தினம் ஒரு கருத்து
வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Wednesday, November 28, 2018
Sunday, November 25, 2018
AUAB - தஞ்சை.
வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்
===================================
தஞ்சை மேரிஸ் கார்னர்26-11-18 மாலை 4 to 6
நமது மாநிலத் தலைவர்
தோழர். P. காமராஜ் பேசுகிறார்.
திரளாய் வருக தோழர்களே!
Saturday, November 24, 2018
Thursday, November 15, 2018
14-11-18 அன்று தஞ்சையில் நடைபெற்ற கோரிக்கைப் பேரணி மற்றும்
பொது மேலாளரிடம் மனு கொடுத்தல் நிகழ்ச்சி.
============================
300 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள்,
ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள்
பேரணியில் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டார்கள்.
இறுதியில் GM அலுவலக வாயிலில் கோரிக்கை விளக்கம் நடைபெற்றது. பின் GM மிடம் மனு கொடுக்கப்பட்டது.
பேரணி காட்சிகள்:
Tuesday, November 13, 2018
கோரிக்கை முழக்கமிட்டு
கொள்கைப் படையாய் அணிவகுப்போம்!
வேண்டுகோள் மனு கொடுத்து
வெற்றிக்கு வழிவகுப்போம்!
========================================
14-11-18பேரணி முழக்கம்
===============
மோடி அரசே பதில் சொல்லு!
=============================
2017 முதலாக
தர வேண்டிய சம்பள மாற்றம்
ஆண்டு இரண்டு முடியும் வரை
அலட்சியம் காட்டுதல் எதற்காக?
வளர வேண்டிய BSNL ஐ
தளர வைக்கும் எண்ணமா!
மத்திய அரசே! பதில் சொல்லு!
10 நாட்கள் முன்னதாக
30 லட்சம் ரூபாயில்
துவங்கப்பட்ட ரிலையன்ஸ்க்கு
ரபேல் விமான ஒப்பந்தம்
செய்யப்பட்டது எதற்காக?
தனியாரை கொழுக்க வைத்து
கமிஷன் காசு பாக்கவா!
மத்திய அரசே! பதில் சொல்லு!
பொதுத்துறை HAL ஐ
புறக்கணிப்பு செய்து விட்டு
தனியார் துறை ரிலையன்ஸுக்கு
ரபேலை அளித்த மர்மம் என்ன?
தேசத்தை நாசம் செய்யும்
தேசபக்தி தேவைதானா?
மத்திய அரசே! பதில் சொல்லு!
200 கோடி ரூபாயில்
துவங்கப்பட்ட தொலைத் தொடர்பு
பல லட்சம் கோடி மதிப்பில்
உயர்ந்தது இன்று யாராலே!
காட்டில், மேட்டில் பணியில் உழைத்து
கஷ்டப்பட்ட தொழிலாளிகள்,
அசுரவேக தொழில்நுட்பத்தை
அடக்கியாண்ட அதிகாரிகள்,
உழைப்பால் என்பதை உணர்ந்து கொள்!
பொதுத்துறையின் சிகரமாய்
உயர்ந்து நிற்கும்BSNL க்கு
4 ஜி வசதி தர முடியாத மத்திய அரசே!
தனியார் நிறுவனம் ரிலையன்ஸ்க்கு
5 ஜி அளிக்கும் மர்மம் என்ன!
3000 கோடியில் சிலையைச் செய்து
தம்பட்டம் அடிக்கும் மத்திய அரசே!
ஆயிரம் கோடியில் அலைக்கற்றையை
அளிக்க உன்னால் முடியாதா!
மத்திய அரசே! பதில் சொல்லு!
உழைத்துக் களைத்து ஓய்வு பெற்ற
எங்கள் அருமைத் தோழர்களுக்கு
பென்சன் மாற்றம் தருவதில்
பாரபட்சம் தேவைதானா!
நேர்மையான எங்களது
கோரிக்கையின் நியாயத்தை
உணர்ந்து கொள்! புரிந்து கொள்!
மத்திய அரசின் அலட்சியப் போக்கால்,
பொது வெளியில் போராடுகின்றோம்!
உழைக்கும் வர்க்க தொழிலாளி
ஓரணியில் திரண்டு நின்று
பேரணியில் கேட்கிறான்
மத்திய அரசே! மோடி அரசே!
ஒப்புக்கொண்ட கோரிக்கையை
உடனடியாக நிறைவேற்று.
Monday, November 12, 2018
NFTE - BSNL
தஞ்சை மாவட்டம்
===========================
பொதுத் துறையை ஆலயமாய் பாதுகாத்த
ஜவஹர்லால் பிறந்த நாளில்
மாபெரும் உரிமைப் பேரணி
=========================================
14-11-2018 மதியம் 3 மணிக்கு
ரெட் க்ராஸ் ரவுண்டானா கணபதி நகர்
துவங்கி
GM அலுவலகத்தில் நிறைவுறும்.
========================================
தலைமை:
R. ராஜேந்திரன், தலைவர், AUAB / தஞ்சை.
கிளை செயலர்கள் கவனத்திற்கு:
அவரவர் கிளையின் பேனருடன்
செங்கொடி தாங்கி வரவேண்டும்.
Friday, November 9, 2018
Thursday, November 8, 2018
தேசிய இனங்களின் அவமானம்
‘ஸ்டேட்டுக்கே ஒப்பு யூனிட்டி’
- நான்கரை ஆண்டுகளாக மோடி ஆட்சியின் மொத்த அசிங்கமும் ஒன்று திரண்டால் எப்படி காட்சியளிக்குமோ, அப்படித்தான் காட்சி அளிக்கின்றது வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் சிலை. இந்த சிலை வருங்கால இந்திய வரலாற்றில், அவனது அதிகாரத் திமிரைக் காட்ட கட்டப்பட்ட கட்டுமானமாகவே பார்க்கப்படும். ரோமாபுரி பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் கதை இனி வரலாற்றில் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இந்தியா திவாலாகிக் கொண்டு இருக்கும் போதும் 3000 கோடிக்கு சிலைவைத்த மோடியின் கதை இனி பேசப்படும். இந்த சிலை வைத்ததன் மூலம் மோடி வரலாற்றில் தோன்றிய மோசமான அரசியல்வாதிகளின் வரிசையில் அழியாத இடத்தை பிடித்துக் கொண்டுவிட்டார்.
உலகில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 7 கோடியே 2 லட்சம் மக்கள் மிக மோசமான வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 38 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்பநலம் மற்றும் சுகாதார அமைப்பு (National Family and Health Survey) மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட ஏழைத்தாயின் மகனுக்கு நேரமுமில்லை, மனமுமில்லை.
அவரது எண்ணம் சொல், செயல், சிந்தனை என அனைத்தும் பார்ப்பன பாசிசத்தாலும் கார்ப்ரேட் அடிவருடித்தனத்தாலும் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் தன்னுடைய கனவுகளில் வரும் ஏழைகளின் பிச்சைப் பாத்திரங்களைக் கூட பிடுங்கி இரும்பு மனிதனின் சிலைக்காக கொடுத்திருக்கின்றார். அப்படி வல்லபாய் பட்டேலின் மீது மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் அளப்பறிய மரியாதை வர என்ன காரணம்?. அது அவர் காந்தி கொலையில் மூளையாக செயல்பட்டதால் ஏற்பட்ட மரியாதையாக இருக்கலாம், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்படி காஷ்மீரை ஆண்ட இந்து மன்னரை ஒப்புக் கொள்ள வைக்க பட்டேல் மோடியின் சித்தாந்த ஆசானான கோல்வால்கருக்குக் கடிதம் எழுதி உதவி கேட்டது. ஒருவேளை பட்டேலின் அந்தப் பணிவாக கூட இருக்கலாம்.
ஆனால் காரணங்கள் எதுவானாலும் இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பு யூனிட்டி’யால் இந்தியா என்ற நாட்டை வரும் காலங்களில் ஒற்றுமையாக வைத்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்திய ஆளும் வர்க்கம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஏற்படுத்தி இருக்கும் சமச்சீரற்ற வளர்ச்சியும், பார்ப்பன பாசிசத்தால் திணிக்கப்படும் ஒற்றை பண்பாட்டுத் திணிப்பும், வடகிழக்கு மாநிலங்களில் குமுறி எழுந்து கொண்டிருக்கும் தேசிய இனப் போராட்டங்களும், இந்திய அரசின் ராணுவ அத்துமீறல்களும் இந்த நாட்டை இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் கூடிய விரைவில் துண்டு துண்டாக உடைக்கத்தான் போகின்றது. எனவே ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் ‘அகண்ட இந்து நாடு’ என்ற கனவு ஒரு பழம் கனவாக மாறி, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும் நாள் கூடிய விரைவில் வரத்தான் போகின்றது. அந்த அச்சத்தின் வெளிப்பாடாக கூட இந்த சிலையை நாம் பார்க்கலாம்.
நீங்கள் இனி இந்தியாவில் தினம் தினம் பட்டினியால் சாகும் மனிதர்களையும், உடுக்க உடையற்று, படுக்க இடமற்று விலங்குகளை விட கீழான நிலையில் வாழ நிர்பந்திக்கப்பட்ட மனிதர்களையும், மாடுகளைக் காக்க மனிதர்களைக் கொல்ல கையில் ஆயுதங்களுடன் ரத்தவெறியோடு செல்லும் மதவெறியர்களையும், நவீன இந்தியா பேண்டுவைத்த மலத்தை கையில் உறை கூட இல்லாமல் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களையும், பங்குச் சந்தை வாசலில் பணத்தை தொலைத்துவிட்டு ஒரே நாளில் பிச்சைக்காரனாக மாறிய பேராசைக்காரர்களையும், வறண்டு போன விவசாய நிலத்தில் தூக்குமாட்டியும், விஷம் குடித்தும் இறந்து கிடக்கும் விவசாயிகளையும், தெருத்தெருவாய் வேலை தேடி பாதம் தேய்ந்து ஓய்ந்து நடக்கும் இளைஞர்களையும், மிக எளிதாக வல்லபாய் பட்டேலின் சிலைமீது ஏறி நின்று பார்க்க முடியும். எல்லாவற்றிலும் தோற்று அம்மணமாய் நிற்கும் மோடியின் அருவருப்பு நிறைந்த ஆட்சியைக் காண உலகிலேயே மிகப் பெரிய இந்த சிலை பயன்படலாம். அசிங்கத்தை உயரத்தில் இருந்து பார்ப்பது எவ்வளவு அசிங்கமானது!
Tuesday, November 6, 2018
தீபாவளி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள். தீபாவளிப் பண்டிகை என்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான பண்டிகை. அவர்களோடு சேர்ந்து பெரியவர்களாகிய நாமும் கலக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி. உச்சநீதி மன்றம் 2 மணி நேரம்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது ஒரு நல்ல செய்தி. காற்று ஒரே நாளில் மாசடைவது என்பது தீபாவளிப் பண்டிகையின் போதுதான். அதை உணரச் செய்யும் முயற்சியாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டும்.
ஆனால், அதை எதிர்ப்பது, எதிர்கேள்வி கேட்பது, சிவகாசியில் பணியாற்றும் தொழிலாளிகள் வாழ்வாதாரம் என்னாகும் என்பதெல்லாம் சமூக அக்கறையில்லாதவர்கள் கேள்வி. அதை check செய்வது, நடவடிக்கை எடுப்பது என்பதெல்லாம் நடக்கிற காரியமா, நமது மக்கள் அதற்கெல்லாம் கட்டுப்படுவார்களா! இதையெல்லாமும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
டாஸ்மாக் கூடாது என்றால் அங்குள்ள பணியாளர்கள் என்னாவார்கள் என்று கேட்டால் சரியா! மாற்று ஏற்பாடு செய்துதான் ஆகவேண்டும். அது போல்தான் பட்டாசுத் தொழிலாளிக்கும்.
மீத்தேன் எடுத்தால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாகும் என்றால் அதை நிறுத்தித்தானே ஆக வேண்டும். அதனால் அந்த வெளிநாட்டுக்கு கம்பெனிக்கு 50000 கோடி வருமானம். நம் நாட்டுக்கு 5000 கோடி கிடைக்கும். (கிடைக்குமா?). இந்த 5000 கோடிக்காக ஒரு மாவட்டத்தை அழிக்க முடியுமா! (அதில் அரசியல் வாதிக்கு கிடைக்கபோவது கிடைக்காமல் போகுமே என்பதுதான் பாய்ண்ட்.) 5000 கோடி வருமானத்தை வேறு வழிகளில் நம்மால் ஈட்ட முடியும். அப்படியில்லாவிட்டாலும் நம்மால் சமாளிக்க முடியும் என்பதே எதார்த்தம். ஆனாலும் அதை உறுதியாக செயல்படுத்த ஆட்சியாளர்கள் முனைகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்.
பொறுப்பில்லாத சொந்தக் கட்சிக்காரர்களும், இதை எதிர்க்கும் போராட்ட சக்திகளுக்கு பொதுமக்களின் ஆதரவுக் கரம் இன்னும் கூடுதலாக நீளவில்லை என்பதும்தானே காரணம்.
சரி. இனி நாம் வாழ்த்துக்களோடு, நல்ல செய்திகளையும் பரிமாறுவோம். நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்.
வாழ்த்துக்களுடன்,
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
Saturday, November 3, 2018
NFTE -BSNL மற்றும் TMTCLU
தஞ்சை மாவட்டம்.
வாழ்த்து, பாராட்டு, மகிழ்ச்சி!
============================
அன்புத் தோழர்களே! தோழியர்களே!!
அனைவருக்கும் வணக்கம்! தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களை இரு சங்கங்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆண்டு தீபாவளியை, ஒப்பந்தத் தொழிலாளியும் நல்ல முறையில் கொண்டாடுவார் என்பது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 8.33 சதவீதம் போனஸ் கிடைத்ததுதான். தஞ்சை மாவட்டத்தில் 95 சதவீத தோழர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டதும் நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது.
இது கிடைக்க உதவியவர்களை, இதற்காக போராடியவர்களை, உடல் உழைப்பு, பொருட்செலவைப் பொருட்படுத்தாது அலைந்தவர்களை, இட்ட கட்டளையை ஏற்று இயக்கம் கண்டவர்களை நெஞ்சார வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!
அனைத்து ஒப்பந்ததாரரையும் வரவழைத்து, சளைக்காமல், களைக்காமல் நமக்காக பேசி,
கோரிக்கை நிறைவு பெற பெரிதும் ஒத்துழைத்த நமது முதன்மைப் பொது மேலாளர் திரு. C.V. வினோத் ITS அவர்களை வணங்குகிறோம்! பாராட்டி மகிழ்கிறோம்!
மாநிலத்திலேயே முதலாவதாக 7000 ரூபாயை ஒரே தவணையாக அளித்து தஞ்சை - குடந்தை மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்த ஒப்பந்ததாரர் திரு. சாமிஅய்யா அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.
பட்டுக்கோட்டை ஒப்பந்ததாரர் ஸ்ரீ செக்யூரிட்டி ராமச்சந்திரன் அவர்களை சந்திக்க திருச்சிக்கு சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி 9 மாத போனஸைப் பெற்று வெற்றியுடன் திரும்பி வந்தோம். இந்த முயற்சியில் ஈடுபட்ட NFTE மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன், TMTCLU செயலர் கலைச்செல்வன், பட்டுக்கோட்டை கிளைச் செயலர் தோழர். செல்வகுமார், மன்னை கிளைச்செயலர் தோழர். மோகன், ஸ்ரீ செக்யூரிட்டி சூப்பர்வைசர் பாண்டியன் ஆகியோரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
காசாங்காடு இறுதிச் சடங்குக்குக்காக ரூபாய் 3,500 ஐ திருச்சியில் சந்தித்தபோது ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் அவர்கள் தந்தார். அவர் சார்பாக முருகேசன் இறந்தபோது கொடுத்த, தோழர். செல்வகுமார் அதை பெற்றுக் கொண்டார். அவருக்கு நமது நன்றியும், பாராட்டும்.
=============================================
கிளைப் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு:
இந்தாண்டு கடும் முயற்சிகள் மேற்கொண்டுதான் போனஸ் பெற்றிருக்கிறோம். ஒப்பந்தத் தொழிலாளியிடம் சங்கத்திற்கு சந்தாவும், போனஸ் நன்கொடையும் பெற்றுத் தர வேண்டுகிறோம்.
=============================================
நன்றி தோழர்களே!
மீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
கே. கிள்ளிவளவன் - டி. கலைச்செல்வன்.
உன் வலி உணரா உழைக்கும் தோழா!
ஓரணி சேர்ந்தால் உலகம் நமதே!!
Friday, November 2, 2018
DOT செயலருடன் சந்திப்பு
தொலைத்தொடர்புத்துறை செயலரின் அழைப்பை ஏற்று
02.11.2018 இன்று மாலை 5 மணிக்கு
BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள்
DOT செயலரைச் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
பேச்சுவார்த்தையின் விளைவுகள் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.
Subscribe to:
Posts (Atom)