கூட்டுறவு சங்க செய்திகள்...
05-09-2014 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. நிரந்தர வைப்புத்தொகை ஓய்வுபெற்ற ஊழியர்கள் முதலீடு செய்திருந்தால் அது முதிர்வடைந்திருந்தால் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கி வழி காட்டுதலின் படி பணியில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
2. விழாக்கால முன்பணம் ரூ.10000/- அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படும். தவணை 10 மாதம் வட்டி 14.5%.
3. 2013-2014 ஆம் ஆண்டுக்கான டிவிடென்ட் RGB கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு நவம்பர் (அ ) டிசம்பர் மாதம் வழங்கப்படும்.
4. புதியதாக சங்கத்தில் R D திட்டம் தொடங்கப்படும். மாதம் 1 க்கு குறைந்த பட்சம் ரூ. 1000/- அதற்கு மேலும் சேர்க்கலாம். வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட கூடுதலாக கிடைக்கும்.இந்த திட்டம் வரும் RGB கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அமுல்படுத்தப்படும்.(மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்).
5. வாராக்கடன் சம்மந்தமாகவும், ஒழுங்கு நடவடிக்கை சம்மந்தமாகவும் இரண்டு கமிட்டிகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.கமிட் டியில் இயக்குனர்கள் 7 அல்லது 8 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பதால் தலைவர், துணை தலைவர் இருவரும் இரு கமிட்டியிலும் இடம் பெறுவார்கள்.
6. பெங்களூர் சங்க உறுப்பினர்களுக்கு இதுவரை ரூ. 400000/- மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது.இனிமேல் அது ரூ. 500000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதுபோல் விழாக்கால கடன் ரூ.10000/- மற்றும் கல்விக்கடன் ரூ.10000/- இரண்டும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும்.
No comments:
Post a Comment