எல்லாம் வல்ல NFTE
அருமைத் தோழர்களே தோழியர்களே
அனைவருக்கும் வணக்கம். வருகிற 16-04-13 அன்று 6 வது சரிபார்ப்புத்
தேர்தல் நடைபெறவிருக்கிறது. 15 ஆம்
எண்ணில் நமது வாக்கைச் செலுத்த வேண்டும். கடந்த தேர்தலுக்கும் இத் தேர்தலுக்கும்
நிறைய மாற்றங்கள் உள்ளது என்பதை இத் தருணத்தில் கூற விரும்புகிறோம். புதிய அங்கீகார விதிகள் நமக்கு அத்தகைய
வாய்ப்பைத் தந்திருக்கிறது.
1.
50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற சங்கம்தான்
ஒரே அங்கீகரிக்கப்பட்ட சங்கம். (சென்ற
தேர்தலில் BSNLEU வே 50 சதவீதம் பெறவில்லை என்பதை நினைவில் கொள்க.)
2. அடுத்து 35 சதவீதத்துக்கு மேற்பட்ட சங்கம் முதன்மை
அங்கீகரிக்கப்பட்ட சங்கம், 15 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்றவர்கள் 2 வது
முதன்மைச் சங்கம். இந்த 2 சங்கமும் பேச்சு
வார்த்தை, உடன்பாடு போன்றவைகளில் சம உரிமை உள்ளவையே.
3. 2 சதவீதம் வாக்குகளைப் பெற்றவர்களுக்கு சந்தா பிடித்தம்
செய்து தருவது போன்ற குறைந்தபட்ச சலுகைகள் கிடைக்கும்.
4. அதிக வாக்குகளைப் பெற்ற சங்கத்திலிருந்து செயலரும், அதற்கு
அடுத்த சங்கத்திலிருந்து தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அதாவது வெற்றி பெற்ற NFTE மற்றும் BSNLEU இவைகளில் யார் செயலர்? யார் தலைவர்? என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தலே அது.
செயலர் என்ற பொறுப்புதான் முக்கியமான பொறுப்பு. அதாவது எதனையும் தீர்மானிக்கும் பொறுப்பு.
இந்த பொறுப்புக்கு பொறுப்பானவரை தேர்ந்தெடுப்பதுதான் நமது கடமை.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட BSNLEU சங்கம் நமது துறைக்கு, தொழிலாளிக்கு ஏமாற்றத்தை, துரோகத்தை செய்திருக்கிறது என்பதை நாமறிவோம். ஏன்? அவர்கள் இத் துரோகத்தை நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களித்த தோழர்களுக்கும் செய்ய வேண்டும்? காரணம் வேறு ஒன்றுமல்ல!
பதவி ஆசையும், பணம் சம்பாதிக்கும் ஆசையும்தான்! இதோடு திறமையின்மையும், குப்தா, ஜெகன், சந்திரசேகர் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தலைமையின்மையும் ஒரு காரணம். நமக்கு 40 % சம்பள உயர்வு பெற்றுத் தந்த இந்திரஜித்குப்தா போன்ற உயர்தர அரசியல் தலைவர்களும் அவர்களிடம் இல்லை! எல்லாவற்றிற்கும் மேல் தவற்றை ஒப்புக்கொண்டு முன்னேறும் தன்மையும் இல்லை!
இன்றைக்கு நம்மிடம் இருப்பது CL - EL - GPF - சம்பளம் போன்றவைதான். இதில் GPF தாமதமாக்கப்பட்டுவிட்டது. சம்பளம் வருவது கேள்விக்குறி என்ற பய உணர்வையும் உருவாக்கிவிட்டார்கள்.
நாம் பெற்றவைகள் எல்லாம் (போராடி) இன்று இல்லாமல் போனது யார் காலத்தில்? லேசாக அசைபோடுவோம்.
- 2004 வரை இத் துறை பெற்று வந்த லாபம் ஆண்டுக்கு 10000 கோடி என்பது BSNLEU காலத்தில் இல்லாமல் போனது என்பது மட்டுமல்ல 9000 கோடி நட்டத்தில் வந்து விட்டது. (குதிரை குப்புற தள்ளியது மட்டுமல்ல குழியையும் பறித்த கதைதான்.) அதேபோல் நமது துறை கையிருப்பில் வைத்திருந்த 45000 கோடி ரூபாய் BSNLEU காலத்தில் காணாமலேயே போய்விட்டதே! (இன்று கையிருப்பை கரைத்து வங்கியில் கடன் வாங்கும் அவல நிலை)
- 25 ஆண்டு காலம் அனுபவித்த போனஸ் போயே
போச்சு.
- SC-ST பதவி உயர்வுச் சலுகை அதுவும் அம்போ!
-ஆறு மாதத்தில் கிடைத்துவந்த கருணைப்பணி இன்று
எட்டாக்கனி!
- MRS என்னாச்சு?
- அதுவும் LTC மாதிரி ஓடிப் போச்சு.
- 01-01-2007 முதல் நமது தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய 78.2% DA இணைப்பு கிடைத்ததா? இதனால் இதுநாள் வரை இழந்தது எவ்வளவு? சொன்னால் வேதனை அதிகமாகும்! வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஒரு Gr. D ஊழியர் ஒரு மாதத்திற்கு ரூபாய் 2128 இழக்கிறார். 01-03-2013 வரை கிடைக்க வேண்டிய நிலுவை Rs. 1,59,600
ஒரு Gr. C ஊழியர் ஒரு மாதத்திற்கு ரூபாய் 2876 இழக்கிறார். 01-03-2013 வரை கிடைக்க வேண்டிய நிலுவை Rs. 2,15,700.
சரி BSNLEU 2004 ல் கொடுத்த வாக்குறுதிகள் நமக்கு மறந்து போய்விடுமா?
வாரம் 5 நாள் வேலை.
பரீட்சை இல்லாமல் பதவி உயர்வு.
5 பதவி உயர்வுகள் இவைகள் எல்லாம் என்னாச்சு?
இந்த சின்ன வாக்குறுதி பற்றி இப்போது பேச்சு மூச்சே இல்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
NFTE யின் துணையோடு இவைகளை சாதிக்க முடியும் என்பதால்தான் இன்றைக்கு SNATTA சங்கமும், அண்ணா தொழிற்சங்கமும் நமக்கு ஆதரவளித்திருக்கிறார்கள்!
எனவேதான் தோழர்களே! NFTE முதன்மைச் சங்கமாக வரவேண்டுமென்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்
BSNLEU, FNTO, TEPU உள்ளிட்ட அனைத்து சங்கத் தோழர்களும் மேற்கண்டவைகள் உண்மைதானா என்பதை உளமார சிந்தித்து NFTE யை ஆதரிக்க வேண்டுகிறோம்.
வாழ்வளித்த துறைக்கும், வாய்ப்பளித்த தொழிலாளிக்கும் நன்றி செலுத்த, இழந்ததை எல்லாம் மீட்க, இருக்கின்ற அனைத்தையும் காத்திட நீங்கள் NFTE க்கு ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்!
நன்றி தோழர்களே!
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை கிளை.
No comments:
Post a Comment