தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, June 25, 2014

அட்வான்ஸ் ஆகா கொடுக்கப்பட்ட போனஸ்,

கேபிள் பகுதியில் பணியாற்றும் தோழர்களுக்கு  அட்வான்ஸ் ஆகா கொடுக்கப்பட்டது போனஸ்,ஒப்பந்தகாருக்கும் ,நிர்வாகத்திற்கும் நன்றி,நன்றி. நிரந்த தொழிலாளர்களுக்கு போனஸ் மறக்கஅடிக்கபட்ட ஒன்றாகிவிட்டநிலையில்கேபிள் பகுதியில் 
பணியாற்றும்ஒப்பந்ததொழிலாளர்களுக்கு  கடந்த 20-6-2014 அன்று பழைய TENDERER SAMIYAIAH 6 மாதத்திற்கான (2013 NOV TO APRIL 2014 வரை )BONUS 
Rs 1000/ payment  செய்துள்ளார்.may  2014 முதல் 2014 sep வரையில் புதிய tenderer பாலாஜி agency payment செய்யும்.
HOUSE  KEEPING  TENDER புதிதாக விடப்படஉள்ளது.
சம்பள உயர்வு,புதிய போனஸ்,EPF,ESI,WEEKLY OFF,  
 I /D  CARD போன்றவற்றை உறுதி படுத்திட வேண்டும் ,,,,, 
  தகவல் TMTCLU மாவட்டசங்கம்   

 நாடிமுத்து  கலைசெல்வம்   R.K.ராஜேந்திரன்   
    TMTCLU மா.த          TMTCLU மா.செ                       TMTCLU மா.பொ

Tuesday, June 24, 2014

போன் மெக்கானிக் 
இலாக்காத்தேர்வு 

தமிழகத்தில் 2013ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் 50 சத காலியிடங்களுக்கான  தேர்வு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014 
  • காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம் 
  • இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II 
  • எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE  
  • 100 மதிப்பெண்கள். 
  • தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS.
  • பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 37ம் பெற வேண்டும்.
  • SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம் பெற வேண்டும்.
  • கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி 
  • தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள்: 1413
  • பொதுப்பிரிவு: 1101 - SC-208, ST =104
  • சேலத்தில் மட்டும் காலியிடங்கள் இல்லை..
  • உடல் ஊனமுற்றோர் காலியிடங்கள்: 79
  • வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40  OBC=43 SC=45 ST =45
  • தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள்..

Saturday, June 21, 2014

சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு

சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு மனநிறைவான செயற்குழு .
தேசியக்கொடி தோழியர் லைலா ஏற்றி வைத்தார்.சம்மேளனக்கொடி 
தோழர் குன்னூர் ராமசாமி ஏற்றி வைத்தார்.தோழர் பாலகுமாரன் 
மற்றும் மாநிலசங்கத்தின் சார்பாக தோழர் சென்னகேசவன்
 வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.லட்சம்தலைம ஏற்றார்
 .
தோழர் ராஜா அஞ்சலிவுரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சிநிரலை மாநில செயலர் அறிமுகம் செய்து பேசினார்.தோழர்கள் மாநிலப்பொருளாளர் அசோக்ராஜ் வரவு,செலவு கணக்கை சமர்ப்பித்தார்.தோழர்கள் கோவை சுப்பராயன்,சம்மேளன செயலர் கடலூர் ஜெயராமன் ,மதுரை சேது,சேலம் மூத்த தோழர் M.S, தமிழ்மணி,குடந்தை ஜெயபால்,சிவில் ஆறுமுகம்,CGM அலுவலக  முரளி,S.S.கோபாலகிருஷ்ணன் ,தோழர் R.K ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 

சேலம் தோழர்களின் உபசரிப்பு ,நிகழ்ச்சி ஏற்பாடு யாவும் வியக்க வைத்தது. RJCM செயல்பாடு மற்றும் பணிக்குழு பற்றிமுனனணித்தோழர்கள் தங்கள் கருத்துக்களை 

கருத்தாழமுடன் எடுத்துரைத்தனர். 450 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டனர் . மாநில/மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் முழுமையாக விவாதத்தில் கலந்து கொண்டனர் .


BSNL நிறுவனத்தின் மேல் நடத்தப்படும் தாக்குதல் ,INFRASTRUCTURE 
SHARING,HR UTILISATION,ஒலிக்கதிர் நன்கொடை ,மாவட்ட மாநாடுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டது.    
11 மாவட்டங்கள் வருகிற AUG 2014 இறுதிக்குள் மாநாடுகளை 
நடத்திட உறுதியளித்தது ,, 

ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச்செயலர் தோழர்.செல்வம் அவர்கள் 17/07/2014 அன்று சென்னையில்  நடைபெற இருக்கும் ஒப்பந்த ஊழியர் போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்தார்

Thursday, June 12, 2014

இரங்கல்


நமது அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் அகமது அவர்களின்
துணைவியார் 
திருமதி. ரஷிதா பேகம் அவர்கள் 
உடல்நலக்குறைவால் 
12-06-2014 அன்று இயற்கை எய்தினார்
என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

துணைவியாரின் பிரிவால் வாடும் தோழருக்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.
ஜூன் - 12

தோழர். விச்சாரே நினைவு தினம்


தோழர்.விச்சாரே
வீழ்ந்தது   NFTE என்னும் எக்காளம் மாற்றி 
  எழுந்தது  NFTE என இரும்பூதெய்த வைத்த
வீழாத்தலைவன்விச்சாரே
நினைவு போற்றுவோம்.




Saturday, June 7, 2014


 ஜூன் - 7 
தொழிற்சங்க...பிதாமகன்...   
தோழர்.ஜெகன் நினைவு தினம்...

   

தோழர். ஜெகன் 17-05-1931-ம் ஆண்டு பிறந்து 75 ஆண்டுகள் வாழ்ந்து 
07-06-2006-ம் ஆண்டு மறைந்த மனித நேயப் போராளி... 
தோழர்.ஜெகன் மறைந்து 8 ஆண்டுகள் தொலைந்து விட்டது.
தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளுக்குமேல் 
தொழிலாளிக்காக வாழ்ந்து மறைந்த வர்க்கப் போராளி...

அடிமட்ட தொழிலாளியாய் வாழ்க்கையை தொடங்கிய 
நம் தோழர்களின் ஒவ்வொருவர் வாழ்க்கை பயணத்திலும் 
நிழலாய் துணை நின்றவர் நம் தோழர். ஜெகன்...

தோழர். ஜெகனின் நினைவுகள்... 
நமக்கு மாறாத உற்சாகத்தையும்... தெம்பையும் அளிக்கிறது...
பொறுமை... சகிப்புத்தன்மை... போர்குணம்... 
சக தோழரிடம் பழகும் பாங்கு... 
நேர்மையான தொழிற்சங்க நடைமுறை...
நாம் இன்னும் கற்றுத் தேற வேண்டி இருக்கிறது என்பதை...
உணர்வோம்... ஒப்புகொள்வோம்... இந்நாளில்...

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR