நமது மத்திய சங்கம் கீழ்க்கண்ட பிரச்சனைகளை வலியுறுத்தி
BSNL நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது.
- இந்த ஆண்டு நமது வருமானம் ரூ.800/- கோடி உயர்ந்துள்ளதால் BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும்.
- நமது BSNL நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் அளிப்பதற்கான கொள்கை உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.
- TTA மற்றும் TM தோழர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். அதிகாரிகள் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வருவது போல் ஊழியர்களுக்கு தாய்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும்.
- 78.2% சத IDA அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கப்பட வேண்டும்.
- டெலாய்ட்டி கமிட்டி அமுலாக்கத்தின் போது உபரியாகும் ஊழியர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே விற்பனைப்பிரிவு போன்ற பகுதிகளில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment