செப் - 30 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
தஞ்சை CTMX வாயிலில்
செப் - 30 காலை 10 மணி.
தஞ்சை CTMX வாயிலில்
செப் - 30 காலை 10 மணி.
NFTE, FNTO, WRU, ATM, PEWA, EC, ES, BTEU, NTSU ஆகிய ஒன்பது சங்கங்கள்
இணைந்து நாடு முழுவதும் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம்.
கடந்த 2008 நவம்பர் 11 அன்று 4 ஆவது சரிபார்ப்பு தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், புதிய விதிகளை (Code of Discipline ) உருவாக்க ஒப்புக் கொண்ட தலைமை தொழிலாளர் ஆணையர், BSNLEU மற்றும் TEPU சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஒருமித்த குரலில் நிலைமையை எடுத்துச் சொன்ன ஒன்பது சங்கங்களைப் புறந்தள்ளியதைக் கண்டித்து நடத்துகின்ற ஆர்ப்பாட்டம்.
விகிதாசாரப் பிரநிதித்துவம் மூலம் ஒற்றுமையைப் பலப்படுத்தியிருக்க வேண்டிய இத் தருணத்தில், அதிகார ஆசையால் வேண்டுமென்றே அதைக் கை நழுவவிட்டு நிர்வாகத்திற்கு துணைபோய்விட்ட BSNLEU சங்கத்தைக் கண்டித்து நடத்தப்போகும் ஆர்ப்பாட்டம்.
தொழில் அமைதிக்கு நல்லதோர் வாய்ப்பு வந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கம் விரும்பவில்லை என்பதை, தோழர்களுக்குச் சொல்ல வேண்டாமா! அதற்கான ஆர்ப்பாட்டம் தான் தோழர்களே!
BSNLEU வுக்கு ஆதரவாக கூட்ட நிகழ்ச்சி நிரலையே மாற்றி அமைத்து பிப்ரவரி 1, 2011 என்று தேர்தல் தேதியையும் அறிவித்த நிர்வாகத்திற்கு சரியான பாடம் புகட்டுவோம்.
BSNL நிர்வாகமே புதிய அங்கீகார விதிகளை
வகுத்திடு!
புதிய விதிகளின்படி தேர்தலை நடத்து!
அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் குறைந்த
பட்ச தொழிற்சங்க சலுகைகளை, உரிமைகளை
வழங்கிடு!
என்பதற்கான நியாயத்தை இப் போராட்டத்தின் மூலம் ஓங்கி ஒலித்து, ஊழியர் தரப்பு ஒற்றுமைக்கு விளைந்த ஊறினை களைந்திடுவோம் தோழர்களே!!
அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். G . கேசவன், DS , தஞ்சை.
No comments:
Post a Comment