செக்யூரிட்டி தோழர்களின் லீவ் நாள்
சம்பளப் பிரச்சினை .........
கடந்த ஏப்ரல் 2009 முதல் செக்யூரிட்டி தோழர்களின் லீவ் நாள் சம்பளம் 28.98% இன்று வரை கொடுக்கப்படாமல் கடந்த 16 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி நிர்வாகத்திடம் நாம் இதுவரை வாய்மொழியாக தீர்த்துத் தரக் கோரியுள்ளோம்.
அவர்களே பார்த்து வரும் அந்த விடுமுறை நாள் வேலையைப் பார்ப்பதற்கு கூடுதலாக செக்யூரிடிகளை நிர்வாகம் ஏஜென்சியிடம் கோரியது. அதற்கு ஏஜென்சி Additional Security Forces தர தம்மால் இயலவில்லை என்பதை நிர்வாகத்திடம் பதிவு செய்துள்ளது.
நமது வேண்டுகோளும் அவர்களின் எதிபார்ப்பும் என்னவென்றால், இதுவரை holiday duty பார்த்தவர்களுக்கு ஏற்கனவே கொடுத்து வந்த அடிப்படையில் உடனடியாக சம்பளத்தைத் தந்துவிட வேண்டும். அதன் பிறகு வரும் காலங்களுக்கு additional security guards வைத்துக் கொள்வதா அல்லது holiday salary யைத் தருவதா என்பதை நிர்வாகம் முடிவு செய்யட்டும்.
இது நாள் வரை பணி செய்தவர்களுக்கு அவர்களுக்கான நியாயத்தை வழங்காமலிருப்பது சரியல்ல. சுமுகமாக இதைத் தீர்க்கக் கோருகிறோம். மாநிலச் சங்கத்திடம் இதைத் தெரிவித்திருக்கிறோம் பட்டாபி அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமாக தெரிவித்துவிட்டு மாநிலத்திற்கு நகல் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். நாமும் நாளை மனு கொடுக்கவிருக்கிறோம்.
நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்.
K நடராஜன் மாநிலத் துணைச் செயலர்.
No comments:
Post a Comment