தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, October 29, 2013

போனஸ் கேட்டு 30-10-2013 அன்று 
ஒரு நாள் உண்ணாவிரதம்.
     எல்லா சங்கமுமா! தெரியாது? எல்லா தோழர்களுமா!  சொல்ல முடியாது.   3 ஆண்டு காலமாய் வராதது இப்போவா வரப் போகிறது. வராத 4 ஆம் ஆண்டுதான் வரப் போகிறது.   பின் எதற்கு உடல் வருத்தி, வேலையைக் கெடுத்து, தோழர்களை ஒருங்கிணைத்து இந்த உண்ணாவிரதம்?
     நமது கோரிக்கையின் நியாயத்தை நாம் எந்த அளவிற்கு உணர்ந்திருக்கிறோம்?  நமது துறை என்ன நினைக்கிறது.  எல்லா சங்கத்திலும் உள்ளவர்கள் எந்தளவு உணர்கிறார்கள்!  இந்த விடைதான் நமது எஞ்சிய கோரிக்கைகளை எதிர் காலத்தில் வென்றடைய வாய்ப்பை உருவாக்கும்! அதனால்தான் நமது மாநிலச் செயலர் Let this voice be clear and louder என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். 
                       போனஸ் என்பது லாபம் வந்தால் மட்டுமே தரப்படும் ஒன்றல்ல.  தொழிலாளிக்கு அது உரிமையாக்கப்பட்ட ஒன்று என்பதை உணர வேண்டும்.   Steel பிரிவு தொழிலாளிக்கு 18000 முதல் போனஸ் கிடைக்க AITUC, CITU, HMS, INTUC  எல்லாம் இணைந்து போராடி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.   இங்கு  மட்டும் ஒன்றுபட என்ன  தயக்கம்!  
      (ஒன்று பட்டால் வென்று விடுவோம்!    வென்று விட்டால் ஒன்று பட வேண்டி வருமே  என்ற கவலையாக இருக்குமோ!}
      100 கோடி நமது துறைக்கு மிச்சம் நாம் அனுபவித்த LTC நிறுத்தப்பட்டதால்.
                      1000 கோடி  மிச்சம் 78.2 IDA நிலுவை மறுத்ததால்.
                      400    கோடி நமது துறைக்கு மிச்சம் MRS  ஐ நிறுத்தியதால்.

        இன்னும் ALLOWANCE போன்றவைகளிலும் நிறைய இழந்து மிச்சத்தை ஏற்படுத்திய நமக்கு நிர்வாகம் வெறும் 70 கோடி ரூபாய் செலவாகும்  போனசை மட்டும் மறுப்பதேன்?
இவ்வளவுக்கும் உத்தரகாண்ட் பேரழிவுக்கு நமது BSNL தோழர்கள் மட்டும் 18 கோடியை தந்திருக்கிறோம்.

   எனவே, இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தில் தோழர் பட்டாபி கூறியது போல, நமது நியாயத்தை தெளிவாகவும், உரக்கவும் ஒலிப்போம்.
தோழமையுடன்,
சிவசிதம்பரம்/பட்டுக்கோட்டை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR