தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, September 19, 2010

தியாகத்தை நினைவு கூர்வோம்.....
  ( S. சிவசிதம்பரம் )
 தியாகிகள் தினம்   -    செப்டம்பர் 19

     தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968, SEP  19  அன்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தம்தான் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ் வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள்: 
   * தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம்  அளித்திட வேண்டும்.
   * கிராக்கிப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும்.
   * DA FORMULA வினை மாற்றி அமைக்க வேண்டும்.
     இதை அறிவித்து வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே தலைவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துவக்கி விட்டது.   பாண்டிச்சேரியில் செப் 17 அன்று கைது துவங்கியது.    பொதுச் செயலர் D. ஞானையா செப் 18 காலையில் கைது செய்யப்பட்டார்.      ஞானையா
கைது செய்தி கேள்விப்பட்டவுடன் டெல்லியில் உள்ள அனைத்து P & T  அலுவலக  ஊழியர்கள் WALKED OUT  செய்தனர்.   டெல்லியில் உள்ள அனைத்து P & T நிர்வாக பகுதிகளில் 18 ம தேதி காலை 11  மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது. 
     டெல்லியில் மட்டும் 1650  P & T ஊழியர்களும் 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள். P & T தோழர்கள் 4000 பேர் உள்ளிட்ட   10000 பேர் கைது செய்யப்பட்டனர். 
     வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற 280000  பேரில் பாதி தோழர்கள் நாம்தான்.   140000 ஊழியர்கள்.   கைதானதிலும் 40 %  நாம்தான். 
     8700 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதில் P & T தோழர்கள் 3756 பேர்.   44000 தற்காலிக ஊழியர்களை Termination  செய்ய நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. 
   எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இது போன்ற கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நடைபெற்றதில்லை. 
     மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் ஆந்திரா, டெல்லி ஆகிய இடங்களில் வேலைநிறுத்தம் தீவிரப்பட்டது. 
     மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பரவலாக நடைபெற்றது. 
     கர்நாடகா, குஜராத், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மட்டும் அவ்வளவான பங்களிப்பு இல்லை. 
     பிகானிர், பதான்கோட், மரியாணி, பொங்கைகான் ஆகியவிடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 9  ரயில்வே தொழிலாளிகள் பலியானார்கள்.   பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.       கூட்டு நடவடிக்கைக் குழு அரசிடம் பழிவாங்கலைக் கைவிடக்கோரியும் அசையாததால் விதிப் படி வேலை போராட்டத்தை துவங்கியது. 
     விதிப்படி வேலை ( work to rule ) போராட்டத்தை நாடுமுழுதும் பெரிய அளவில் செய்திட வேண்டி திகார் ஜெயிலிலிருந்து பொதுச் செயலாளர் ஞானையா கடிதம் எழுதினார்.  இக் கடிதம்   ஜெயிலிலிருந்து கடத்தப்பட்டு அனைத்துக் கிளைகளுக்கும் பரப்பப்பட்டது.   கடிதத்தில்,  
    அரசின் பாசிச போக்கிற்கு, பழிவாங்கலுக்கு எதிரான போராட்டத்தை மன உறுதியுடன் நாம் எடுத்துச் செல்வோம்.   அரசு ஊழியர்க்கெதிரான நடவடிக்கைகளை வாபஸ் பெரும் வரை விதிப்படி வேலை போராட்டத்தோடு மட்டுமல்லாது மற்ற மற்ற உபாயங்களையும் மன உறுதியோடு, போர்க்குணத்தோடு செயல்படுத்துங்கள் தோழர்களே. தபால் தந்தி சேவையின்  இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய வையுங்கள். நம்மை யாரும் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது.  நமது வெற்றியை நோக்கி முன்னேற கடுமையான போராட்டத்திற்கு தயாராகுங்கள். 
     பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு நிவாரண நிதி திரட்டுங்கள்.  எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பெருமளவிலான  நிதி திரட்டுவதற்கு ஆயத்தமாகுங்கள்  தோழர்களே.  O T  WORK பார்க்கவிடாதீர்கள்.   உள்ளே, வெளியே மற்றும் வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று 21 ம தேதி கடிதம் எழுதினார்.
     
     இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்று படுத்த உதவியது.  தொழிலாளர் சக்தியை அரசும் உணரத் துவங்கியது.
எதிர்காலப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய செப் 19 போராட்ட தியாகிகளுக்கு நமது வீர வணக்கத்தை உரித்தாக்குவோம்.

                                     நன்றி: D. GNANAIYA s  GLIMPSES OF A UNIQUE UNION  
 





 


















No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR