தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, April 28, 2013

அடி தடி நமது கலாச்சாரமல்ல!  
அடி தடிக்கு அஞ்சியதும் நமது மரபல்ல!! 

இன்று கடலூரில் விரும்பத்தகாத நிகழ்வை 
நிகழ்த்திய தோழர்கள் மீண்டும் சரிவை நோக்கிச் செல்கிறார்கள் 
என்றே கருதுகிறோம்.  

உடனே இதை தலைகுனிவு என்றெல்லாம் சொல்ல முடியுமா!
ஜெகனுக்கு ஏற்பட்ட சோதனைகளை  எல்லாம் கண்ணால்   
பார்த்தவர்கள்தானே நாம்.  

நமது தேர்தல் முடிந்து 10 நாள்கூட ஆகவில்லை. 
அதற்குள்ளே அங்கு நடக்கும் கூட்டுறவு பண்டகசாலை தேர்தலில் நமது தோழர்களே எதிரணியோடு கூட்டு சேர்வது என்பது NFTE  க்கு அவமானத்தை தரும் என்பதை உணர வேண்டாமா! 

இது தமிழக NFTE க்கு பெருத்த அவமானத்தை எல்லாம் தராது.   
சொந்த சங்கத்திற்கே ஓட்டுப் போடாத போதும்,  வாக்கு சேகரித்தவர்களே வாக்களிக்காத போதும் வெற்றி கண்ட தமிழகத்திற்கு பெருத்த அவமானம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. 

எதையும் கையாளும் திறமை 
நமது மாநிலச் செயலருக்கு உண்டு.
கையை உயர்த்திப் பேசினால் கூட எனது தோழன் முகம் கன்றிப் போய்விடுவானோ  என்று எண்ணி கையைத் தாழ்த்திப்  பேசும் நமது தலைவர்  இதனையும் திறமாகக் கையாளுவார். 

ஒரு மாவட்டச் செயலர், 
தான் எழுதிய நோட்டீசை அவருடைய எல்லைக்குள்ளே உள்ள 
தகவல் பலகையில் ஓட்டுவதற்கு உரிமையில்லையா?    
சரி! அப்படியே இல்லையென்றாலும் 
அதற்கு  எதிர்ப்பை இப்படியா காட்டுவது?  
மாவட்டச் செயலருக்கு எதிரிலேயே கிழிப்பது, கை நீட்டுவது என்பதெல்லாம் ஒரு கிளைச் செயலருக்கு அழகல்லவே!
எமது மாவட்டத் தோழர்கள் இப்படி ஒரு நிகழ்வை 
எண்ணிப் பார்க்கவே கூசுவார்கள். 

இந்த மாதிரி சம்பவத்தை முன்மாதிரியாக 
கொண்டு எவரேனும் நடப்பாரேயானால் 
விளைவுகள் மோசமாகப் போகும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.

இதை மாநிலச் செயலர் உணர வேண்டும்
 என்பது அவசியமில்லை.  
மாவட்டச் செயலர்கள் உணர்ந்தாலே போதும்.

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
                  மெய்ப்பொருள் காண்பதறிவு.

அன்புடன், 
எஸ் சிவசிதம்பரம், 
பட்டுக்கோட்டை. 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR