மத்திய அரசு ஊழியர்களின்
1968 போராட்டத்தின் பொன்விழா ஆண்டு..
போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம்...
1968 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசு ஊழியர்களின் நாடு
தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் நாடு சுதந்திரம் அடைந்த
பிறகு நடைபெற்ற மாபெரும் போராட்டமாகும்.நாடே
போர்க்களமாக காட்சியளித்தது. போராட்டத்தின் முக்கிய
கோரிக்கை என்பதுவாழ்க்கைத்
தேவைக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்கு என்பது.
இக் கோரிக்கை15 வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வடித்தெடுக்கப்
பட்டது. மேலும் 2வது ஊதியக்குழு பரிந்துரைகளை மேம்படுத்துவதுமற்றும் திருத்துவது ஆகியவை முக்கியமான கோரிக்கைகளாக
இருந்தன. இரண்டாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய கோரிக்கை
முற்றிலுமாக புறந்தள்ளப்பட்டிருந்தது.
இக்கால கட்டத்தில்தான் ஊழியர்களின் பிரச்சினைகளை பேசித்
தீர்ப்பதற்காக முதன்முதலில் தேசிய கூட்டாலோசனைக்குழு
அமைக்கப்பட்டது. முதல் கூட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம்…
விலைவாசியை ஈடுகட்டுதல்…வேலைநீக்கத்தை கைவிடுதல்…ஒப்பந்தமுறையை ஒழித்தல்….விலைவாசிப்படியை அடிப்படைச்
சம்பளத்துடன் இணைத்தல்..25 வருட சேவை முடித்தால் ஓய்வு என்ற நிலையைக் கைவிடுதல்… ஆகியவை முக்கிய கோரிக்கையாக
வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால் தீர்வு ஏதும்
ஏற்படவில்லை. அதனால் ஊழியர்கள் போராட்டத்திற்கு
தள்ளப்பட்டனர். போராட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே தலைவர்
களும் தொண்டர்களும் அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை
எதிர் கொண்டனர். திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் ஆரம்பமானது. வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே நாடு ஸ்தம்பித்தது. அரசு போராட்டத்தைஒடுக்க எஸ்மா சட்டத்தை பிரயோகித்தது. அரசு இப்போராட்டத்தை உள்நாட்டு கிளர்ச்சி என அறிவித்தது. போராட்டத்தை ஒடுக்க மத்திய , மாநில காவல்
படையினர் ஏவி விடப்பட்டனர். போராட்டம் நயவஞ்சமாக ஒடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட 64000 ஊழியர்களுக்கு வேலை நீக்க கடிதம் கொடுக்கப்பட்டது , 12000 ஊழியர்கள் சிறைவாசம் அனுபவித்தனர், 8000 ஊழியர்கள் மேல் வழக்கு
பாய்ந்தது…7000 ஊழியர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்...4000 ஊழியர்கள் கட்டாய வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.நாடு
முழுவதும் 17 ஊழியர்கள் துப்பாக்கி சூட்டில் மரணம்அடைந்தனர்…மத்திய அரசு ஊழியர்களின் போராட்டம் இந்திய தொழிலாளிகளின் வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.
போராட்டம் நடைபெற்று 50 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அன்றைய கோரிக்கையான வாழ்க்கைத் தேவைக்கான குறைந்தபட்ச ஊதியம் கோரிக்கை இன்றும் கனவாகவே உள்ளது.
இத்தகைய பின்னணியில் 1968 போராட்டத்தின் நினைவுகளை , போராட்டத் தியாகிகளை நாம் நினைவு கூர்கிறோம். தியாகிகளின் லட்சியம் நிறைவேற தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க இத்தருணத்தில் உறுதியேற்போம்.