இமயம் சரிந்தது!
தபால் தந்தி இயக்கத்தின் உயிர் நாடியாக, தந்தையாக வாழ்ந்த தலைவர் குப்தாவை இன்று ( 06-01-2013 ) இரவு 8 மணிக்கு இழந்து விட்டோம்!
94 வயதான தலைவர் குப்தா நமக்காக மட்டுமே 80 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்!
அவரால் நாம் அடைந்த பலன்கள் சொல்லி மாளாது. வாழுகின்ற வாழ்வே அவரால் எனலாம்.
தொலைத் தொடர்பு குடும்பத்தில் அவரால் பயனடையாத சங்கமோ, நபரோ இருக்க முடியாது.
நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த சந்திரசேகர், ஜெகன் வரிசையில் பேரிழப்பாக இன்றைக்கு தோழர் குப்தாவையும் இழந்திருக்கிறோம்!
எப்போதாவது பார்த்த, பழகிய நமக்கே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அவரோடு கலந்த தலைவர்களுக்கு ..... .
தோழர்களே!
தலைவருக்காக!
கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுங்கள்!
அனைத்துச் சங்கத்தையும் இணைத்து அஞ்சலிக் கூட்டம் நடத்துங்கள்!
சாதனைகளை பேசுங்கள்!
வேதனைகளையும் கொட்டுங்கள்!

குப்தாவின் சிந்தனையை, எதிர்பார்ப்பை நனவாக்க சபதமெடுங்கள்.
வேண்டாம் உறுதியெடுங்கள் போதும்.
அவரின் ஆன்மா சாந்தியடையும்.
No comments:
Post a Comment