அனில் அம்பானியின் டெலிகாம்
திவாலா ஆன கதை
-ஆர். பட்டாபிராமன்
அம்பானிகளின் கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை கட்டிய துருபாய்அம்பானி 2002ல் மறைந்தார். அவரின் இளைய மகன் அனில் அம்பானி தனது சகோதரன் முகேஷ் அம்பானியுடன்கசந்து 2006ல் வெளியேறினார். குடும்பபஞ்சாயத்தை தாயார் கோகிலாபென், ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி கே வி காமத்மற்றும் அரசியல் உயர்மட்டத்தினரும் தலையிட்டு முடித்தனர். சகோதரர்கள் No compete Agreement போட்டதாகவும்சொல்லப்பட்டது.
துருபாய் அவர்கள் கோலோச்சியபோது1977ல் எடுத்த கணக்கின்படி 20லட்சம்பங்குதாரர்கள் கும்பலாக சேர்ந்தபெரும்முதலீட்டு பரப்பு கொண்டதாக ரிலையன் நிறுவனங்கள் இருந்தன. மிகப்பெரும் ஸ்டேடியங்களில்தான்அவரது ஆண்டுப்பேரவையேநடக்கவேண்டியிருந்தது. அந்த அளவிற்குமுதலீட்டு பங்குதாரர்கள்குவிந்திருந்தனர்.
சகோதரர்கள் இருவரும் ஏறக்குறைய சமசொத்து மதிப்புடன் தொழில்களைபிரித்துக்கொண்டு கார்ப்பரேட்களமாடினர். பாகப்பிரிவினையில்அனிலுக்கு நிதி கம்பெனிகள், டெலிகாம், பவர் ஜெனரேஷன் கிடைத்தன.முகேஷிற்கு பெட்ரோகெமிக்கல்ஸ், ரிஃபைனரிகள் கிடைத்தன. கறவைபசுக்களை முகேஷ் பெற்றுக்கொண்டுஅனிலுக்கு எலுமிச்சை கொடுத்துவிட்டார்என கார்ப்பரேட் வட்டாரங்கள் தங்கள்கமெண்ட்களை தந்தன.
2007ல் 45 பில்லியன் டாலர் மதிப்புடன்இறங்கிய இளையவர் அனில் அம்பானி. ஆனால் 2018 போர்ப்ஸ்கணக்கெடுப்பின்படி 2.44 பில்லியன்டாலருக்கு சரிந்தார். அவரின்சொத்துக்களில் 60 சதம் ரிலையன்ஸ்கம்யூனிகேஷனில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் வளர்ச்சி கூடிக்கொண்டே போனது. கூட்டுஆண்டு மதிப்பு வீதப்படி சேல்ஸ்பகுதியில் 11.2 சதம், இலாபத்தில் 9.4 சதம், ரிடன்ஸ் வீதம் 17.8 சதமாகவும் அவருக்கு உயர்ந்தது. அனிலுக்கோ விற்பனை 9.4 சதம், நட்டம் 12.4 சதம், ரிடர்ன்ஸ் மைனஸ் 1.7 என வீழ்ச்சியாக இருந்தது. முகேஷின் மார்க்கெட்காபிடலிசேஷன் 98.7 பில்லியன் டாலர்எனில் அனிலின் மார்கெட்காபிடலிசேஷன் 4 பில்லியன் டாலர் எனவீழ்ந்தது. அனிலின் மார்கெட்காபிடலிசேஷன் 2008ல் 1.65 லட்சம் கோடிஎன்றால் பிப்ரவரி 2019ல் அது 1687 கோடியாக 1 % ஆக வீழ்ந்தது.
இந்திய டெலிகாமில் நடைபெற்றுவரும்கழுத்தறுப்பு போட்டி, கட்டணங்கள் மூலம்பெரும் யுத்தம், வங்கி பிறவகைப்பட்டகடன்கள் அனிலையும் வீழ்த்தின.அனிலின் ரிலையன்ஸ்கம்யூனிகேஷனன்ஸ் 2017ல் நட்டம்மற்றும் கடன் சுமையால் முறிந்துபோனது. திவால் சூழல் காரணமாக பிரச்சனை தேசிய கம்பனி சட்டடிரிப்யூனலுக்கு சென்றது. ஸ்வீடனின்எரிக்சன் தனது பாக்கியை வசூலிக்கஉச்சநீதிமன்றம் சென்றது.
NCLT திவால் தொடர்பானநடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல்இருப்பதற்காக ஜியோ மற்றும் ப்ரூக்பீல்ட்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைநடத்துவதாக அனில் அறிவித்தார். அலைவரிசையை பெற்றுக்கொள்வதுஎன்பதாலேயே அனிலின் Rcom வைத்துள்ள பாக்கிகளுக்கு தான் பொறுப்பாக முடியாது என DOT க்குமுகேஷ் கடிதம் எழுதினார். நிலைமையை உணர்ந்த DOTஅலைக்கற்றை பரிமாற்றம்விதிகளின்படி இல்லை என தெரிவித்தது.
2010ல் ஏர்டெல்ல்லுக்கு நெருக்கமானபோட்டியாளராக இரண்டாம் இடத்திற்கு17 சத மார்க்கெட்டுடன் அனிலின்ஆர்காம் நிறுவனம் இருந்தது . ஆறு ஆண்டுகளில் 2016ல் அது 10 சதமாகவீழ்ச்சியை கண்டது. 2010ல் 25000 கோடிகடனில் இருந்த ஆர்காம் 2016ல் 45000 கோடி கடன்கார நிறுவனமானது. அனில்தனது கடனில் பாதி அலைக்கற்றைவாங்குவதற்காக பெறப்பட்டது எனபத்திரிகைகள் எழுதின.
எரிக்சன் கம்பெனிக்கு ரூ 260 கோடிதரத்தயார்- அதற்கு தனது பிடிக்கப்பட்டவரியை SBI கொடுத்திடவேண்டும்எனக்கோரிக்கை வைத்தார் அனில். ஆனால் டிரிப்யூனல் அதை ஏற்கவில்லை. எரிக்சன் கம்பெனிக்கு தான் செலுத்திய118 கோடி தவிர 453 கோடிய அவர்தரவேண்டிய நிலை இருந்தது. அனிலும்ஆர்காம் சேர்மன் சதிஷ் சேத், இன்பிராடெல் சேர்மன் சாயா விரானிஉடனடியாக் எர்க்சனுக்கு 453 கோடியைதரவில்லையெனில் மூன்று மாதம் சிறைகம்பெனியை எண்ண நேரிடும் எனஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முகேஷ் உதவி செய்து சிறை செல்லாமல் சகோதரனை காப்பாற்றியதாகவும் , அனில் தனது அண்ணன் அண்ணியாருக்கு நன்றி பாராட்டியதாகவும் செய்திகள் வெளியாயின.. .
அனிலின் டெலிகாம் CDMA வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. உலகில் GSM- CDMA கார்ப்பரேட்யுத்தத்தில் GSM மார்க்கேட்ஓங்கத்துவங்கியது. இதனால் காலம்கடந்து அனில் ஜி எஸ் எம் பக்கம்நகரத்துவங்கினார். ஆனால் முகேஷின்வரவு மான்சூன் ஹங்காமாவின் அதிரடிதள்ளுபடிகள் மார்க்கெட்டை மயக்கின. தான் பிற டெலிகாம் கம்பெனிகளைவிட மலிவில் விற்பனை செய்பவன் எனமுகேஷின் முழக்கங்கள்கவ்விப்பிடித்தன. மக்கள் ஜியோவிடம்சாயத்துவங்கினர்..
அனிலும் தன்னால் சமாளிக்க முடியும்என்கிற நம்பிக்கையுடன் 13 மாநிலங்களில் 3G யில் 8500 கோடிக்குGSM முதலீடு செய்தார். தன்னால்பிறைரைவிட 60 சதம் குறைவாககட்டணம் வைத்து தரமுடியும் என்றார். ஆனாலும் அவரால் எழமுடியவில்லை. அண்ணன் முகேஷின் ஜியோ வரவால் சகோதரன் அனிலின் டெலிகாம்கார்ப்பரேட் சாம்ராஜ்யம் இற்று வீழந்ததுஎன எகானமிக் டைம்ஸ் எழுதியது
டிசம்பர் 2010ல் தன்னிடம் 12 கோடிவாடிக்கையாளர்கள் இருப்பதாக ஆர்காம்தெரிவித்தது. ஆனால் ஜியோ வந்து 3 ஆண்டுகளில் 30 கோடிவாடிக்கையாளர்களைப் பெற்றது. முன்பாக டெலிகாமில் டெலினார்,TTSL, எம் டி எஸ் வீழ்ந்தன. ஏர்செல்லும் வீழந்தது. ஜியோ வருவதற்கு முன்பே 9.5 சதம் மார்க்கெட்டை மட்டுமே வைத்திருந்தஅனிலால் 2017ல் 5 சத மார்க்கெட்டைமட்டுமே தக்கவைக்க முடிந்தது..
ஜியோ வந்த பின்னரும் ஏர்டெல்தாக்குப்பிடிப்பதற்கு சில காரணிகள்உதவின என மார்க்கெட் ஆய்வாளர்கள்எழுதினர். ஏர்டெல் தனது டவரை, பைபர்பிரிவை, ஆப்ரிக்கா நில சொத்துக்களைபணமாக்குதல் முறையை ஏர்டெல்கையாண்டது. BSNL கூட நட்டம்அடையத்துவங்கியது முதல் தன்னைமீட்டுக்கொள்ள ஏர்டெல் போர்ட் ரூம்முடிவைகளையே மாடல் ஆக கருதிசெயல்பட்டுவருகிறது . ஆனாலும்பெருமளவு அதனால் தன்னைமீட்டுக்கொள்ள முடியவில்லை. தனியார்வர்த்தக நலன்கள் முடிவுகள் என்பதற்கும்பொதுத்துறை நலன்கள் என்பதற்கும்முழுமுதல் ஒற்றுமை இருக்கமுடியாது. அவைகளின் நோக்கங்கள்அடிப்படையில் மாறுபட்டவை என்பதைஉலகமயமாக்கலுக்கு பின்னர்ஆட்சியாளர்கள் உணரத்தவறியுள்ளனர். பொதுத்துறையை காக்கவேண்டியசக்திகள் (அதிகாரதட்டு, தொழிலாளர்,தேசபக்த சக்திகள்) இடையில் மதமதப்பு, செக்குமாட்டுத்தன்மையும் காரணிகள்ஆகாமல் இல்லை என்கிறசுயவிமர்சனமும் அவசியமாகிறது..
அனில் அம்பானி மீடியா வெளிச்சத்தில்ஆர்வம் கொண்டவராக இருந்தார்-அடிக்கடி பிரஸ் மீட் என செலவிடுவார்.சில மைல்கள் மட்டுமே உள்ளநவிமும்பாய்க்கு கூடஹெலிகாப்டரில்தான் பறப்பார். பாலிவுட்நட்சத்திரங்களுடன் பெரும் நட்புவட்டராம்இருந்தது. சமாஜ்வாடி அமர்சிங்நெருகியவராக இருந்தார். ஆனால் இதுஅரசியல் வட்டரத்தில் அவருக்குஎதிர்மறை விளைவையே தந்தது. அனிலே பாலிவுட் நடிகையாக இருந்தடினா முனிம் அவர்களைத்தான் 1991ல்மணம் புரிந்து இருந்தார்.
Anil was prone to taking up capital-guzzling projects immediately after the family split. “His decisions did not come out of a carefully crafted strategy; they were driven by ambition, charges a stock market analyst who did not wish to be named. “It was fashionable to bid for huge projects, which were financed by public sector banks (PSBs) at the behest of politicians என இந்தியா டுடே எழுதியது. Unrestrined borrowings and lower revenues eroded the worth of Reliance Group எனபத்திரிகைகள் எழுதத்துவங்கின.
அனில் ஏராள வழக்குகளில் சிக்கி அதில்கவனம் செலுத்தவேண்டிய நிலைஏற்பட்டது. வருவாய் பெருகாமல் கடன்மட்டும் கூடியது. தொட்டதற்கெல்லாம்வழக்கு என்கிற அனிலின் குணத்தால்பலர் அவருடன் பகைமை பாராட்டும்நிலைக்கு சென்றனர் 2ஜி வழக்கிலும்அனில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார். தனது சகோதரர் முகேஷ் உடன் 2009ல்தாத்ரி பிளாண்ட் K G Basin வழக்காடினார்.
2010ல் சகோதரகள் போட்டுக்கொண்ட’போட்டி கூடாது’ என்கிற நிபந்தனைநீக்கப்பட்டது. உடனேயே முகேஷ்இன்போடெல் பிராட்பாண்டில் 5000 கோடிஅளவு முதலீட்டை செலுத்தி தான்டெலிகாமை கைப்பற்ற் போவதைசூசகமாக்கினார். அக்டோபர் 2016ல்அனைவரையும் அலறவைக்கும்வகையில் 2.7 லட்சம் கிமி பைபர் ஆப்டிக்உடன் ஜியோ பெரும்பூதமாக நுழைந்தது. 2018ன் மத்தியில் ஜியோ 20 சதமார்கெட்டை கைப்பற்றியது. ஆர்காம் 2 சதமாக வீழ்ந்தது, பி எஸ் என் எல்கூட 10சதமாக இருந்தது..
அனில் தனது 14வது ஆண்டுப்பேரவைகூட்டத்தில் ( செப் 2018ல்) டெலிகாமிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். “ As we have moved out of the mobile sector, we will monetise our enterprise business at an appropriate stage. Reliance Realty will be the engine of growth for the future of this company.” This includes monetising 30 million square feet of commercial space at DAKC” என பேசினார். சொத்துக்களைவிற்றால்தான் 40000 கோடி கடனிலிருந்துமீளவழி என்ற நிலை ஏற்பட்டது.
அவரின் 24000 மெகாவாட் பவர்ஜெனரேஷன் யூனீட்டுகளும் மூடப்பட்டன.அதில் அவர் 1.2 லட்சம் கோடி முதலீடுசெய்துள்ளதாக இந்தியா டுடேதெரிவித்தது. அனில் 2015ல் வாங்கியபிபவவ் பாதுகாப்புத்துறை வர்த்தகம்,தற்போது அரசியலில் பெரும் புயலைகிளப்பியுள்ள ரபேல் டீல் ஆகியவற்றில்சிக்கினார். அனிலின் நிதி கம்பெனிகள் ஓரளவிற்குஅவரை காப்பாற்றி வருவதாகஅறியமுடிகிறது. ரிலையன்ஸ் காபிடல், இன்ஸ்சூரன்ஸ், ஹோம் பைனான்ஸ்போன்றவை தாக்குப்பிடித்துவருகின்றன. டெலிகாம் தவிர பிறஅனைத்து கடன்களும் அவருக்கு செப்2018 படி 1.72 லட்சம் கோடி இருப்பதாக செய்திகள் வெளியாயின. அவர் தனது ரிலையன்ஸ் இன்ஃபிரா வர்த்தகத்தில்சில பகுதியை அதானியிடம் விற்று 19000 கோடியை புரட்டிக்கொண்டார் என்றசெய்தியும் வெளியானது.
அனில் மீள என வழி? அவரது மகன்அன்மோல் நிதி கம்பெனிகளின் டைரக்டர்ஆக்கப்பட்டுள்ளார். அப்பாவின் சரிவைஅவர் மீட்பாரா?
இது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்வீழ்ச்சியின் கதை மட்டுமா? அந்தவீழ்ச்சியை அரசின் கொள்கைபாற்பட்டுஎப்படி விளக்குவது? அதிகவேலைவாய்ப்புகளை உருவாக்காமல், சம்பளத்திற்காக BSNL போல் அதிகம்செலவழிக்காமல் ஆர் காம் வீழ்ந்ததைஎவ்வாறு புரிந்துகொள்வது.?
டெலிகாம் தனது அரசின் ஏகபோகமான இலாகாவிலிருந்து போட்டி, கழுத்தறுக்கும் போட்டி. மிதமிஞ்சிய உற்பத்தி, மலிவு விலை, இனி கொள்வார் இல்லா தேக்கம், வீழ்ச்சி, எவரோ ஒரு கார்ப்பரேட் இராட்சச விழுங்கியின் ஏகபோகம், ஊழல்கள் என சுழல்சுற்றுகளை கண்டுதான் தன் பாதையை போட்டுக்கொள்ளுமா?
1848ல் வெளியான கம்யூனிஸ்ட்அறிக்கையில் மார்க்ஸ்- எங்கெல்ஸ்இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
”முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன்உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக்கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவைவெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.
முதலாளித்துவ வர்க்கம் தன்னுடையபண்டங்களின் மலிவான விலைகள்என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக்கொண்டு, சீன மதிலையொத்ததடைச்சுவர்களை எல்லாம்தகர்த்தெறிகின்றது;
முதலாளித்துவ வர்க்கம் இந்தநெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில்பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன்மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளைவென்றெடுப்பதன் மூலமும், பழையசந்தைகளை இன்னும் ஒட்டச்சுரண்டுவதன் மூலமும் இந்தநெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும்நாசகரமான நெருக்கடிகளுக்கு வழிவகுப்பதன் மூலமும், நெருக்கடிகளைமுன்தடுப்பதற்கான வழிமுறைகளைக்குறைப்பதன் மூலமும் இந்தநெருக்கடிகளைச் சமாளிக்கிறது.”
மேற்கூறிய அம்மேதைகளின் வரிகள்இக்கட்டுரையின் சாரமான வரிகளாகவும்அமைகிறது போல் தோன்றுகிறது.
19-4-19
No comments:
Post a Comment