தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, April 21, 2018

ஆஷிபா மரணம் - தேசத்தின் துயரம்!

இந்தச் சம்பவம் எல்லோருக்கும் மிகப் பெரிய மனவலியை ஏற்படுத்திவிட்டது.  ஏனென்றால் எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கின்றார்கள்.  குழந்தைகளுக்கு, தான் என்ன சாதி,  என்ன மதம், கடவுள் என்றால் என்ன என்று ஏதாவது தெரியுமா! அவர்களின் மழலை மொழி, பிஞ்சுக் கரங்கள், கொள்ளைச் சிரிப்பு ஆகியவை நமக்கு  தெய்வீகத் தன்மையை, நேச உணர்வையல்லவா அள்ளித்  தருகிறது. குழந்தை ஆசிபாவை இப்படி சிதைத்திருக்கிறார்களே!  அவர்களுக்கெல்லாம்  குழந்தைகள் இல்லாமலா இருக்கும். அவர்களும் இந்திய நாட்டில் பிறந்து, இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள்தானே!
இந்திய நாட்டின்  ஒருமைப்பாடு, பண்பாடு என்பதெல்லாம் பொய்யா! என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே இந்தக் கட்டுரையின்
நோக்கம்.  

காஷ்மீரத்தில் இக் கற்பழிப்புகள் புதிதல்ல. தொடர் கற்பழிப்புகள் நடைபெற்ற மாநிலம் காஷ்மீர். இதற்கு காரணமான அரசியல் சக்திகள் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டால்தான் இவைகளை நிறுத்த முடியும். இதற்கு மூல காரணம் பாபர் மசூதி இடிப்புக்கான ரத யாத்திரை அரசியல் மற்றும்   ராமர் கோயில் பெயரால் நடத்தப்பட்ட அரசியல்தான்.  நமது ராணுவத்தினரே ஒரு கிராமத்தில் உள்ள ஆண்களை எல்லாம்  கடத்திவிட்டு அங்குள்ள பெண்களை கற்பழித்திருக்கிறார்கள். ராணுவத்தினர்   மீதும், காவல் அதிகாரிகள்  மீதும் இப்படி கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் உண்டு.
காஷ்மீரில் ஒரே புதைகுழியில் 900 பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 
அரசின் உதவியில்லாமல் இதெல்லாம் செய்ய முடியாது. எவ்வித நடவடிக்கையும் இல்லை. 
இம் மாநிலத்தில்தான் இறந்தவர் யார் என்று கூட கண்டுபிடிக்க முடியாது.  இங்கு இன்று வரை 12000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.  இங்கு "காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பு" என்று ஒரு  இயக்கம் இருக்கிறது என்றால் நிலைமையை யூகித்துக்கொள்ளுங்கள்.
குரூரமான ராணுவக் கெடுபிடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில்தான் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
2009 ல் நிலோபர், ஆயிஷா இருவரும் பாதுகாப்பு படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டார்கள். இன்றுவரை குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகளை  ஐ.நாவில் எடுத்து வைக்கப்படும் போது, காஷ்மீரில் நடக்கும் கொலைகளை விசாரிக்கவும், அறிக்கைகளை வெளியிடவும் ஒரு தனி அதிகாரியை ஐக்கிய நாடுகள் அவை நியமித்தது.  இந்த அதிகாரி பொறுப்பில் இருந்த கிறிஸ்தோப் ஹெய்ன்ஸ் தனது ஆய்வு அறிக்கையில் என்ன கூறினார் என்றால், "காஷ்மீரில் செயலில் இருக்கும் ஆயுதந்தாங்கிய படைகளின் சிறப்பு அதிகாரம் (AFSPA) மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பிடுங்கிக் கொள்கிறது. மக்களின் “RIGHT TO LIFE” உயிர் வாழும் உரிமையை முற்றாக மறுத்துவிடுகின்றது. ஜனநாயக நாடு எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு நாட்டில் இதற்கு எந்த வேலையுமில்லை. இந்த சட்டத்தை நீக்குவதன்  மூலம் அரசு மக்களின் வாழும் உரிமையை மதிக்கின்றது என்ற செய்தியை மக்கள் மனதில் நிலைபெறச் செய்யலாம்" எனக் கூறியுள்ளார். (ஆதாரம்: THE HINDU March 31, 2012)
எந்த அறிக்கையையும் கண்டு கொள்ளாத அரசு இந்த அறிக்கையையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.
காஷ்மீர் மாநிலம் மத ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது.  காஷ்மீரிகளை எதிரிகளாகவும், அவர்களை அழித்தால்தான்  தன் நாட்டிற்கு நன்மை  என்று உளவியல் ரீதியாக அவர்கள் மாற்றப்பட்டுவிட்டார்கள்.  
அதனால்தான் 8 வயது குழந்தையை சிதைத்துக் கொன்றவர்களுக்கு ஆதரவாக அணி திரள்கிறது,  அங்குள்ள நீதிமன்ற அமைப்புகளும், இந்து ஏக்தா மஞ்சு என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பும். இவர்கள்   நடத்திய  போராட்டத்தில்   வனத்துறை,     தொழில்துறை  அமைச்சர்களும்           பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு புதிய செய்திகள்.  இதற்கெல்லாம் அங்குள்ள  ஆயுதப் படையின் அத்துமீறல்களும், அங்கு நடைபெறும்  அரசியல் சூழ்ச்சிகளும்தான் காரணம் என்பதை உணர்ந்தால்தான் இப்பேர்ப்பட்ட தன்மைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற முடியும்.


உலகிலேயே மிகப் பெரிய வன்முறை எது தெரியுமா? திருப்பித் தாக்க முடியாதவனின் மீது செலுத்தப்படும் வன்முறை தான். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை அத்தகையது. 10 பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது கும்பல் மனப்பான்மை தரும் துணிச்சல்தானே தவிர, உண்மையில் அது மிகப்பெரும் கோழைத்தனம், வன்முறையின் உச்சம். அதைவிடக் கொடுமையான வன்முறை, பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது. இதையே நாம் கொடுமை என்றால், துள்ளி விளையாடும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை மனிதர்களாகவேனும் கருத முடியுமா? ஆனால், அத்தகைய மனித மிருகங்களாகத்தான் இந்துத்துவ சக்திகள் இந்த மண்ணில் நடமாடுகின்றன. சிறுமி ஆசிஃபா-வை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்கள் செய்த இந்துத்துவ - பாஜக சக்திகள் வாழும் இந்த நாட்டில், இனி சிறுபான்மையினரும், பெண்களும் பாதுகாப்பாக வாழ முடியுமா?
இத் தன்மையை உணர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். சிடமிருந்தும், சங் பரிவார் கும்பலிடமிருந்து விலகிட வேண்டும்.

இறுதியாக ஜோன்  லிண்டன் எழுதிய வேதனைக் கவிதையின் கடைசிப் பகுதியை மட்டும் உங்களுக்கு படித்துக் காட்டி முடிக்கிறேன் தோழர்களே! 

இரவெலலாம் கனவுகளில்
வந்து போகிறாள் ஆசிஃபா.
முக்காடிடவும், முழங்காலிடவும், 
கன்னத்தில் போட்டுக் கொள்ளவும்
அருவருப்பாய் உணர்கிறது உடல்.
ஊதுபத்தியிலும், கற்பூரத்திலும்,
மெழுகுவத்தியிலும்மணக்கிறது 
ஆசிஃபாவின் குருதி வாசனை.
மந்திரங்களில் ஒலிக்கிறது
அவளது அலறல்.
பிரசாதமாய்க் கிடக்கிறது
அவளது உடல்.


நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்! 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR