தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, May 1, 2020

மே தினத் தியாகிகளுக்கு
 வீரவணக்கம்!
==========
உலகம் முழுதும் பணியாற்றும் 
உழைக்கும் வர்க்கத் தோழனே!
நமது வாழ்வைச் சீரமைத்தவன் 
குருதி சிந்திய நாள் இன்று!

எத்தனை எத்தனை தோழர்கள் 
எழுச்சியோடு போராடினார்கள்.
அன்று அவர்கள் சிந்திய ரத்தம் 
இன்றைய நமது நல்வாழ்வு.

எத்தனை உரிமை, எத்தனை சலுகை
அத்தனையும் நீங்கள் தந்தது.
உங்கள் வழியில் போராடி 
உரிமைகளை வென்றெடுப்போம்!

போராடிப் பெற்ற உரிமைகளை 
புதைகுழியில் தள்ள எண்ணும் 
நாசகாரச் சக்திகளை 
அழித்தொழிக்க சபதமேற்போம்!

சாதி, மத வெறியேற்றி 
நம்மை சத்தமின்றி பிரித்தாளும் 
சமூக விரோத சக்திகளை 
வேரறுக்க சபதமேற்போம்!

மேதினியில் பிறந்தோர்க்கெல்லாம் 
மேதினமே விமோசனமாகும்.
உழைப்பின் உயர்வை எடுத்துச் செல்வோம்!
உலகம் உய்ய கடிந்துழைப்போம்!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR