NFTE - BSNL
மன்னை கோட்டம்.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மன்னை கோட்ட நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டம்.
கண்டன ஆர்ப்பாட்டம்.
22-07-2014 செவ்வாய் மாலை 5-00 மணி
தொடர் உண்ணாவிரதம்
23-07-2014 முதல்
கோரிக்கைகள்:
1. மன்னார்குடியில் நடைபெற்ற TM கவுன்சிலிங் உத்தரவை அமுல்படுத்து! பாரபட்சம் காட்டாதே.
2. மாவட்ட நிர்வாகமே! நிர்வாக விதிமுறைப்படி உத்தரவு போடுவதும்; பிறகு போட்ட அந்த உத்தரவை ரத்து செய்வதை கைவிடு!
3. மாதத்தில் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையை ரத்து செய்து வெளியிட்ட உத்தரவை மறு பரிசீலனை செய்திடு.
4. மன்னை கொட்ட அலுவலகத்தில் பாதுகாவல் பணிக்கு Ex Service Man ஐ பணியமர்த்திட வேண்டும்.
5. தொலைபேசி சந்தாதாரர்களுக்கு தொலைபேசி பில்கள் அவர்களுடைய முகவரிக்கு முறையாக அனுப்பிட வேண்டியும், அவர்களுடைய சிரமத்தை தவிர்த்திட கோரியும்.
6. ஊழியர்கள் மீது முறையான விசாரணை இல்லாமல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும்.
7. தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி பழுதுகளை நீக்குவதற்கு தேவையான கேபிள்கள் மற்றும் Drop Wire வழங்கிட வேண்டியும், மன்னார்குடி மற்றும் கூத்தநல்லூர் பகுதிக்கு கேபிள் ஜாயிண்டர் பணிக்கு காண்ட்ராக்ட் ஊழியர்களை அதிகப்படுத்த கோரியும், காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு 10-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக் கோரியும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கண்டவாறு
கண்டன ஆர்ப்பாட்டமும்,
தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும்.
தோழர்களும் தோழியர்களும் திரளாய் பங்கேற்க வேண்டுகிறோம்.
தோழமையுடன்,
போராட்டக்குழு,
மன்னை கிளை & கூத்தாநல்லூர் கிளை.
No comments:
Post a Comment