அழகுற  ஒளிர்ந்தது. அற்புதமான    HIGH CLASS VEGETARIYAN MEALS & TIFFIN இரண்டு நாளும் தோழர்களுக்கு தழைய,  தழைய கனிவோடு படைக்கப்பட்டது. 
      
மொத்தத்தில் நல்லதோர் வினை செய்ய 
நமக்கு ஆதர்சமாய் நின்ற நாற்பெரும் மாநாட்டினை 
நன்றியோடு வாழ்த்துகிறோம்.  

அன்புடன், 
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR