தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, August 28, 2015

சென்னை சொசைட்டியில் BSNLEU வின் அக்கறை.


     சொசைட்டியில் கடனுக்கான வட்டியை குறைக்க வலியுறுத்தி தலைவருடன் சந்திப்பு என்ற தலைப்பில் BSNLEU தமிழ் மாநிலச் சங்கத்தால்  சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   மேலோட்டமாகப் பார்த்தால் விஷயம் தெளிவுதான்.   ஆனால் அதன் உள்நோக்கம் நமக்கு வேறு விதமாகப்படுகிறது.   எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கோரிக்கைக்கு கையெழுத்து இயக்கம் இயக்கம் தேவையா? இதற்கு 4000 பேர் கையெழுத்திட்டார்களம்.   10 லட்சம் கடன் என்று சொல்லுங்கள், 8000 பேர் கையெழுத்திடுவார்கள்.


   சொசைட்டியில் எந்த ஒரு மாற்றத்தையும் இயக்குனர்களும், RGB க்களும்தான் கொண்டு வர முடியும்.   RGB கூட்டத்தில் தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வரும்போது அங்கு, அந்த நியாயத்தை RGB க்கள் வலியுறுத்த வேண்டும்.   கடந்த 5 ஆண்டுகளில் BSNLEU தலைவர்கள், RGB க்கள் ஒரு எதிர்ப்பைக் கூட தெரிவித்ததில்லை.   அதே போல் எந்தவொரு மாற்றத்தையும் அவர்களால்  கொண்டுவர முடியவில்லை.   அப்போதுதான் 14.5 ஆக இருந்த வட்டி விகிதம் 16.5 % ஆக மாறியது.  இந்த வட்டி உயர்வை மற்றவர்கள் எதிர்த்தபோது அதை ஆதரித்து பேசியவர்கள் இவர்கள்தான். நிலத்தைப் பிரிப்பது, வட்டி வீதத்தைக் குறைப்பது, ICICI வங்கியிலிருந்து விடுபடுவது, செலவினங்களைக் குறைப்பது போன்ற எந்த கோரிக்கையும் அப்போது நிறைவேறவில்லை.   

        இப்போது 14.5 % ஆக குறைக்கப்பட்ட  வட்டி விகிதம் 16% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   முன்பைவிட 1/2 % குறைந்த நிலையில்தான் உள்ளது.   இதைச் சொல்லி  வட்டி உயர்வை நியாயப் படுத்திட விரும்பவில்லை.  சாதித்துக் காட்டியவர்கள் குறை சொன்னால் அதை நம்மால் ஏற்றுகொள்ள முடியும்.  சொசைட்டியால் பலனடையாத சங்கம்  
குறை சொன்னால் அதையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.    ஆனால் EU வின் நோக்கம் வேறு என்பது சொல்லாமலே புரியும். 

              நமது தோழர்களின் கடன் பசி அதிகரித்துக் கொண்டே வருகிறது.   அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முதலில் முயல வேண்டும். ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் என்றால் 15000 பேருக்கு எவ்வளவு தொகை தேவைப்படுகிறது.     ஒரே மாதத்தில் 200 கோடி, 300 கோடி என்று பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?     அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள்  20 கோடி, 30 கோடிக்கு மேல் கடன் தருவதில்லை .   ICICI போன்ற வங்கிகள் அதிக தொகையை தந்து, அதிக வட்டியையும் கேட்பதாக கூறுகிறார்கள்.   

   இந்த அளவு வட்டிக்கு எனக்கு பணம் வேண்டாம் என்று உறுப்பினர்கள் சொல்வதற்கான மன நிலைமையையும், அதே நேரத்தில்   வட்டிக் குறைப்பு, அரசு வங்கியில்தான்  கடன் வாங்க வேண்டும் என்ற  தன்மையையும், அதற்கான  ஒற்றுமையை, ஆவேசத்தை RGB கூட்டத்தில் நாமெல்லாம் உருவாக்க வேண்டும்.     அங்கே ( RGB கூட்டத்தில்) தமிழ்நாடு,  சென்னை என்று எவருமே குரல் கொடுக்காமல் இருந்துவிட்டு,  இங்கு எங்கள் சங்கம் கையெழுத்து இயக்கம் நடத்தி, மனு கொடுத்துவிட்டது.   நடக்க வில்லையென்றால் தமிழகம் முழுவதும் (சென்னை நீங்கலாக) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதெல்லாம் வெற்று அறிவிப்பைத் தவிர வேறென்ன?

    வேதனையை அதிகரித்து அதை வெளிப்படுத்தி, உங்களுக்காக  அழ இங்கு  என்னைத் தவிர யாரால் முடியும் என்பதெல்லாம் பழைய தேர்தல் உத்தி.    கோரிக்கை வைப்பது, மனு கொடுப்பது என்பதோடு நில்லாமல் போராட வேண்டும்.   போராட வைக்க வேண்டும்.   அதுதான் நல்ல தொழிற்சங்கத்துக்கு அழகு! 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR