தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, April 26, 2015

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற நிலநடுக்கம்... தேசிய பேரிடர் என அறிவித்தது நேபாள அரசுஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற நிலநடுக்கம்... தேசிய பேரிடர் என அறிவித்தது நேபாள அரசு
காத்மாண்ட்: இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ள நிலநடுக்கத்தை தேசிய பேரிடர் என நேபாள அரசு அறிவித்துள்ளது. நேபாளத்தில் நேற்று முதல் அடுத்தடுத்து பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் சிக்கி இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. எனவே, பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. சர்வதேச நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை தேசிய பேரிடர் என அந்நாடு அறிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதை அடுத்து, நேபாளம் இந்த அறிவிப்பை வௌளியிட்டுள்ளது. மேலும், நேபாளத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒரு வார விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

Read more at: http://tamil.oneindia.com/news/international/nepal-earthquake-is-national-disaster-225528.html

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR