மனிதாபிமானம் போற்றுவோம்!
பட்டுக்கோட்டை கோட்டத்தில் காசாங்காடு தொலைபேசி இணைப்பகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும்
தோழர். முருகேசன் நேற்று விபத்துக்குள்ளானார்.
28-04-18 அன்று தொலைபேசி பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது
தவறி கீழே விழுந்து விட்டார். மதில் சுவற்றில் விழுந்ததால் இடுப்புக்கு கீழே உணர்வு இல்லாத நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார். பிறகு அங்கிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வகுமார், குணசேகர், குமார், துணைக்கோட்ட அதிகாரி ஞானசேகர் ஆகியோர் துணையோடு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன் அவர்களும் முன்னதாகவே மருத்துவமனை சென்று, கூடவே இருந்து ஆவன செய்து வருகிறார்.
செய்தி கேள்விப்பட்டவுடன் நமது முதன்மைப் பொது மேலாளர் திரு. C.V. வினோத் அவர்கள் இன்று காலை மருத்துவமனை சென்று முருகேசனைப் பார்த்து ஆறுதல் கூறி, 5000 ரூபாய் நிதி உதவி செய்து, துறை மூலம் இயன்றதை செய்வேன் என்றும் கூறிச் சென்றார்.
PGM அவர்களுடன் TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன் இன்றும் சென்று தோழரைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் ஊரில் இல்லாததால் அவரும் தொலைபேசி மூலம் பேசி விபரங்களை அறிந்தார். ஒப்பந்ததாரர் திரு. ராமச்சந்திரன் அவர்களிடம் பேசி முருகேசனுக்கு நிதியுதவி கோரியிருக்கிறார். அவரும் தருவதாக உறுதி கூறியுள்ளார்.
தாயுள்ளத்தோடு 5000 ரூபாயை மனதார அள்ளிக் கொடுத்திருக்கிறார் நமது பொது மேலாளர் அவர்கள்.
பட்டுக்கோட்டை ஆஸ்பத்திரியில தோழர்கள் ரூபாய் 2500/- நிதி தந்திருக்கிறார்கள்.
ஒப்பந்ததாரரும் நிதியுதவி செய்யவிருக்கிறார்.
உங்களுக்கெல்லாம் மாவட்டச் சங்கத்தின் சார்பாக நெஞ்சு நிறை நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்!
உயர் அதிகாரி ஒருவர், ஒரு ஒப்பந்த ஊழியரை வந்து பார்ப்பதே அரிதான இந்தக் காலத்தில் தனியொருவராக வந்து பார்ப்பதும், பெரிய தொகையை நிதியளிப்பதும், அதுவும் பலமுறை என்பது, நம் காலத்தில் PGM அவர்களின் வருகைக்குப் பின்னர்தான். உதவி செய்யும் மனப்பான்மையை, நல் உணர்வை ஊட்டி வளர்க்கும் நீங்கள் " நல்லா இருக்கணும் " என்று வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்!
தோழமையுடன்,
NFTE-BSNL ,
தஞ்சை மாவட்டச் சங்கம்.
No comments:
Post a Comment