தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, April 14, 2013

ஜென்மச் சனி விலகிடும் 
நல்வழி பிறந்திடும்  
BSNL க்கும் போனஸ் உண்டு என்ற நிலையை NFTE தான்  கொண்டு வந்தது.  பிறகு இந்தியாவிலேயே அதிக போனஸ் பெற்ற நிறுவனம் BSNL  என்ற மாற்றத்தையும் NFTE  தான் கொண்டு வந்தது.
இன்றைய நிலை:
BSNL க்கு போனஸ் இல்லை.  அதிலும் இந்தியாவிலேயே BSNL க்கு மட்டும்தான் போனஸ் இல்லை.  இந்த ஒரு அவமானம் போதாதா!   BSNLEU  வை அகற்றிட.
இயலாமையும்  முடியாமையும் இருப்பதையும்  அழிக்கும் என்பது எவ்வளவு சரியா இருக்கு பாருங்க!
தொடர்ந்து வெற்றி பெற்றவன் சாதனையாளன் என்றால் மத்தியில் ஆளுகின்ற காங்கிரசும், ஆண்ட BJP  யும் தொடரலாமா! தொடர்வது நல்லதா!!   குறுக்கு வழியில் வென்றவர்கள் தொடர்ந்ததும் இல்லை - தொடர விட்டதும் இல்லை.
வெட்டத் தெரியாதவன் கையில உள்ள கத்திக்கு சாணை புடிச்சாலும் சரி, புடிக்காட்டியும் சரி. ஒரு பயனுமில்லை.  இந்த நிலையில்  அங்கீகாரத்த வச்சு அபிமன்யு வால் என்ன செய்ய முடியும்.   30 கோடியிலே கட்டடம் மட்டும் கட்ட முடியும். 

சரி!  இந்த முறையும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்கிறதே BSNLEU!
எதற்காக?  போஸ்டல் ED யைப்போல BSNL தொழிலாளியையும் காவு கொடுக்கவா!   

அடுத்து பாருங்க,
ஒன்றா!  இரண்டா!!  நாற்பத்தைந்தாயிரம் கோடி ரூபாயை காத்து, அதிலேர்ந்து நாலாயிரம் கோடி வட்டியும் சம்பாதிச்சதே BSNL, அதை அப்படியே இல்லாமல் பண்ணியதே அதற்காகவா  EU மறுபடியும் ஜெயிக்கணும்.

அத விட வயித்தரிச்சல், BSNL க்கு 10000 கோடி வருஷ வருமானம் NFTE  இருந்த வரைக்கும் வந்து கொண்டிருந்ததே!  அது இப்ப என்னாச்சு> 10000 கோடியும் இல்லாம போனதோடவாவது உட்டுச்சா!  10000 கோடி நஷ்டத்துல வேறல்ல போச்சு. சனி சக்கரம் கட்டில்ல  அடிக்குது. 
இதெல்லாம் தெரிஞ்சதுதானேங்கரீங்களா!   தாங்க முடியாத வேதனையை திரும்பத் திரும்ப சொல்லித்தானே ஆத்திக்க  வேண்டியிருக்கு.

EU சங்கத் தோழர்கள் முன்ன  NFTEக்கு உள்ளே  இருந்து கொடச்சல் கொடுத்த காலத்திலேயே எவ்வளவு மாற்றத்த, உயர்வை, மேல, மேல அப்படியே ஒசக்க கொண்டு போய்க்கிட்டே இருந்தமே! அது இப்ப என்னாச்சி.   EU  சனி சங்கு சக்கரம் சுத்தி  அனைத்தையும் தரை மட்டமாக்கிடுச்சி!
NFTE காலத்திலே ஒரு தாழ்வு, ஒரு இறக்கம், நஷ்டம் ஏதாவது இருந்ததா!  BSNLEU  மாதிரி ஊழியரை ஏமாத்துற வாக்குறுதிதான் எதுனாலும் குடுத்துச்சா சொல்லுங்க.  
எனவேதான் தோழர்களே! அடக்கமும் ஆற்றலும் கொண்ட NFTE சங்கத்திற்கு வாக்களிப்பது ஒன்றுதான் நமக்கும் நமது துறைக்கும் வாழ்வளிக்கும்.   அதுதான் அனைத்தையும் உருவாக்கும்!  

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR