சொசைட்டி செய்திகள்
ஏற்கெனவே நாம் நம் வலைதளத்தில் அறிவித்தது போல் நிலம் வாங்குவதற்கான விண்ணப்ப படிவ மாதிரி சொசைட்டி வெப்சைட்டில் சில காரணங்களால் போடப்படவில்லை. தற்போது அந்த விண்ணப்பக் கடிதம் அருகாமையில் உள்ள சொசைட்டி கிளை அலுவலகங்களில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு படிவம் 10 ரூபாய் விலையில் வழங்கப்படுகிறது. ஒருவரே எத்தனை படிவம் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம். அதேபோல் ஒருவரே பூர்த்தி செய்த படிவங்களையும் மொத்தமாக எடுத்துச் சென்று கொடுத்து, அனைத்து படிவத்திற்கும், அலுவலரிடம் கையெழுத்து பெற்று acknowledgement வாங்கி வரலாம்.
படிவம் வாங்காதவர்கள் உடன் வாங்கிச் செல்லவும்.
படிவம் வாங்கியவர்கள் உடன் பூர்த்தி செய்து அனுப்பவும்.
பூர்த்தி செய்து படிவம் கொடுத்து acknowledgement பெற்றவர்கள்
அதைப் பத்திரமாக வைத்திருக்கவும்.
இவை எல்லாவற்றையும் முடித்தவர்கள் இந்த விபரங்களை
தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும்.
மீண்டும் நிலம் பற்றி: 95 ஏக்கர் நிலம் சொசைட்டியின் சொத்து. இன்று அந்த நிலத்தை சொசைட்டி உறுப்பினர்களிடம் முறையான விலையில் விற்று அந்தத் தொகை சொசைட்டியில் வரவு வைக்கப்படும். சொசைட்டி அந்தத் தொகையால் நிலம் வாங்குவதற்காகப் பெறப்பட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து அடைக்கும். மீதமுள்ள தொகையை உறுப்பினர்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தும்.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உரிய காலத்தில் லட்சக்கணக்கில் தங்களது சொந்தப் பணத்தைக் கொடுத்து வாங்கி நிலத்தை குறித்தக் காலக் கெடுவுக்குள் ரிஜிஸ்தர் செய்து கொள்ள வேண்டும்.
குலுக்கலில் பெயர் வராதவர்கள் பேசாமல் போக வேண்டியதுதான். அவர்களுக்கு எந்த பங்கும் ( SHARE ) சொசைட்டியிலிருந்து கிடையாது.
இதில் தலைவர், இயக்குனர்கள் மற்றும் RGB க்கள் எவருக்கும் யாதொருவிதமான முன்னுரிமையோ பின்னுரிமையோ கிடையாது. எல்லோரும் ஓர் நிலைதான்.
சொசைட்டி அதிக அளவிலான கடனை உறுப்பினர்களுக்கு வங்கியிலிருந்து கடன் வாங்கித்தான் நமக்கு அளிக்கிறது. அதிலிருந்து வரும் லாபத்தை விதிக்குட்பட்டு அதிக பட்ச அளவான 12 சதவீதத்தை டிவிடெண்டாக நமக்கு ஆண்டு தோறும் வழங்குகிறது. இப்போது நமக்கு கடனுக்கான வட்டியை குறைத்திடவும், THRIFT FUND க்கான வட்டியை உயர்த்திடவும் முயற்சித்து வருகிறது.
உறுப்பினர்களிடையே பல கற்பனைகள் ( கருத்துகள் ) நிலவுகின்ற காரணத்தினால்தான் இந்த விளக்கம்.
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB, பட்டுக்கோட்டை.