NFTE-BSNL
நான்காவது மாநில மாநாட்டு முழக்கம்
மதுரை - 14-12-2012
கொடி வணக்கம்
எழுகுது பார்! எழுகுது பார்!
எங்கள் செங்கொடி எழுகுது பார்!
தொலைத் தொடர்பு தொழிலாளியின்
தொல்லை பல போக்கி நின்று
வன்மையாக திண்மையாக
வளைந்து நெளிந்து பறக்குது பார்!
வலிவோடும், பொலிவோடும்,
வற்றாத இளமையோடும்
வாழ வைத்த செங்கொடியே!
வணங்கி நின்று வாழ்த்துகின்றோம்
தியாகிகள் அஞ்சலி
உழைப்பவனின் உரிமையான
எட்டுமணி வேலை கேட்டு
சிக்காகோ தெருக்களிலே
இரத்தம் சிந்தி, உயிரை இழந்து
போராடிய தியாகிகளே!
உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்.
தேசத்தின் விடுதலைக்காக
சாதி, மத, மொழி, இன
அரசியல் பேதமின்றி
போராடிய தலைவர்களே!
தியாகிகளே, தோழர்களே
வீர வணக்கம் செய்கின்றோம்.
தபால் தந்தி தொழிலாளியின்
உரிமைக்கான போராட்டத்தில்
மரியானில், பொங்கைகானில்
பத்தான்கோட்டில், பிக்கானீரில்
கான்பூரில், காசியாபாத்தில்
குண்டடிபட்ட தோழர்களே!
உங்களுக்கெங்கள் வீர வணக்கம்.
தபால் தந்தி பேரியக்கத்தை
கண்ணின் மணி போல் காத்து மறைந்த
தாரபாதா, ஹென்றிபாட்டன்,
தாதாகோஸ், கே.ஜி போஸ்
தன்னேரில்லா தோழர் ஜெகனே
உங்களுக்கெங்கள் வீர வணக்கம்.
விவசாயிகள், தொழிலாளிகளின்
விடியலுக்கான போராட்டத்தில்
ஈடுபட்டு இன்னுயிரீந்த
தலைவர்களே, தோழர்களே
உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.
சாதனைகள்
நமது துறைக்கு முதன் முதலாய்
போனசைப் பெற்றுத் தந்து,
சம்பள மாற்றத்திலே
40 சத உயர்வைத் தந்து,
மஸ்தூர்கள், ஆர்.டி.பிக்கள்
ஒன்றரை லட்சம்
தோழர்களை
நிரந்தரம் செய்து
வாழ்வளித்து,
இருக்கின்ற
இடத்திலேயே
பதவி உயர்வு
வாய்ப்பும் தந்து,
துறை வருவாய்
வளர்ச்சியிலும்
தூணாய் நின்ற
தலைவர்களே
உங்களை நாங்கள்
நெஞ்சார
வணங்குகின்றோம்!
வாழ்த்துகின்றோம்.
குப்தாவின்
படைவரிசையாய்
வாழ்வும், வளமும், ஜீவனுமாய்
வாழ்ந்து மறைந்த
தோழர் ஜெகனின்
உயிரோட்டமுள்ள
தோழர்களாய்,
இயக்கத்திற்கு
அப்பால்தான்
மற்றெல்லா
செயல்பாடும்
என்கின்ற தன்மை
உடையவராய்
உழைத்திட நாம்
சபதமேற்போம்.
மதுரையின் மாநாடு
மகத்தான மாநாடு.
உன்னதமான மாற்றத்தை
உருவாக்கும் மாநாடு.
தமிழகத்து
முன்னேற்றத்தில்
தடம் பதித்த
தலைவர்களை,
விளைவித்த மாநாடு.
வெல்லட்டும்!
வெல்லட்டும்.
தமிழகத்திற்கு
சிறப்பு சேர்க்கும்
தனித்த முத்திரையோடு,
ஜெகன் இல்லம் கண்ட பின்னே
கூடுகின்ற
மாநாட்டுக்கு.
வருகின்ற தோழர்களே!
வாருங்கள்!
வாருங்கள்!!
வளமை சேர்ப்போம்
தமிழகத்தில்.
உலகத்து போலீஸ்காரன்
உலகில் பெரும்
கடன்காரன்
அமெரிக்காவின்
அடாவடிக்கு
அடிபணியும் காங்கிரசை
அம்பலப்படுத்தி
எதிர்கொள்வோம்.
தனியார் மயம், தாராளமயம்,
உலக மயம் விளைவித்த
பேரபாய கொள்கைகளை
இந்தியா கைவிட
இணைந்து நாம் குரல்
கொடுப்போம்.
அள்ள அள்ளக் குறையாது,
திருடத் திருட
சளைக்காது,
வாரி வழங்கும்
காமதேனு
நமது இந்திய தேசத்தை
அரசியல்
பெருச்சாளிகள்,
ஊழல் ஜாம்பவான்கள்,
மத வெறி சக்திகள்
மேலும், மேலும்
கொள்ளையடிப்பதை
எத்தனை நாட்கள்
பொறுத்திருப்போம்.
எதிர்த்து நிற்கும்
சக்திகளோடு
போராடும்
அமைப்புகளோடு
தொடர்ந்து குரல்
கொடுத்த நாம்
தீவிரமான போருக்கும்
தயாராவோம் தோழர்களே!
வேலை வாய்ப்பை
முடக்கி விட்டு
ஒப்பந்த அடிப்படையில்
ஊழியர்களை ஒட்டச்
சுரண்டும்
மத்திய அரசின்
கொள்கையினை
ஒழித்துக் கட்ட
சபதமேற்போம்.
ஒப்பந்த ஊழியருக்கு
குறைந்த பட்சம் 10,000
தந்திட வேண்டும் என்ற
நீதியை
மறுக்கின்ற மத்திய
அரசை
கண்டிப்போம், வெற்றி கொள்வோம்.
இரண்டரை லட்சம்
கோடிக்கு மேலே
வரி பாக்கியை
வசூலிக்க
வக்கில்லாத மத்திய
அரசை
இனியும் ஆள விடலாமா?
20 லட்சம் கோடிக்கு
மேலே
சுவிஸ் வங்கியில்
இருக்கின்ற
கருப்புப் பணத்தை
வெளிக் கொணர
மனமில்லாத மத்திய
அரசு
இனியும் நமக்கு தேவைதானா?
சிறப்புப் பொருளாதார
மண்டலம்
என்கின்ற பேராலே
உழைக்கும் மக்களின்
நிலங்களை
பன்னாட்டு
கம்பெனிகளுக்கு
தாரை வார்க்கும்
மத்திய அரசின்
ஆட்சி இனியும்
தொடரலாமா?
நாளான்றுக்கு இருபது
ரூபாய்
வருமானத்தை
வைத்துக்கொண்டு
80 கோடி மக்கள் இங்கே
வாழ்க்கையை நடத்தும்
போது
அம்பானிக்கு வீடு
மட்டும்
ஒன்பதாயிரம்
கோடியிலே!
இந்தக் கொடுமை
தொடரலாமா!
பங்கு விற்பனை என்ற
பெயரால்
தேசத்தின் கஜானாவை
நிரப்புகின்ற
பொதுத்துறையை
காசுக்காக, கூலிக்காக
பேரம் பேசும் மத்திய
அரசு
இனியும் நமக்கு
தேவைதானா?
முடை நாற்றம்
எடுக்கின்ற
நிலக்கரி சுரங்க
ஊழலையும்
நமது துறையை
பாழ்படுத்திய
2 ஜி ஸ்பெக்ட்ரம்
ஊழலையும்
நியாயப்படுத்தும்
மத்திய அரசை
இனியும் வாழ விடலாமா?
வேற்றுமையில் ஒற்றுமை
கட்டி
சாதனைகள் பல கண்ட
NFTE பேரியக்கம்
மீண்டும் வெற்றிக்
கொடி நாட்ட
சபதம் ஏற்போம் தோழர்களே.
சங்கத்தின் பேராயுதம்
ஒலிக்கதிரின்
மாண்புதனை
காப்பாற்றிட
உழைத்திடுவோம்.
இருபதுக்கும்
மேற்பட்ட
தன்னேரில்லா வலை
தளங்கள்
தமிழகத்தை மட்டுமல்ல
தேசத்தையே
வசப்படுத்தும்.
அகில இந்திய
சங்கத்திற்கும்
ஆற்றல் கொடுக்கும்
சங்கத்தை
தமிழ் மாநிலச்
சங்கத்தை
மேலும் மேலும்
மெருகேற்ற
கடினமாய்
உழைத்திடுவோம்.
காலத்தின் தேவை கருதி
அமைத்திட்ட
அமைப்புக்கள்
இளைஞர், மகளிர் அமைப்புக்கள்
கலை இலக்கியப் பிரிவுகள்
தமிழகத்தைக் கலக்கிட
உதவிடுவோம் தோழர்களே!
ஆலயமாய் கோபுரமாய்
வளர்ந்து நிற்கும்
சங்கத்தை
கண்ணின் மணி போல் காத்திடவும்
களம் இறங்குவோம்
தோழர்களே!!