கட்டண பாக்கி வைத்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் லேண்ட் லைன் இணைப்புகளை பிஎஸ்என்எல் துண்டித்து வருகிறது. புதுச்சேரியில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் லேண்ட் லைன் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. காவல் நிலையங்களுக்கு ஆகும் கட்டண பில் மாதந்தோறும் போலீஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். போலீஸ் தலைமையகம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கட்டணத்தை செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக புதுச்சேரியின் பல காவல் நிலையங்களில் தொலைபேசி உபயோகத்திற்கான கட்டணத்தை செலுத்தாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. கட்டண பாக்கி சுமார் 8 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பல மாதங்களாக பிஎஸ்என்எல் நினைவூட்டியும் இந்த கட்டண பாக்கி செலுத்தப்படவில்லை. அதையடுத்து, பல போலீஸ் ஸ்டேஷன்களின் லேண்ட் லைன் தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் பணியில் பி.எஸ்.என்.எல். இறங்கியுள்ளது. உதாரணத்துக்கு, ஒரு மாதத்திற்கு முன்பே காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனின் தொலைபேசி எண் கடந்த ஒரு மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசாருக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் அது பயன்படாமல் உள்ளது. இதனால் அவசர உதவிகேட்டு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்று அரசுதுறை
பலவும் பில் பாக்கி வைத்துள்ளது.தனி நபர்களும் பாக்கி வைத்துள்ளனர்.
அனைத்து வாரக்கடன்களையும் வசூல் செய்திட கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்
No comments:
Post a Comment