தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, September 18, 2010

15 - 09 - 2010  அன்று   திருவையாற்றில் நடைபெற்ற தஞ்சை மாட்ட செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
      1. மாவட்டச் செயற்குழு, கிளை மாநாடு, பணி நிறைவு பாராட்டு விழா ஆகியவற்றை இணைத்து வெகு சிறப்பாக நடத்தித் தந்த திருவையாறு கிளைத் தோழர்களை இச் செயற்குழு வாழ்த்தி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது .

      2.  மாவட்ட முழுமையும் ஏற்பட்டுள்ள Cable Fault , Cell tower   signal கிடைக்காத பிரச்சினை, WLL Problem  ஆகியவற்றை சரி செய்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிர்வாகத்தை இச் செயற்குழு கோருகிறது. 
     
     3. இலவசத்தால் மக்களை மழுங்கடிக்கும் எந்தத் திட்டத்தையும் நாம் நிராகரிக்கிறோம்.   வருகிற 18-09-2010  முதல் வறுமைக்கோட்டிற்குக்  கீழ் உள்ள மக்களுக்கு செல் போனும், சிம் கார்டும் இலவசமாக BSNL வழங்கும் திட்டத்தால் வறுமைக்கோட்டை நீக்கி விட முடியாது என்று இச் செயற்குழு கருதுகிறது.   ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கும் நமது துறைக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இத் திட்டத்தைக் கண்டிக்கிறோம். 
     இதனால் BSNL க்கு ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு முழுமையாக ஏற்க வேண்டும் என்றும் கோருகிறோம்.   BSNL  ன் நிதி ஆதாரம் குறித்து கடந்த 2000 ல் NFTE - FNTO - BTEF  ஆகியவைகள் இணைந்து போராடிப் பெற்ற உரிமையை அமுல்படுத்து என்று செயற்குழு கூறுகிறது. 
     
     4. அக்டோபர் 19, 20, 21  ல் நடத்தப்பட இருக்கும் 3  நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட இச் செயற்குழு வேண்டுகிறது. 
     5.  தோழர் ஹிந்தி பாஸ்கரன் TM, விமல்ராஜ் TTA, கைலாசம் TM  ஞானசுடர் TM, சீனிவாசன் Sr . TOA ( VRS ) பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நெஞ்சு நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.  துணை நின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி. 
     6.  Housekeeping,  Cable Contract  மற்றும் ESM  தோழர்களுக்கு   மாத     ஊதியம் பிரதி மாதம் 7 ஆம் தேதிக்குள் அளித்திட   உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை இச் செயற்குழு வேண்டுகிறது. 
     7. நமது சங்கம் மற்றும் கூட்டணிச் சங்கத் தோழர்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகளை ( மாற்றல் & தண்டனை ) நிர்வாகத்துடன் தொடர்ந்து  பேசித் தீர்க்கும் என செயற்குழு உறுதி அளிக்கிறது. 
     8.  நமது DLC / TNJ  தோழர் நாகராஜன் TM  அவர்களின் செயற்கைக் காலுக்கு நிதியைப் பெற்றுத்  தந்த மாநிலச் செயலருக்கு நமது நன்றி. கூடுதலாக நிதி பெற முயற்சிக்கின்றோம். 
     9.  ESM தோழர்களின் லீவ் சம்பளம் 28.98% பெற்றுத் தர மாவட்டச் சங்கம் நடவடிக்கை எடுக்கும். 
    10.  OPC  மற்றும் மார்க்கெட்டிங் பகுதி தோழர்களின் பிரச்சனைத் தீர்க்கவும் பிரத்யேகக் கவனம் செலுத்தவும் இச் செயற்குழு  முடிவு செய்கிறது. 
    11.  அனைத்து குருப் D , RM  தோழர்களை TM  தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென இச் செயற்குழு மாநிலச் சங்கத்தை வேண்டுகிறது.   10 th  passed என்ற நிபந்தனையை நீக்கிட வேண்டும் என்றும் கோருகிறோம். 
     12.  தனித்தனியே செயல்பட்டு வந்த OFC மைன்டனன்ஸ் மற்றும் நெட் ஒர்க் பிளான்னிங் ( NWP ) இணைப்பினை மறு பரிசீலனை செய்திட வேண்டுமென செயற்குழு வேண்டுகிறது.

     13.  TTA தோழர்களுக்கு JTO தேர்வு எழுத வழிவகை செய்திட நமது அகில இந்திய சங்கம் எடுத்த நடவடிக்கையை SNATTA  சங்கம் வரவேற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியது. அவர்களின் முன்னேற்றத்திற்கு அகில இந்திய மாநிலச் சங்கம் எடுக்கும் முயற்சியை இச் செயற்குழு வரவேற்கிறது. 

     14.  எஞ்சியிருக்கும் TOA  தோழர்களுக்கு Sr. TOA பதவி உருவாக்கத்திற்கான   நடவடிக்கையினை  எடுத்த மாநிலச் சங்கத்திற்கு இச் செயற்குழு தமது நன்றியைப் பதிவு செய்கிறது.  அவர்களுக்கு Sr. TOA
பயிற்சி விரைவில் அளித்திட இச் செயற்குழு  வேண்டுகிறது. 

     15. TTA  தேர்வில் தேர்வு பெற்று நீதிமன்றத் தடையால் பாதிக்கப்பட்டிருக்கும் TM  தோழர்களை TTA Officiating ஆக பணியமர்த்த ஆவன செய்யுமாறு மாநிலச் சங்கத்தை இச் செயற்குழு கோருகிறது. 


     16.  நமது மாநிலச் சங்க கட்டிட நிதிக்கு புரவலர் நிதியாக ரூபாய் 5000  அளித்திட்ட தோழர்கள்,
     பட்டுக்கோட்டை S.  சிவசிதம்பரம்,
     தஞ்சை                  K.  நடராஜன், 

     மன்னை                K.  கிள்ளிவளவன் 
     தஞ்சை                  L.  சந்திரப்ரகாஷ் 
     தஞ்சை                  T.  சிவதாஸ் 
     தஞ்சை                  T.  குமார் OPC 
     தஞ்சை                  D.  கலைச்செல்வன்
     அய்யம்பேட்டை  S.  ஞானசுடர் 
ஆகியோரை இச் செயற்குழு வாழ்த்துகிறது.
     அதே போல் கட்டிட நிதியாக ரூபாய் 5000 வழங்கிய 
பட்டுக்கோட்டை கிளையினையும், 
ரூபாய் 1001 வழங்கிய திருவையாறு கிளையினையும் 
இச் செயற்குழு பாராட்டுகிறது.  
     அதோடு கட்டிட நிதியினை அளிக்கவிருக்கும் தோழர்களும், கிளைகளும் தயவு செய்து இம் மாத இறுதிக்குள் அளித்து உதவிடுமாறும் செயற்குழு வேண்டுகிறது.
    17. செப்-7 ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் மாவட்டச் செயற்குழு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. 

                                                                  G. கேசவன், மாவட்டச் செயலர். 
 


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR