சத்தியாகிரக சமரில் வெல்வோம்!
அனைத்துச் சங்க ஒற்றுமை கட்டி
அவனியெங்கும் ஓர் குரலில்
கோரிக்கையை எதிரொலிக்கும்
கொள்கைக் கூட்டம் வெல்லட்டும்.
தொழிலாளியின் ஒற்றுமையை
தோற்கடிக்க எண்ணுகின்ற
மத்தியில் ஆளும் அரசுக்கு
பாடம் புகட்ட சபதமேற்போம்
5ம் நாள் சத்தியாகிரகம்
வெற்றிகரமாய் நடத்திவிட்டோம்.
நாம் வைத்த கோரிக்கைகள்,
துறையைக் காக்கும் கோரிக்கைகள்.
மத்தியில் ஆளும் அரசாங்கம்,
ஒப்புக்கொண்ட கோரிக்கைகள்!
தீர்ப்பதற்கு மனமில்லாத
மோசடி அரசு, மோடி அரசு.
தொழிலாளியின் கோபத்தை
கொச்சைப் படுத்திப் பார்க்கிறது.
அறுபதாயிரம் செல்போன் டவர்களை
தனியாருக்கு தாரை வார்க்கும்
தரம் கேட்ட சிந்தனைதான்
டவர் நிறுவன உருவாக்கம்.
டவரை நட்டது BSNL
அனுபவிக்க ஜியோ நெட்டா!
சோறு போட்ட எமது துறையை
எவனும் சூறையாட விடமாட்டோம்!
இன்கம்டாக்ஸ் வரம்பினை
5 லட்சம் ஆக்கிடுவேன்!
5 கோடி மக்களுக்கு
வேலைவாய்ப்பு தந்திடுவேன்!
சொன்னாரே செய்தாரா?
ஒரே பதவி, ஒரே ஊதியம்
ஓய்வூதியருக்கு தந்திடுவேன்!
ஸ்விஸ் பாங்கின் கறுப்புப் பணத்தை
மக்களுக்கே பிரித்தளிப்பேன்!
ஆண்டு மூன்றரை ஆகிறது!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
மத்திய அரசே! மோசடி அரசே!
மக்களுக்குப் பதில் சொல்லு!
இருப்புப் பாதை போட்டுத் தந்து
இயற்கை வளங்கள் அனைத்தையும்
எடுத்துச் சென்றான் வெள்ளைக்காரன்.
சாகர் மாலா திட்டம் போட்டு
கடலோர வளங்களையும்
ஹைட்ரொ கார்பன், மீத்தேனோடு
ஷேல் கேஸ், நிலக்கரியையும்
வெளிநாட்டு கார்ப்பரேட்டுக்கு
விற்கப் போகும் ஆட்சியாளன்
மோடி என்னும் கொள்ளைக்காரன்!
லட்சம் லட்சம் கோடிகளை
,அம்பானிக்கும், அதானிக்கும்
கார்ப்பரேட்டு கொள்ளையருக்கும்
வங்கிக் கடன் என்ற பெயரால்
வாரி வழங்கும் மத்திய அரசே!
பாரதம் என்ன திறந்த வீடா!
இது நாள்வரை ஆண்ட ஆட்சியில்
இதுபோல் ஆட்சி பார்த்ததில்லை.
வாக்கு கொடுத்து ஆட்சிக்கு வந்து
எதையும் செய்ய மனமில்லாது
போக்கு காட்டும் போக்கற்ற ஆட்சி.
சொந்தத் துறையில், அரசுத் துறையில்
அக்கறையில்லா அரசாங்கம்,
தொழிலாளி விரோத அரசாங்கம்
வாழ்ந்தாலென்ன! வீழ்ந்தாலென்ன!
தொடர விடோம் இனி அதனை!
தூக்கியெறிவோம் தோழர்களே!
பேச்சு வார்த்தைக்கு தயாரில்லை
பேசும் தன்மையும் அதற்கில்லை
கார்பரேட்டுக்கு கால்பிடிக்கும்
கயமைப் போக்கும் மாறவில்லை.
சக்திமிக்க சத்தியாகிரகம்
சகலத்தையும் வென்று காட்டும்!
சாதிக்கும் வல்லமை பெற்ற
ஒற்றுமையை கட்டிக் காப்போம்!
No comments:
Post a Comment