காஷ்மீரில் இலவச போன் பேசும் வசதி அளிக்கிறது பிஎஸ்என்எல் - அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. வெள்ளம் வேகமாக வடிந்து வருவதால் குடிநீர், மின்சாரம் ஆகிய இரண்டும் மறு சீரமைக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு பக்கத்தில் தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன் தீவிர முயற்சியால் 80 சதவீத மொபைல் தொடர்பு சேவையை தொடங்கியுள்ளது. ஸ்ரீநகரில் 55 தொலை தொடர்பு கோபுரங்கள் மீண்டும் கட்டப்பட்டு விட்டன. இதன் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பு தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் துவக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் தொலைத் தொடர்பு சேவையை மீண்டும் முழு அளவில் துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை மொத்தமுள்ள 6811 கோபுரங்களில் 1208 கோபுரங்கள் மீண்டும் செயல்படத்துவங்கியுள்ளன.
வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் இலவச மொபைல்போன் சேவையை பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவாரத்திற்கு மக்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். இதே போல்,
மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இலவசமாக பேசிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளன. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment