தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, October 31, 2019

தோழர். குருதாஸ்தாஸ்குப்தா மறைந்தார்.
31-10-2019AITUC தொழிற்சங்கத்தின் துவக்க காலத் தலைவர், நாடாளுமன்றத்தில் சிங்கமென கர்ஜித்த தோழர்.  குருதாஸ்தாஸ்குப்தா அவர்கள், 83வது வயதில், கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று அதிகாலை 6 மணிக்கு காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம். 

மறைந்த அம் மாபெரும் தலைவருக்காக கிளைகள்தோறும் கொடியினை அரைக்கம்பத்தில் 3 நாட்கள் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன். 

AITUC நூற்றாண்டு இன்று துவங்கும் இந்நாளில்  அதைத் துவக்கி வைத்து  நம்மிடம் விட்டுச் செல்கிறார். தொழிலாளி வர்க்கத்தின் மிகப் பெரும் கேடயமாக விளங்கிய AITUC பேரியக்கத்தை மேலும் வலுவாக்கி வெகுஜன அரங்கில் பளிச்சிட வைப்போம்! தோழர் குப்தாவின் தியாகத்தை நினைவு கூர்வோம்.

தோழரின் மறைவை நெஞ்சில் நிறுத்தி தஞ்சை மாவட்ட NFTE பேரியக்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

இவண்,
கா. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR