தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, June 28, 2018

BSNL  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
புது டில்லி.
கூட்ட முடிவுகள்
BSNL  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பபின் கூட்டம் நேற்று 26/06/2018 அன்று டெல்லியில் BSNLMS சங்க அலுவலகத்தில் தோழர் K.S.சேசாத்ரி , அகில இந்திய துணைப்பொதுச்செயலர் NFTE அவர்கள் தலைமையில் நடைபெற்றது. BSNLEU , NFTE , SNEA , AIBSNLEA , FNTO , AIGETOA , BSNLMS , TEPU மற்றும் ATM ஆகிய சங்கங்களின் பொதுச்செயலர்களும் , முன்னணித்தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீண்ட ஆலோசனைகள், விவாதங்களுக்குப்பிறகு கீழ்க்கண்ட போராட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.
ஜூலை 11-2018 அன்று …
CORPORATE அலுவலகம்…மாநிலத்தலைநகர்களில் அமைந்துள்ள CCA அலுவலகங்கள்…மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
ஜூலை 25,26,27 ஆகிய நாட்களில்…
தலைநகர்  டெல்லி…மாநிலத்தலைநகரங்கள்… மற்றும் மாவட்டத் தலைநகரங்களில்…தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது.
: கோரிக்கைகள் :
தொலைத்தொடர்பு அமைச்சர் அவர்களே!
ஊதிய உயர்வு…ஓய்வூதிய உயர்வு…ஓய்வூதியப்பங்களிப்பு..
BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு என 24/02/2018 அன்று அனைத்து சங்கங்களிடம்அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்.
BSNL  உயர் அதிகாரிகளே!
BSNL நிதிச்சுமையோடு போராடும் காலகட்டத்தில் தேவையற்ற விரயச்செலவுகளை தவிர்ப்பீர்!
கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் 04.07.2018 அன்று BSNLMS சங்க அலுவலகத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR