தீபாவளி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள். தீபாவளிப் பண்டிகை என்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான பண்டிகை. அவர்களோடு சேர்ந்து பெரியவர்களாகிய நாமும் கலக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி. உச்சநீதி மன்றம் 2 மணி நேரம்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது ஒரு நல்ல செய்தி. காற்று ஒரே நாளில் மாசடைவது என்பது தீபாவளிப் பண்டிகையின் போதுதான். அதை உணரச் செய்யும் முயற்சியாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டும்.
ஆனால், அதை எதிர்ப்பது, எதிர்கேள்வி கேட்பது, சிவகாசியில் பணியாற்றும் தொழிலாளிகள் வாழ்வாதாரம் என்னாகும் என்பதெல்லாம் சமூக அக்கறையில்லாதவர்கள் கேள்வி. அதை check செய்வது, நடவடிக்கை எடுப்பது என்பதெல்லாம் நடக்கிற காரியமா, நமது மக்கள் அதற்கெல்லாம் கட்டுப்படுவார்களா! இதையெல்லாமும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
டாஸ்மாக் கூடாது என்றால் அங்குள்ள பணியாளர்கள் என்னாவார்கள் என்று கேட்டால் சரியா! மாற்று ஏற்பாடு செய்துதான் ஆகவேண்டும். அது போல்தான் பட்டாசுத் தொழிலாளிக்கும்.
மீத்தேன் எடுத்தால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாகும் என்றால் அதை நிறுத்தித்தானே ஆக வேண்டும். அதனால் அந்த வெளிநாட்டுக்கு கம்பெனிக்கு 50000 கோடி வருமானம். நம் நாட்டுக்கு 5000 கோடி கிடைக்கும். (கிடைக்குமா?). இந்த 5000 கோடிக்காக ஒரு மாவட்டத்தை அழிக்க முடியுமா! (அதில் அரசியல் வாதிக்கு கிடைக்கபோவது கிடைக்காமல் போகுமே என்பதுதான் பாய்ண்ட்.) 5000 கோடி வருமானத்தை வேறு வழிகளில் நம்மால் ஈட்ட முடியும். அப்படியில்லாவிட்டாலும் நம்மால் சமாளிக்க முடியும் என்பதே எதார்த்தம். ஆனாலும் அதை உறுதியாக செயல்படுத்த ஆட்சியாளர்கள் முனைகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்.
பொறுப்பில்லாத சொந்தக் கட்சிக்காரர்களும், இதை எதிர்க்கும் போராட்ட சக்திகளுக்கு பொதுமக்களின் ஆதரவுக் கரம் இன்னும் கூடுதலாக நீளவில்லை என்பதும்தானே காரணம்.
சரி. இனி நாம் வாழ்த்துக்களோடு, நல்ல செய்திகளையும் பரிமாறுவோம். நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்.
வாழ்த்துக்களுடன்,
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment