தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, August 30, 2015



Friday, August 28, 2015

சென்னை சொசைட்டியில் BSNLEU வின் அக்கறை.


     சொசைட்டியில் கடனுக்கான வட்டியை குறைக்க வலியுறுத்தி தலைவருடன் சந்திப்பு என்ற தலைப்பில் BSNLEU தமிழ் மாநிலச் சங்கத்தால்  சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   மேலோட்டமாகப் பார்த்தால் விஷயம் தெளிவுதான்.   ஆனால் அதன் உள்நோக்கம் நமக்கு வேறு விதமாகப்படுகிறது.   எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கோரிக்கைக்கு கையெழுத்து இயக்கம் இயக்கம் தேவையா? இதற்கு 4000 பேர் கையெழுத்திட்டார்களம்.   10 லட்சம் கடன் என்று சொல்லுங்கள், 8000 பேர் கையெழுத்திடுவார்கள்.


   சொசைட்டியில் எந்த ஒரு மாற்றத்தையும் இயக்குனர்களும், RGB க்களும்தான் கொண்டு வர முடியும்.   RGB கூட்டத்தில் தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வரும்போது அங்கு, அந்த நியாயத்தை RGB க்கள் வலியுறுத்த வேண்டும்.   கடந்த 5 ஆண்டுகளில் BSNLEU தலைவர்கள், RGB க்கள் ஒரு எதிர்ப்பைக் கூட தெரிவித்ததில்லை.   அதே போல் எந்தவொரு மாற்றத்தையும் அவர்களால்  கொண்டுவர முடியவில்லை.   அப்போதுதான் 14.5 ஆக இருந்த வட்டி விகிதம் 16.5 % ஆக மாறியது.  இந்த வட்டி உயர்வை மற்றவர்கள் எதிர்த்தபோது அதை ஆதரித்து பேசியவர்கள் இவர்கள்தான். நிலத்தைப் பிரிப்பது, வட்டி வீதத்தைக் குறைப்பது, ICICI வங்கியிலிருந்து விடுபடுவது, செலவினங்களைக் குறைப்பது போன்ற எந்த கோரிக்கையும் அப்போது நிறைவேறவில்லை.   

        இப்போது 14.5 % ஆக குறைக்கப்பட்ட  வட்டி விகிதம் 16% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   முன்பைவிட 1/2 % குறைந்த நிலையில்தான் உள்ளது.   இதைச் சொல்லி  வட்டி உயர்வை நியாயப் படுத்திட விரும்பவில்லை.  சாதித்துக் காட்டியவர்கள் குறை சொன்னால் அதை நம்மால் ஏற்றுகொள்ள முடியும்.  சொசைட்டியால் பலனடையாத சங்கம்  
குறை சொன்னால் அதையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.    ஆனால் EU வின் நோக்கம் வேறு என்பது சொல்லாமலே புரியும். 

              நமது தோழர்களின் கடன் பசி அதிகரித்துக் கொண்டே வருகிறது.   அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முதலில் முயல வேண்டும். ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் என்றால் 15000 பேருக்கு எவ்வளவு தொகை தேவைப்படுகிறது.     ஒரே மாதத்தில் 200 கோடி, 300 கோடி என்று பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?     அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள்  20 கோடி, 30 கோடிக்கு மேல் கடன் தருவதில்லை .   ICICI போன்ற வங்கிகள் அதிக தொகையை தந்து, அதிக வட்டியையும் கேட்பதாக கூறுகிறார்கள்.   

   இந்த அளவு வட்டிக்கு எனக்கு பணம் வேண்டாம் என்று உறுப்பினர்கள் சொல்வதற்கான மன நிலைமையையும், அதே நேரத்தில்   வட்டிக் குறைப்பு, அரசு வங்கியில்தான்  கடன் வாங்க வேண்டும் என்ற  தன்மையையும், அதற்கான  ஒற்றுமையை, ஆவேசத்தை RGB கூட்டத்தில் நாமெல்லாம் உருவாக்க வேண்டும்.     அங்கே ( RGB கூட்டத்தில்) தமிழ்நாடு,  சென்னை என்று எவருமே குரல் கொடுக்காமல் இருந்துவிட்டு,  இங்கு எங்கள் சங்கம் கையெழுத்து இயக்கம் நடத்தி, மனு கொடுத்துவிட்டது.   நடக்க வில்லையென்றால் தமிழகம் முழுவதும் (சென்னை நீங்கலாக) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதெல்லாம் வெற்று அறிவிப்பைத் தவிர வேறென்ன?

    வேதனையை அதிகரித்து அதை வெளிப்படுத்தி, உங்களுக்காக  அழ இங்கு  என்னைத் தவிர யாரால் முடியும் என்பதெல்லாம் பழைய தேர்தல் உத்தி.    கோரிக்கை வைப்பது, மனு கொடுப்பது என்பதோடு நில்லாமல் போராட வேண்டும்.   போராட வைக்க வேண்டும்.   அதுதான் நல்ல தொழிற்சங்கத்துக்கு அழகு! 

Wednesday, August 26, 2015


என்ன... நான் சொல்றது சரிதானே!
அருமையாக சமைக்கும் ஒவ்வொரு மனைவிக்குப் பின்னாலும் ஒரு கணவன் இருக்கிறான் ' தொப்பையோடு '.

தூக்கி எறியப்படும் தருணங்களில்தான் சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது.

உங்களுக்குத் தெரியுமா?
குழந்தைக்கு முதலில் கொடுக்க வேண்டிய பலன்களில் வாழைப்பழமே சிறந்தது.

உலகிலேயே மிகவும் தாழ்வான தீவு மாலத் தீவுதான்.  கடல் மட்டத்திலிருந்து 2.3 மீட்டர் உயரம்.

பெண்களை விட ஆண்களுக்கு மூளை மிகப் பெரியது.   பெண்களைவிட 4000 உயிரணுக்கள் ஆஆஆண்காள் மூளையில் இருக்கிறது.

இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே  முடியாது.   காரணம் ஞாபகங்கள், நினைவுகள் எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும் மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்தான்.  அவன் அந்நியன்தான். 

சிறிது புன்னகைத்துப் பாருங்கள்.  
உலகம் எவ்வளவு பிரகாசம் என்பதை உணருங்கள்.
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப் போன பொண்ணைக் காப்பாத்தினாயே, 
அவ இப்போ எப்படி இருக்கா?
" முழுகாம இருக்கா " .

Sunday, August 23, 2015


BSNL  நிறுவன
11 ஊழியர் சங்கங்களின்

10 அம்சக்கோரிக்கைகள்...

BSNLEU - BTEU - FNTO 
BSNLMS - SEWA BSNL -TEPU 
NFTBE - BTUBSNL - SNATTA -BSNLOA 
=================================


 மத்திய அரசே... BSNL நிர்வாகமே...
  1. BSNLலில்  தனியார் நுழைவு மற்றும் பங்கு விற்பனையைக் கைவிடு...
  2. செல் கோபுரங்களைத் தனியாகப் பிரிக்கும் முடிவைக் கைவிடு...
  3. BSNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்க உரிய நிதி உதவி செய்..
  4. BSNL உடன் BBNL நிறுவனத்தை இணைத்திடு...   MTNLநிறுவனத்தை இணைக்காதே..
  5. ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தாதே...
  6. BSNLலில் விருப்ப ஓய்வை அமுல்படுத்தாதே...
  7. அலைக்கற்றைக்கட்டணம்  ரூ.4700/= கோடியை உடனடியாகத் திருப்பி வழங்கு..
  8. அனைத்து சொத்துக்களையும் BSNL பெயரில் மாற்றல் செய்..
  9. இலாபம் இல்லாவிடினும் குறைந்தபட்ச போனஸ் வழங்கு...
  10. BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப்பலன்கள் வழங்கு...

மத்திய அரசிற்கு 11 மத்திய சங்கங்களும் 
இணைந்து போராட்ட அறிவிப்புக் கொடுத்துள்ளன..
நமது நிறுவனத்தில் 10 சங்கங்கள் இணைந்தும் 
FNTO சங்கம் 14/08/2015 அன்று தனியாகவும் 
போராட்ட அறிவிப்பு செய்துள்ளன...

தோழர்களே...
ஆண்டுகள் 68 உருண்டோடியும்...
அல்லல் வாழ்வு அகன்றபாடில்லை...

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே..
விதிகளை  உருவாக்கலாம்... 

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே...
விதிகளைக் காக்கலாம்...

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே..
விதிகளை  மாற்றலாம்... 

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே...
நாட்டைக்காக்கலாம்...
நம்மையும் காக்கலாம்...

புதிய விதி சமைக்க...
புதிய தேசம் படைக்க..
புதிய களம் காண்போம் தோழர்களே...


போராடி நாம் தோற்றதில்லை!!
போராடாமல் வென்றதில்லை!!

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!!
தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!!!



நிலத்தை கையகப்படுத்துதல் போன்று பொதுத் துறை சொத்துகளை மாற்றித் தருவதற்கு அரசாங்கம் ஏன் அதிக அக்கறை காட்டுகிறது?

பட்டாபி கட்டுரை.

Sunday, August 16, 2015


 நமது மாநிலத்தலைவர் 

தோழர் M. லட்சம் அவர்கள் 31/08/2015 ல் 

பணி ஒய்வு பெறுகிறார். 




மதுராந்தகத்தில் இலாக்கா பணி துவக்கி, 

கிளைசெயலர்,மாவட்ட சங்க நிர்வாகி என காஞ்சி, 

செங்கை, மாவட்டங்களில் இயக்க பணி ஆற்றி

மதுரை மாவட்ட சங்கத்தில்,

 மாநில சங்கத்தில் பணி ஆற்றி 

இந்த மாதம் பணி ஓய்வு பெறும்  தோழர் M. லட்சம், 

மாநிலத் தலைவர், NFTE-BSNL, அவர்களை 

வாழ்த்துகிறோம்!              வணங்குகிறோம்! 

செப் - 2 பொது வேலை நிறுத்த அறிவிப்பும், கோரிக்கையும். 
============================




மாநிலச்செயலர்கள்  கூட்ட முடிவுகள்

நமது NFTE  சங்கத்தின் மாநிலச்செயலர்கள் கூட்டம்
 டெல்லியில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

============================================
தேசம் முழுவதுமுள்ள BSNL  செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து
புதிய துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும்  அரசின் மோசமான முடிவை எதிர்த்து அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து  போராட்டக்களம் காண மத்திய சங்கம் முழு முயற்சி செய்ய வேண்டும்.

============================================
BSNL நிறுவனத்தை சீர்குலைக்கும் மற்றொரு முயற்சியாக 
நமது அகன்ற அலைவரிசை இணைப்புகளில் உருவாகும் பழுதுகளை நீக்கும் பணியை சில குறிப்பிட்ட மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் தனியாருக்கு விடுவதற்கு எத்தனிக்கும் நிர்வாகம் தனது ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட மோசமான முடிவைக் கைவிட வேண்டும்.

============================================
DELOITTEE  குழு பரிந்துரையின் பாதகங்களை மாநிலச்செயலர்கள்  கூட்டம் விரிவாக விவாதித்தது.  DELOITTEE  குழு பரிந்துரை அமுலாக்கத்தில்  எந்தவொரு இறுதி முடிவு எடுப்பதற்கும்   
முன்பு சங்கங்களைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து 
ஏற்பட்ட பின்னரே முடிவுகளை அமுலாக்க வேண்டும்.

============================================
உற்பத்தியோடு இணைந்த போனஸ் வழங்கும் விவகாரத்தில் தற்போதைய போனஸ் குழுவின் செயல்பாடுகளை மாநிலச்செயலர்கள் கூட்டம் பாராட்டுகிறது. வரும் தீபாவளிக்குள் சாதகமான முடிவு எட்டப்பட வேண்டும். அவ்வாறு எட்டப்படாத பட்சத்தில் 
மத்திய சங்கம் போராட்ட அறிவிப்பு செய்திட வேண்டும்.

============================================
ஊழியர்கள் பெயர் மாற்றக்குழுவின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. அதே நேரம் அதிருப்திக்கு ஆளான SR.TOA தோழர்களின் பெயர் மாற்றம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். NE-10ல் உள்ள தோழர்கள் துணைக்கண்காணிப்பாளர்கள் என்றும், NE-9ல் உள்ள தோழர்கள் உதவிக்கண்காணிப்பாளர்கள் என்றும் அழைக்கப்பட வேண்டும்.

============================================
இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் மோசமான தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து செப்டம்பர் 2ல் நாடு முழுக்க நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் NFTE முழுமையான பங்கு பெற வேண்டும்.

Friday, August 14, 2015

Image
                     நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
                       விடியலை நோக்கி செல்கின்றோம்;
                    வேகம் கொஞ்சம் குறைவுதான்;
                        தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
                    ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
                          தயங்கி நிற்கவும் போவதில்லை;
                     பயணம் என்றும் தொடரும்;
                          விடியலை வென்றும் காண்போம்.





ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம்..
சொன்னா நம்புங்க நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்..
ஆட்சியாளர்களை எதிர்த்து பேசினால் சட்டங்கள் பாய்ந்தாலும்..
தமிழ் சொந்தங்களுக்காக போரடினால் தேசிய பாதுகாப்பு பாய்ந்தாலும்..
சட்டங்கள் பாயமுடியாத இடங்களில் குண்டர்கள் பாய்ந்தாலும்..
தமிழ் சொந்தங்களின் படுகொலைகளை கண்டு கதறியழக்கூட உரிமையில்லை என்றாலும்..
மன்னராட்சி போன்ற மாயை தோன்றினாலும்..
நம் நாடு சுதந்திரம் அடைந்து விட்டது என்பது தான் உன்மை...

சுதந்திரமே இல்லாத தமிழனுக்கு சுதந்திர தினம் ஒரு கேடா என்று யாரும் கேட்டுவிடக் கூடாது...

ேசியக் கொடியின் ஆரஞ்சு நிறம் தியாகத்தன்மையை குறிக்கிறது--- தேசத் தலைவர்களிடம் அது இல்லை.

வெள்ளை நிறம் அமைதியை குறிக்கிறது---- கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை அதுவும் இல்லை.

பச்சை நிறம் பசுமையை குறிக்கிறது--- உலகமயமாக்கலால் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. (விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் அதே வேளையில் விவசாயிகளும் தற்கொலை)
இதுவா சுதந்திரம்?

சதிக்கு கால் 

முளைத்து சாதி ஆனதோ

மதத்திற்கு மதம் பிடித்து

மரணம் ஆகின்றதோ?

இதுவா சுதந்திரம்?


சாதியா நம்

ஒருமைப்பாடு? 

மதமா நம் ஒற்றுமை?


உண்மை தான் நம் பண்பு..!

உழைப்பு தான் நம் தெம்பு..!

அன்பு ஒன்று தான் நம் பிணைப்பு..!


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
..!

Tuesday, August 11, 2015

 பயனுள்ள தகவல்கள்
        நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

🔴இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.


செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR