கால வரையற்ற வேலை நிறுத்தம்
அனைத்துச் சங்க அறைகூவல்
28-05-2012 அன்று மாலை டெல்லியில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை நிர்வாகம் உடன் தீர்த்து வைக்கக் கோரி கீழ்க்கண்டவாறு போராட்டத் திட்டங்களை வடிவமைத்துள்ளது. இக் கூட்டத்தில் FNTO பங்கேற்கவில்லை.
- 31/05/2012 அன்று கிளைகள் தோறும்
ஆர்ப்பாட்டம் நடத்துதல்.
- 06/06/2012 அன்று மாவட்ட
தலைமையகங்களில் பெருந்திரள் தர்ணா.
- 13/06/2012 அன்று முதல் கால வரையற்ற
வேலை நிறுத்தம்.
கோரிக்கைகள்
1 78.2 சதவீத IDA வை இணைத்திட வேண்டும்.
2 பறிக்கப்பட்ட மெடிக்கல் அலவன்ஸ்,LTC ஆகியவற்றை மீட்பது.
3 LTCசலுகையைப் பயன்படுத்தும்போது பெறப்பட்ட லீவ்
என்கேஷ்மெண்ட்டை மீட்பது.
4 BSNLன் நிதி ஆதாரத்தை மேம்படுத்த ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிதி உதவிகளை திரும்பப் பெறுவது.
5 BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகளை விடுவிப்பது.
கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள், தோழர்கள் போராட்டத்தை வெற்றிகரமாக்க நடத்திட திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டுகிறோம்.
இவண்,
எஸ். பிரின்ஸ் டி. பன்னீர்செல்வம், டி. பக்கிரிசாமி
மாவட்டத் தலைவர். மாவட்டச் செயலர். மாவட்டப் பொருளர்.
No comments:
Post a Comment