தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, July 23, 2014

NFTE-BSNL
மன்னார்குடி கிளை.

மன்னை போராட்டம் வெற்றி!

     மன்னார்குடி கோட்ட நிர்வாகத்தையும், தஞ்சை மாவட்ட நிர்வாகத்தையும்  எதிர்த்து நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டமும், தொடர் உண்ணாவிரதமும் இன்று காலை தஞ்சை துணைப் பொது மேலாளருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
      மாவட்டத் தலைவர் தோழர். பிரின்ஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில துணைச் செயலர் தோழர். நடராஜன், TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன், கிள்ளிவளவன், மேகநாதன், இளங்கோவன்,ராஜேஷ், மன்னை சேகர், செல்லையன், கூத்தாநல்லூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
     ஏறக்குறைய அனைத்து கோரிக்கைகளுமே தீர்க்கப்பட்டதால் போராட்டம் உடனேயே விலக்கிக்கொள்ளப்பட்டது. 

உடன்பாடு:

   டிரான்ஸ்பர் ஆடர் அனைவருக்கும் உடன் போடப்படும். நம்மால் கேட்கப்பட்ட மாற்றங்களுடன்.
  மன்னை சேகர் பிரச்சனையில் உள்ள தாமதம் போக்கப்பட்டு அது விரைவில் தீர்க்கப்படும்.
   பாதுகாவல் பணிக்கு ஒரு ஆள் உடன் போடப்படும். (போடப்பட்டு விட்டது.)
    சந்தாதாரர்களுக்கு தொலைபேசி பில்கள் முறையாக அனுப்பிட உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
   தொலைபேசி பழுதுகளை நீக்க தேவையான DROP ஒயர், 10 PAIR கேபிள் உடன் வழங்கப்படும்.
   கேபிள் பழுதுக்கு கூடுதல் ஆள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். 
   இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த 2 ம் சனிக்கிழமை விடுப்பு மீண்டும் கேட்கப்பட்டது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.   JCM ல் இப் பிரச்சினை BSNLEU வால் எழுப்பப்பட்டு இன்று அது சிக்கலாகி விட்டது. (எத்தினியோ CUT ல இதுவும் ஒண்ணுன்னு போகவேண்டியதுதான்).

   போராட்டம் சுமுகமான முடிவுக்கு வர ஒத்துழைத்த நிர்வாகத்துக்கும், தலைவர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
போராட்டக்குழு,
மன்னை  மற்றும் கூத்தநல்லூர் கிளைகள். 

Sunday, July 20, 2014

NFTE - BSNL
மன்னை கோட்டம்.

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மன்னை கோட்ட நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டம்.

கண்டன ஆர்ப்பாட்டம்.
22-07-2014 செவ்வாய் மாலை 5-00 மணி 

                            தொடர் உண்ணாவிரதம்
                          23-07-2014 முதல் 

கோரிக்கைகள்:

   1. மன்னார்குடியில் நடைபெற்ற TM கவுன்சிலிங் உத்தரவை அமுல்படுத்து!   பாரபட்சம் காட்டாதே.

   2. மாவட்ட நிர்வாகமே! நிர்வாக விதிமுறைப்படி உத்தரவு போடுவதும்; பிறகு போட்ட அந்த உத்தரவை ரத்து செய்வதை கைவிடு!

   3. மாதத்தில்  இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையை ரத்து  செய்து வெளியிட்ட உத்தரவை மறு பரிசீலனை செய்திடு.

   4. மன்னை  கொட்ட அலுவலகத்தில் பாதுகாவல் பணிக்கு Ex Service Man ஐ பணியமர்த்திட வேண்டும்.

   5. தொலைபேசி சந்தாதாரர்களுக்கு தொலைபேசி பில்கள் அவர்களுடைய முகவரிக்கு முறையாக அனுப்பிட வேண்டியும், அவர்களுடைய சிரமத்தை தவிர்த்திட கோரியும்.

   6. ஊழியர்கள் மீது முறையான விசாரணை இல்லாமல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும். 
   7. தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி பழுதுகளை நீக்குவதற்கு தேவையான கேபிள்கள் மற்றும் Drop Wire வழங்கிட வேண்டியும், மன்னார்குடி மற்றும் கூத்தநல்லூர் பகுதிக்கு கேபிள் ஜாயிண்டர் பணிக்கு காண்ட்ராக்ட் ஊழியர்களை அதிகப்படுத்த கோரியும்,  காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு 10-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக் கோரியும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  மேற்கண்டவாறு 
                                         கண்டன ஆர்ப்பாட்டமும், 
                             தொடர் உண்ணாவிரதப் போராட்டமும்                                                                                    நடைபெறும். 

  தோழர்களும் தோழியர்களும் திரளாய்  பங்கேற்க வேண்டுகிறோம்.

                                    தோழமையுடன், 
                                    போராட்டக்குழு,
                    மன்னை கிளை & கூத்தாநல்லூர் கிளை.

Sunday, July 6, 2014


*** முகவரி இழந்த நண்பா உனக்காக***
யாரிடம் சென்று ஞாயம் கேட்பாயோ...
பலமாடி கட்டிடத்தை
சில நொடியில் 
இடித்து விட்ட விதியிடமா...
மழைக்கு நீங்கள் ஒதுங்க,
மழையே உங்களை விழுங்க,
யாரோ செய்த பிழைக்கு
உங்கள் உயிரை
விலை கேட்ட இயற்கையிடமா...
விதிகளை மீறி அனுமதி தந்து,
விடியும் முன் உங்கள்
விதியினை மாற்றிய
அரசிடமா....
பெரும் பொருள் ஈட்ட,
வரும் இருள் மறந்து
ஏழைகள் இவர் கோழைகள்
என்று எண்ணிய முதலாளிகளிடமா....
உங்கள் மரணம்
இயற்கையின் பிழையாம்..
இல்லை என்கிறோம்...
யார் காதிலும் விழவில்லையாம்...
அய்யோ பாவம் !!!!
பணம் ஈட்ட
நீங்கள் பணயம் வைக்க பட்டீர்களா..!!
பணத்தின் குணம் காட்ட
இவ்வுலகில் இருந்தே விரட்டி விடபட்டீர்களா...!!
வாதாட வக்கீல் வரபோவதில்லை,
வந்தாலும்
உண்மை நிலைக்க போவதில்லை...
இயற்கை அறியும்,
ஒரு நாள் வாய்மை வெல்லும்..
இன்னொரு முகலிவாக்கம்
இந்த தமிழகம் பார்க்க வேண்டாம்...
இன்னொரு முறை
எங்கள் உறவுகள் சாக வேண்டாம்....!!!!
- முத்துகுமார் மாணிக்கம்



ஜூலை 4
சுவாமி விவேகானந்தர் 
நினைவு தினம் 

விவேகானந்தரின் பொன்மொழிகள்

        * கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா  இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால்  நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட  நாத்திகனாக இருப்பதே மேல்.

        * உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி  வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு  உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே.  குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின்  குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை  அல்லவா.

        * செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது  மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.  அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து;  அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

        * வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும்  அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது  பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக  அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை  இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

        * உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம்.  நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை  கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே  ஒழுங்காகிவிடும்.

அஞ்சலி!

NFTE இயக்கத்தை திருச்சி மாவட்டத்தில் வலிமை ஆக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவரும், மாநில, மாவட்ட சங்க பொறுப்புகள் ஏற்று திறம்பட பணியாற்றிய  தோழருமான

வெங்கடேசன் 

அவர்கள் 05-07-2014 அன்று இரவு இறந்துவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.

அவருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவிக்கின்றோம். 

இறுதி அஞ்சலி நிகழ்வு திருச்சி, ஸ்ரீனிவாசா நகர், அவரது இல்லத்தில் 06-07-2014 அன்று மாலை 04:00 மணி அளவில் நடைபெற உள்ளது.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR