31-01-2020 இன்று BSNL ல் வரலாறு காணாத சூழல்.
இன்னும் சில மணித் துளிகளில் நாடு முழுவதுமுள்ள 90000 BSNL ஊழியர்கள், அதிகாரிகள் துறையை விட்டு வெளியேறுகிறார்கள்.
நவீன தொழில்நுட்பத்தில் தொலைத் தொடர்பு துறை எதைக் கையாள வேண்டுமோ அதை JIO, VODAFONE, AIRTEL ஆகியவை கையாள்கின்றன. அவைகளுக்கு அரசு கடன் கொடுக்கிறது, கடன் தள்ளுபடி செய்கிறது. ஆனால் பல லட்சம் கோடி சொத்துக்கள் கொண்ட BSNL க்கு கடன் கொடுக்காமல், 4G யும் கொடுக்கப்படாததால் துறை நலிவடைந்து இன்று 1 லட்சம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அரசுக்குப் பிறந்த குழந்தை என்ற ஒரே காரணத்திற்காக இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.
ஊரான் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்து தன் பிள்ளையை தவிக்க விட்ட மத்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்!
சென்று வாருங்கள் தோழர்களே! நல்லதே நடக்கட்டும். துறையில் ஒரு கண் வைத்து காத்திருப்போம். பிரியா விடை பெறும் உங்களுக்கு என்றும் துணை நிற்போம்!
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment